மயில்சாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மயில்சாமி
பிறப்புஆர். மயில்சாமி
2 அக்டோபர் 1965
சத்தியமங்கலம், பிரிக்கப்படாத கோயம்புத்தூர் மாவட்டம்,
சென்னை மாநிலம்
(தற்போது ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா
இறப்பு19 பெப்ரவரி 2023(2023-02-19) (அகவை 57)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகர், நகைச்சுவையாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985–2023
பிள்ளைகள்அன்பு (எ) அருமைநாயகம் (மகன்)
உறவினர்கள்கு. பிச்சாண்டி (சம்பந்தி)
ஐஸ்வர்யா (மருமகள்)

மயில்சாமி (Mayilsamy, 2 அக்டோபர் 1965 – 19 பிப்ரவரி 2023) என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? போன்றவற்றில் நடுவராகவும் பங்களித்துள்ளார்.[1] நான் அவனில்லை, நான் அவனில்லை 2, தூள் (திரைப்படம்), கில்லி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு மற்றும் திருவிளையாடல் ஆரம்பம் போன்ற பல படங்களின் மூலமாக புகழ்பெற்றார்.

துவக்க வாழ்க்கை

மயில்சாமி 1965 ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று சத்தியமங்கலத்தில் பிறந்தார். நடகராகும் ஆசையுடன் 1977இல் சென்னைக்கு வந்தார். ஒரு உணவகத்தில் பகுதி நேர வேலையில் சேர்ந்து, திரைப்பட வாய்ப்புகளைத் தேடினார். தாவணிக் கனவுகள் படத்தின் படப்பிடிப்பில் பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்டார். அவரிடம் தன் பலகுரல் திறமையைக் காட்டினார். ம. கோ. இராவின் குரலில் பேசிக்காட்டி அவரைக் கவர்ந்தார். அன்றைய நாளை அப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.[2] இரண்டாவதாக கன்னிராசி திரைப்படத்தில் கவுண்டமணியிடன் பேசி நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவ்வப்போது சில படங்களில் நடிக்கத் துவங்கினார்.

தொழில்

இந்நிலையில் 1987இல் மயில்சாமியும், இலட்சுமண் சுருதி இலட்சுமணனும் இணைந்து வெளியிட்ட "சிரிப்போ சிரிப்பு" பலகுரல் நகைச்சுவை ஒலிப்பேழை பெரிய வெற்றியை ஈட்டியது. இதன்பிறகு அடுத்து வந்த பத்தாண்டுகள் உள்ளூரில் பிரபலமாக இருந்த நகைச்சுவைக் குழுவுடன் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்தார்.

புத்தாயிரத்துக்குப் பிறகு விவேக்குடன் நடிகத் துவங்கியது இவரது திரைப்பட வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது. அதன்பிறகு இவரின் திறமை திரைப்படங்களில் பலவகையில் வெளிப்பட்டது. பின்னர் இவர் பிரபலமான தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் வலுவான துணைக் கதாபாத்திரங்களில் நடித்தார். மயில்சாமி ஒரு புகழ்பெற்ற மேடைக் கலைஞர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடகக் கலைஞர், தமிழ் தொலைக்காட்சி துறையில் ஒரு பன்முக ஆளுமையாக வலம் வந்தார். மயில்சாமி தமிழ் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் நடுவராகவும் அறிமுகமானார்.

தனிப்பட்ட வாழ்க்கை

2009 அக்டோபரில், மயில்சாமி தன் மகன் அருமைநாயகம் படங்களில் நடிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்து, அவருக்கு அன்பு என்ற திரைப் பெயரை வழங்கினார்.[3] 2011 ஆம் ஆண்டு ராசு மதுரவனின் பார்த்தோம் பழகினோம் திரைப்படத்தில் அன்பு அறிமுகமானார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோஷ்னா பெர்னாண்டோ நடித்தார் ஆனால் படம் வெளியான உடனேயே கிடப்பில் போடப்பட்டது.[4] அன்பு பின்னர் 2015 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ராஜசேகரின் அந்த 60 நாட்கள் திரைப்படத்தில் பணியாற்றத் தொடங்கினார், இது சந்திரிகாவுடன் இணைந்து நடித்த ஒரு கற்பனை நகைச்சுவை படம். ஆனால் அந்த படம் இறுதியில் வெளியாகவில்லை.[5] அதேபோல், 2015 இல் கைவிடபட்ட மற்றொரு திரைப்படம் கொக்கு ஆகும், இதில் பாப்ரி கோஷ் உடன் அன்பு நடிக்கவிருந்தார்.[6] 2017 ஆம் ஆண்டில், பிருந்தா மற்றும் நிஹாரிகாவுடன் இணைந்து வேதமணியின் திரிபுரம் மற்றும் சுரபி திவாரி மற்றும் கோஷாவுடன் இணைந்து நடித்த ஒரு பொம்மலாட்டம் நடக்குது ஆகியவற்றின் மூலம் நடிகராக அறிமுகமானார். ஆனால் இரண்டு படங்களிலும் முன்னேற்றமில்லை.[7][8] 2018 ஆம் ஆண்டில், எம். எப். உசைன் இயக்கிய அல்டி படத்தில் மனிஷா ஜித்துடன் நடித்தும், சிதம்பரம் ரயில்வே கேட் படத்தில் நீரஜாவுக்கு ஜோடியாக நடிக்கத் தொடங்கினார்.[9][10]

