ச. கனகரத்தினம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சதாசிவம் கனகரத்தினம்
S. Kanagaratnam
வன்னி மாவட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
2004–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 திசம்பர் 1946 (1946-12-28) (அகவை 77)
நல்லூர், இலங்கை
தேசியம்இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சதாசிவம் கனகரத்தினம் (Sathasivam Kanagaratnam, பிறப்பு: 28 டிசம்பர் 1946) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கையும் குடும்பமும்

கனகரத்தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.[1][2] செங்குந்தா இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார்.[2] இவரது சகோதரர் செல்வநாயகம் (செல்லக்கிளி) விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் ஆவார். செல்லக்கிளி 1983 திருநெல்வேலித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.[2] கனகரத்தினத்திற்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.[2]

அரசியலில்

கனகரத்தினம் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைப் புலிகளால் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு,[3] இவர் 30,390 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4]

ஈழப்போரின் நிறைவுக் கட்டத்தில் கனகரத்தினமும், அவரது குடும்பமும் முள்ளிவாய்க்கால் பகுதியில் 300,000 இற்கும் அதிகமான பொது மக்களுடன் சேர்ந்து இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயத்தினுள் சிக்கியிருந்தனர்.[5] 2009 மே மாதம் போர் முடிவர்டைந்ததை அடுத்து இவர் காணாமல் போனார்.[6] இவர் பின்னர் காவல் துறையினரால் அகதி முகாமில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டு, கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டார்.[7][8] இவர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச உத்தரவின் பேரில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தமைக்காகத் தடுத்து வைக்கப்பட்டார்.[9][10][11] எட்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் 200 சனவரியில் 2010 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்சவிற்கு ஆதரவளிக்க வாக்குறுதி பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.[3][12][13] இவருக்கு வவுனியாவில் வடமாகான ஆளுனரின் வீட்டுத் திட்டத்தில் ஒரு வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டார்.[14][15]

கனகரத்தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் சேர்ந்தார்.[16] 2010 நாடாளுமன்ரத் தேர்தலில் ஐமசுகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு 3,570 விருப்பு வாக்குகள் பெற்றுத் ஐமசுகூ வேட்பாளர்களில் ஆறாவதாக வந்து தோல்வியடைந்தார்.[17]

மேற்கோள்கள்

  1. "Directory of Past Members: Sathasivam Kanagaratnam". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/1451. 
  2. 2.0 2.1 2.2 2.3 Rajasingham, K. T. (19 ஏப்ரல் 2011). "Final days in Vanni: 600 Tamils shot and killed as stray dogs- First Person Revelation". ஏசியன் டிரிபியூன். http://www.asiantribune.com/news/2011/04/19/final-days-vanni-600-tamils-shot-and-killed-stray-dogs-first-person-revelation. 
  3. 3.0 3.1 டி. பி. எஸ். ஜெயராஜ் (3 ஏப்ரல் 2010). "Tamil National Alliance enters critical third phase-2". டெய்லிமிரர் இம் மூலத்தில் இருந்து 2010-05-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100516020551/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/7441.html. 
  4. "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf. 
  5. "TNA dissidents to give it tough fight". த நேசன். 28 பெப்ரவரி 2010 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303204037/http://www.nation.lk/2010/02/28/news4.htm. 
  6. "TNA MP missing in Vanni". தமிழ்நெட். 20 மே 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29419. 
  7. "Sri Lanka Police questions TNA MP". தமிழ்நெட். 23 மே 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29438. 
  8. "TNA in dilemma". த நேசன். 24 மே 2009 இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304031543/http://www.nation.lk/2009/05/24/news1.htm. 
  9. "TNA MP Kanagaretnam ordered further detention in Colombo court". தமிழ்நெட். 23 சூன் 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29635. 
  10. "Tamil MP arrested in Sri Lanka for LTTE links". என்டிடிவி. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 23 சூன் 2009 இம் மூலத்தில் இருந்து 2014-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141101205737/http://www.ndtv.com/article/world/tamil-mp-arrested-in-sri-lanka-for-ltte-links-5011. 
  11. "Tamil legislator arrested in Sri Lanka". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. இந்தோ-ஏசியன் நியூசு. 23 சூன் 2009. http://www.newindianexpress.com/world/article110942.ece. 
  12. "TNA MP Sathasivam Kanagaratnam released". தமிழ்நெட். 15 சனவரி 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31002. 
  13. Natarajan, Swaminathan (15 சனவரி 2010). "Detained Sri Lankan Tamil MP is released". பிபிசி. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8461995.stm. 
  14. "TNA says released MP forced to back MR". சண்டே டைம்சு. 17 சனவரி 2010. http://sundaytimes.lk/100117/News/nws_03.html. 
  15. "Missing MP Kanagaratnam in Vavuniya". த நேசன். 31 சனவரி 2010 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303230111/http://www.nation.lk/2010/01/31/news16.htm. 
  16. டி. பி. எஸ். ஜெயராஜ் (17 ஏப்ரல் 2010). "T.N.A. Performs creditably in parliamentary elections". டெய்லி மிரர் இம் மூலத்தில் இருந்து 2010-04-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100428064301/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/8325-tna-performs-creditably-in-parliamentary-elections.html. 
  17. "Parliamentary General Election - 2010 Vanni Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513035435/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Vanni_pref_GE2010.pdf. 
"https://tamilar.wiki/index.php?title=ச._கனகரத்தினம்&oldid=24259" இருந்து மீள்விக்கப்பட்டது