இலங்கை சுதந்திரக் கட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இலங்கை சுதந்திரக் கட்சி
Sri Lanka Freedom Party
ශ්‍රී ලංකා නිදහස් පක්‍ෂය
தலைவர்மைத்திரிபால சிறிசேன
செயலாளர் நாயகம்தயசிரி ஜயசேகர[1]
நிறுவனர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
தொடக்கம்2 செப்டம்பர் 1951 (73 ஆண்டுகள் முன்னர்) (1951-09-02)
முன்னர்சிங்கள மகா சபை
தலைமையகம்307, டி. பி. ஜயா மாவத்தை, கொழும்பு 10
செய்தி ஏடுசிங்களே, தினகரா
இளைஞர் அமைப்புஇ.சு.க. இளைஞர் குன்னணி
கொள்கைசமூக மக்களாட்சி[2][3][4]
சிங்கள பௌத்த தேசியம்
அரசியல் நிலைப்பாடுநடுநிலை-இடதுசாரி
தேசியக் கூட்டணிமகாஜன எக்சத் பெரமுன
(1956 - 1959)
மக்கள் கூட்டணி
(1994 – 2004)
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
(2004 – 2019)
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு
(2019 - இன்று)
நிறங்கள்     நீலம்
நாடாளுமன்றம்
15 / 225
மாகாணசபைகள்
269 / 417
உள்ளாட்சி சபைகள்
9 / 340
தேர்தல் சின்னம்
கை
Sri Lanka Freedom Party election symbol.png
இணையதளம்
www.slfp.lk

இலங்கை சுதந்திரக் கட்சி (Sri Lanka Freedom Party; ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය) இலங்கையின் பிரதான அரசியற் கட்சிகளுள் ஒன்றாகும். இது 1951 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கவால் தொடங்கப்பட்டது. அப்பொழுதிலிருந்து இலங்கையின் பிரதான இரு அரசியற் கட்சிகளுள் ஒன்றாக இருந்து வந்தது. முதல் முறையாக 1956 இல் ஆட்சியமைத்தது அது முதல் பல முறைகளில் ஆட்சி அமைத்துள்ளது. இ.சு.க புரட்சியற்ற சோசலிச கொள்கையை கைப்பிடித்ததோடு சோசலிச நாடுகளுடன் மிக நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தது.

ஏப்ரல் 2 2004 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னணிவகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முதன்மை கட்சியாக காணப்பட்டது. இதன்போது 45.6% வாக்குகளைப் பெற்று மொத்த 225 ஆசனங்களில் 105 ஆசனாங்களை கைப்பற்றியது. மேலும் இலங்கை சனாதிபதி தேர்தல், 2005 இல் இ.சு.க. வேட்பாளர் மகிந்த ராஜபக்ச 50.3% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

ஆரம்பம்

இ.சு.க. 1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபையின் வளர்சியில் தோன்றிய கட்சியாகும். சிங்கள மகா சபையானது 1945 பொதுத் தேர்தல் வரை ஐக்கிய தேசியக் கட்சியை (ஐ.தே.க.) ஆதரித்து வந்தது. ஐ.தே.க. ஆட்சியில் பண்டாரநாயக்காவுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை. என்ற காரணமும் சிங்கள மகா சபைக்கு காணப்பட்டது. டி. எஸ். சேனநாயக்கா தனது ஆஸ்த்ரேலியா சுற்றுப் பயணத்தின் போது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கு அக்கட்சியில் பிரதமர் பதவியை கொடுக்க மறுத்ததை காரணம் காட்டி 1951 இல் ஐ.தே.க.வுக்கான தனது ஆதரவை விலக்கி கொண்டு பண்டார நாயக்கா வெளியேறினார். பின்பு 1951இல் பண்டாரநாயக்கா சிங்கள மகா சபையை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றியமைத்தார். அவர் அமைத்த புதிய கட்சிக்கு இலங்கை சுதந்திர கட்சி என்று பெயர் இட்டார். அதன் கொள்கை சோசியலிசம் சமூக சனநாயகம் என்று சமூக வழி கொள்கை என்றாலும் அதன் அடிப்படை சித்தாந்தம் அக்கட்சியின் தலைவர் பண்டார நாயக்கா ஆரம்ப காலத்தில் சிங்கள மகா சபையின் தீவிர சிங்கள தேசியவாதமும், புத்த மதவாதத்தையுமே சார்ந்து இருந்தது. இக்கொள்கை சட்டமானதால் சிங்கள பிரஜைகளுக்கு சாதகமாகவும், சலுகையாகவும் இருந்தாலும். இலங்கை வாழ் தமிழ் பிரஜைகளுக்கு இடையே இன்று வரை தீராத இனவாத பிரச்சனையாக மாறியது.