மறைவு

மயில்சாமி 19 பிப்ரவரி 2023 அன்று சென்னையில் அதிகாலை மாரடைப்பால் ஏற்பட்ட இதய நிறுத்தம் காரணமாக தனது 57 வயதில் இறந்தார்.

பிப்ரவரி 18 அன்று மாலை, சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள திரு மேகநாத ஈசுவரர் கோவிலில் நடந்த மகா சிவராத்திரி பூஜையில் மயில்சாமி கலந்து கொண்டார்.பின்னர் இரவு 11 மணியளவில் கோவிலில் சிறப்பு இசை நிகழ்ச்சியை நடத்த டிரம்ஸ் சிவமணியை அழைத்தார்.அதிகாலையில் கோவிலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவருக்கு மாரடைப்புஏற்பட்டது.அவரை ஆட்டோவில் ஏற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இதய நிறுத்தம் காரணமாக இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது இறுதிச் சடங்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது. பிப்ரவரி 20 அன்று வடபழநியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

திரையியல்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்பு

1984

தாவணிக் கனவுகள் கூட்டத்தில்
1985 கன்னிராசி சில்லறை விற்பனையாளரின் பணியாளர்
1988 என் தங்கச்சி படிச்சவ
1989 அபூர்வ சகோதரர்கள் கமலகாசனின் நண்பர்
வெற்றி விழா குஷ்புவின் சகோதரர் மயில்சாமி ருந்தினர் தோற்றம்
1990 பணக்காரன் தொழிற்சாலை தொழிலாளி
மைக்கேல் மதன காமராஜன் தீயணைப்பு வீரர் / ராஜுவின் நண்பர்
1991 ராசாத்தி வரும் நாள் பழனி
1991 என்னருகில் நீ இருந்தால்
1992 சின்ன கவுண்டர்
செந்தமிழ் பாட்டு
1993 உழைப்பாளி
உடன் பிறப்பு
வால்டர் வெற்றிவேல்
1994 டூயட்
1995 வில்லாதி வில்லன்
ஆசை
மனதிலே ஒரு பாட்டு மயிலு
1996 அவதார புருஷன்
சுந்தர புருஷன்
ஞானப்பழம் குடிப்பக உரிமையாளர்
டேக் இட் ஈசி ஊர்வசி
1997 சக்தி
வாய்மையே வெல்லும் மயில்சாமி
நேருக்கு நேர்
பெரிய மனுஷன்
1998 பொன்மனம்
இரத்னா
1999 ஹவுஸ்புல் பழங்குடி மனிதன்
நினைவிருக்கும் வரை
ஆனந்த பூங்காற்றே
முகம்
2000 ஏழையின் சிரிப்பில்
அன்னை
தை பொறந்தாச்சு 'நெற்றிக்கண்' நெற்குன்றம்
ஜேம்ஸ் பாண்டு
கண்ணன் வருவான்
பெண்ணின் மனதைத் தொட்டு
உன்னைக் கண் தேடுதே
கண்ணுக்கு கண்ணாக
பாளையத்து அம்மன்
சீனு
2001 லூட்டி ஜீவாவின் நண்பன்
நாகேஸ்வரி
உள்ளம் கொள்ளை போகுதே அன்புவின் நண்பர்
என் புருசன் குழந்தை மாதிரி டாக்டர் குயில்சாமி
லிட்டில் ஜான் பாலி
தில் கனகவேலின் நண்பர்
கண்டேன் சீதையை கூடுவாஞ்சேரி கோவிந்தசாமி
விஸ்வநாதன் ராமமூர்த்தி சிவகுமார்
வேதம்
12 பி சிட்டிசன்
ஆளவந்தான்
தவசி மோசடி பேர்வழி
பூவெல்லாம் உன் வாசம்
பார்த்தாலே பரவசம்
விண்ணுக்கும் மண்ணுக்கும் இணை இயக்குனர்
ஆண்டான் அடிமை
2002 விவரமான ஆளு மாரியப்பன்
உன்னை நினைத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் இணை இயக்குனர்
