ம. இராமேசுவரன்
எம். ராமேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகத்து 2020 | |
நுவரெலியா மாவட்டத்திற்கான மத்திய மாகாணசபை உறுப்பினர் | |
பதவியில் 2009–2018 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 26 திசம்பர் 1976 |
அரசியல் கட்சி | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் |
பிற அரசியல் சார்புகள் |
இலங்கை பொதுசன முன்னணி |
மருதபாண்டி இராமேசுவரன் (Marudapandy Rameshwaran, பிறப்பு: 26 திசம்பர் 1976) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதி ஆவார்.[1]
இராமேசுவரன் 1976 திசம்பர் 26 இல் பிறந்தார்.[1] இவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் இருந்தவர்.[2] இவர் 2009, 2013 மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராக இருந்தார். அத்துடன் மத்திய மாகாணசபையில் பல அமைச்சரவைப் பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.[2] இவர் 2017 திசம்பரில் மசுக்கெலியாவில் தொழிலாளர் தேசிய சங்க ஆதரவாளர் ஒருவரைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[3][4][5]
இராமேசுவரன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இலங்கை பொதுசன முன்னணியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2009 மாகாணசபை[9] | நுவரெலியா மாவட்டம் | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | தெரிவு | |||
2013 மாகாணசபை[10] | நுவரெலியா மாவட்டம் | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | தெரிவு | |||
2020 நாடாளுமன்றம்[7] | நுவரெலியா மாவட்டம் | இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் | இலங்கை பொதுசன முன்னணி | தெரிவு |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Directory of Members: Marudapandy Rameshwaran". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 13 August 2020.
- ↑ 2.0 2.1 "Get to know your new parliamentarians". Sunday Times. 9 August 2020. http://www.sundaytimes.lk/200809/news/get-to-know-your-new-parliamentarians-411739.html. பார்த்த நாள்: 11 August 2020.
- ↑ Rajapakse, Ranjith (12 December 2017). "Alleged attack on NUW supporter: Court orders arrest of Thondaman’s son". Daily Mirror. http://www.dailymirror.lk/article/Alleged-attack-on-NUW-supporter-Court-orders-arrest-of-Thondaman-s-son-142029.html. பார்த்த நாள்: 14 August 2020.
- ↑ Kuruluwansa, Asela (12 December 2017). "Assault suspects granted bail". Daily News. http://www.dailynews.lk/2017/12/12/local/137072/assault-suspects-granted-bail?page=70. பார்த்த நாள்: 14 August 2020.
- ↑ "Ccentral Province Minister M Rameshwaran arrested". Hiru News. 11 December 2017. https://www.hirunews.lk/english/178106/central-province-minister-m-rameshwaran-arrested. பார்த்த நாள்: 14 August 2020.
- ↑
- ↑ 7.0 7.1 "General Election 2020: Preferential votes of Nuwara Eliya District". Ceylon Today. 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094554/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-nuwara-eliya-district. பார்த்த நாள்: 13 August 2020.
- ↑ Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer. http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 13 August 2020.
- ↑ "Preferences Nuwara Eliya" (PDF). Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 1. Archived from the original (PDF) on 10 December 2009.
- ↑ "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 – Results and preferential votes: Central Province". Daily Mirror. 25 September 2013. http://www.dailymirror.lk/article/provincial-council-elections-2013-results-and-preferential-votes-central-province-36076.html. பார்த்த நாள்: 14 August 2020.
- 1976 பிறப்புகள்
- இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசியல்வாதிகள்
- இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கை பொதுசன முன்னணி அரசியல்வாதிகள்
- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசியல்வாதிகள்
- இலங்கை மாகாண சபை அமைச்சர்கள்
- மத்திய மாகாண சபை உறுப்பினர்கள்
- நுவரெலியா மாவட்ட நபர்கள்