தேர்தல் வரலாறு

நாடாளுமன்றத் தேர்தல்கள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள்
தேர்தல் ஆண்டு வாக்குகள் வாக்கு % வென்ற இருக்கைகள் +/– கட்சி முடிவுகள்
1952 361,250 15.52%
9 / 95
Straight Line Steady.svg.png 9 எதிரணி
1956 1,046,277 39.52%
51 / 95
Green Arrow Up Darker.svg.png 42 அரசு
1960 (மார்ச்) 647,175 21.28%
46 / 151
Red Arrow Down.svg.png 5 எதிரணி
1960 (சூலை) 1,022,171 33.22%
75 / 151
Green Arrow Up Darker.svg.png 29 அரசு
1965 1,221,437 30.18%
41 / 151
Red Arrow Down.svg.png 34 எதிரணி
1970 1,839,979 36.86%
91 / 151
Green Arrow Up Darker.svg.png 50 அரசு
1977 1,855,331 29.72%
8 / 168
Red Arrow Down.svg.png 83 எதிரணி
1989 1,780,599 31.8%
67 / 225
Green Arrow Up Darker.svg.png 59 எதிரணி
1994 3,887,823 48.94%
105 / 225
Green Arrow Up Darker.svg.png 38 அரசு [lower-alpha 1]
2000 3,900,901 45.11%
107 / 225
Green Arrow Up Darker.svg.png 2 அரசு [lower-alpha 2]
2001 3,330,815 37.19%
77 / 225
Red Arrow Down.svg.png 30 எதிரணி
2004 4,223,970 45.60%
105 / 225
Green Arrow Up Darker.svg.png 28 அரசு [lower-alpha 3]
2010 4,846,388 60.33%
144 / 225
Green Arrow Up Darker.svg.png 39 அரசு[lower-alpha 4] 2010-2015
எதிரணி 2015[5]
2015 4,732,664 42.38%
95 / 225
Red Arrow Down.svg.png 49 அரசு/எதிரணி [lower-alpha 5] 2015-2018
எதிரணி 2018-[6]

அரசுத்தலைவர் தேர்தல்கள்

இலங்கை அரசுத்தலைவர் தேர்தல்கள்
தேர்தல் ஆண்டு வேட்பாளர் வாக்குகள் வாக்கு % முடிவு
1982 எக்டர் கொப்பேகடுவ 2,548,438 39.07% தோல்வி
1988 சிறிமாவோ பண்டாரநாயக்கா 2,289,860 44.95% தோல்வி
1994 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 4,709,205 62.28% வெற்றி [lower-alpha 6]
1999 சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 4,312,157 51.12% வெற்றி [lower-alpha 7]
2005 மகிந்த ராசபக்ச 4,887,152 50.29% வெற்றி [lower-alpha 8]
2010 மகிந்த ராசபக்ச 6,015,934 57.88% வெற்றி [lower-alpha 9]
2015 மகிந்த ராசபக்ச 5,768,090 47.58% தோல்வி [lower-alpha 10] [lower-alpha 11]

குறிப்புகள்

  1. மக்கள் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி
  2. மக்கள் கூட்டணியுடன் இணைந்து ஆட்சி
  3. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து ஆட்சி
  4. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து ஆட்சி
  5. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடனும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இணைப்பாட்சியுடனும்
  6. மக்கள் கூட்டணியுடன் இணைந்து
  7. மக்கள் கூட்டணியுடன் இணைந்து
  8. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து
  9. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து
  10. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியுடன் இணைந்து
  11. மகிந்த ராசபக்ச இத்தேர்தலில் தோற்றாலும், இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, சுதந்திரக் கட்சியின் தலைவரானார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இலங்கை_சுதந்திரக்_கட்சி&oldid=25230" இருந்து மீள்விக்கப்பட்டது