ஏப்ரல் மாதத்தில்
வருஷமெல்லாம் வசந்தம்
ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே
தென்காசிப்பட்டிணம்
ராஜா
நினைக்காத நாளில்லை மயில்சாமி
கார்மேகம்
மாறன்
2003 தூள் கொக்காகோ
வசீகரா
பல்லவன்
மிலிட்டரி
லேசா லேசா
ஜெயம்
விசில்
காதல் கிசு கிசு மயில்சாமி
2004 கண்களால் கைது செய் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசு திரைப்பட விருது
கில்லி கலங்கரை விளக்கம் நாராயணன்
சவுண்ட் பார்ட்டி
கிரி
2005 தேவதையைக் கண்டேன் மயில்
அயோத்தியா குணா
கண்ணாடிப் பூக்கள்
லண்டன் மணிவண்ணனின் தம்பி
சச்சின்
பிப்ரவரி 14
பொன்னியின் செல்வன்
சாணக்கியா
உணர்ச்சிகள் கல்யாணராமன்
2006 ரெண்டு
பரமசிவன்
தலைநகரம்
திமிரு குடிகாரன் சிறப்புத் தோற்றம்
நெஞ்சில் ஜில் ஜில்
திருவிளையாடல் ஆரம்பம் டைடல்பார்க் வேணுகோபால்
2007 நான் அவனில்லை அலெக்ஸ் தம்பிதுரை/நெப்போலியன்
நினைத்து நினைத்துப் பார்த்தேன்
சிவாஜி அவராகவே விருந்தினர் தோற்றம்
மா மதுரை
தொட்டால் பூ மலரும் தானி ஓட்டிநர்
அன்புத்தோழி
மலைக்கோட்டை
கண்ணாமூச்சி ஏனடா Cameo appearance
மச்சக்காரன் காவலர்
2008 தோட்டா
வைத்தீஸ்வரன்
வேதா
நேபாளி
பாண்டி மொக்கைசாமி
ஜெயம் கொண்டான் வழக்கறிஞர்
தனம்
திண்டுக்கல் சாரதி
சிலம்பாட்டம்
பஞ்சாமிர்தம்
குசேலன்
சூர்யா
2009 படிக்காதவன் மயில்சாமி
குரு என் ஆளு இயக்குநர்
ஆறுபடை திருடன்
ராஜாதி ராஜா
தோரணை காவல்காரர்
மாயாண்டி குடும்பத்தார்
ராகவன்
அய்யாவழி
சிரித்தால் ரசிப்பேன் இராமன்
எங்கள் ஆசான்
மோதி விளையாடு
மலை மலை
மலையன்
சிந்தனை செய்
கந்தசாமி
ஆறுமுகம்
கண்டேன் காதலை சிறப்புத் தோற்றம்
நான் அவனில்லை 2
2010 குட்டி சிறப்புத் தோற்றம்
ரசிக்கும் சீமானே
தீராத விளையாட்டுப் பிள்ளை சேகர்
அழகான பொண்ணுதான்
அம்பாசமுத்திரம் அம்பானி
கோரிப்பாளையம் ஓய்வு பெற்ற ரவுடி
தொட்டுப்பார்
மருதானி
தில்லாலங்கடி
உத்தம புத்திரன் சந்தோஷ்காந்த்
2011 சிறுத்தை
ஆடு புலி
எத்தன்
சபாஷ் சரியான போட்டி
காஞ்சனா போலி பூசாரி
காசேதான் கடவுளடா தங்கராஜ்
மைதானம்
முதல் இடம்
புலிவேசம்
போட்டா போட்டி அரிச்சந்திரா
வேலூர் மாவட்டம்
ஒஸ்தி சரவணன்
ராஜபாட்டை
யுவன் யுவதி தானி ஓட்டுநர்
சதுரங்கம்
2012 மாசி
ஆதி நாராயணா
விளையாட வா ஜானி
அரியான்
ஆதி நாராயணா
நெல்லை சந்திப்பு ஜவுளிக்கடை உரிமையாளர்
கோழி கூவுது
2013 நான் ராஜாவாகப் போகிறேன்
பட்டத்து யானை ஜாக்பாட்
சத்திரம் பேருந்து நிலையம்
ரகளபுரம்
தகராறு
2014 வீரம் மரிக்கொழுந்து
கலவரம்
இங்க என்ன சொல்லுது சிறப்புத் தோற்றம்
இது கதிர்வேலன் காதல் பலகுரல் கலைஞர் சிறப்புத் தோற்றம்
நான் தான் பாலா
யாமிருக்க பயமே அண்ணன் (போலி சாமியார்)
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
வேல்முருகன் போர்வெல்ஸ்
இரும்புக் குதிரை ஜீவன் ரமேஷ்
நான் சிகப்பு மனிதன் வழிப்போக்கன்
பொறியாளன்
தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
கல்கண்டு
ஜெய்ஹிந்த் 2 குல்பி கோபாலன்
நாய்கள் ஜாக்கிரதை நாய் உரிமையாளர்
திருமணம் எனும் நிக்காஹ்
விஞ்ஞானி
கனவு வாரியம்
2015 காக்கி சட்டை சங்கர நாராயணன் / சைபர் சங்கி / சங்கிஜி சுவாமி
வஜ்ரம்
காஞ்சனா 2 காவல்காரர்
வை ராஜா வை
போக்கிரி மன்னன்
ஸ்டராபெரி
வேதாளம் வீட்டு உரிமையாளர்
உப்பு கருவாடு பாண்டியன்
திருட்டு ரயில்
2016 போக்கிரி ராஜா
மாப்ள சிங்கம்
அடிடா மேளம்
நாரதன்
ஜித்தன் 2 வேணுகோபால்
கண்டேன் காதல் கொண்டேன்
மனிதன்n
கோ 2
பாண்டியோட கலாட்டா தாங்கல
பைசா
கக்கக்கபோ
என்னமா கதை வுட்ரானுங்க
ரெமோ காவல்காரர்
கவலை வேண்டாம் டாக்டர் பாஸ்கர்
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
தில்லுக்கு துட்டு
2017 யாக்கை
மொட்ட சிவா கெட்ட சிவா
சங்கிலி புங்கிலி கதவத் தொற தேனீர்கடை உரிமையாளர்
போங்கு மயில்
இவன் தந்திரன்
ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் பிரியாவின் தந்தைr
பொதுவாக எம்மனசு தங்கம் நாராயணன்
ஆயிரத்தில் இருவர்
ஹரஹர மஹாதேவகி
சக்க போடு போடு ராஜா வாஸ்து
2018 காத்திருப்போர் பட்டியல் கோட்டீஸ்வரன்
என்ன தவம் செய்தேனோ
காசுமேல காசு பெரியசாமி
ஆருத்ரா
அண்ணனுக்கு ஜே முருகேசன்
2.0 வைர மூர்த்தியின் தனி உதவியாளர்
காற்றின் மொழி பெருமாள், பல்பொருள் அங்காடி உரிமையாளர்
சண்டக்கோழி 2 குடிகாரன்
2019 சிகை சிப்பிரமணி ஜீ5 வெளியீடு[11]
எல். கே. ஜி. எல். கே. ஜியின் மாமா
பூமராங்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா வீட்டு உரிமையாளர்
களவாணி 2 சின்னசாமி (தோசை)
கூர்க்கா அரசியல்வாதி
காப்பான் தில்லி காவல் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் அபிஷேக் நகர்
அருவம் பள்ளி காவலாளி
தணுசு ராசி நேயர்களே சின்னக்காளை சிறப்புத் தோற்றம்
திருப்பதி சாமி குடும்பம் பாய்
50/50 நாகராஜ்
2020 சண்டிமுனி
மூக்குத்தி அம்மன் காது கேளாத சாமியார் சிறப்புத் தோற்றம்
2021 மலேசியா டூ அம்னீசியா காவல்காரர்
தேவதாஸ் சகோதரர்கள்
சபாபதி ஜோதிடர்
முருங்கைக்காய் சிப்ஸ் குயில்சாமி
2022 அன்புள்ள கில்லி
இடியட் ஆண்டவர்
நெஞ்சுக்கு நீதி வி. வில்லன்
வீட்ல விசேஷம் உன்னியின் பக்கத்து வீட்டுக்காரர்
லெஜண்ட் தங்கத்தின் உதவியாளர்
உடன்பால்

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பாத்திரம் அலைவரிசை
1996 மர்மதேசம் (இரகசியம்) சந்தானகிருஷ்ணன் சன் தொலைக்காட்சி
2003 காமெடி டைம் தொகுப்பாளர் சன் தொலைக்காட்சி
2005 டைமுக்கு காமெடி தொகுப்பாளர் ஜெயா தொலைக்காட்சி
2019 லொல்லுபா தொகுப்பாளர் சன் தொலைக்காட்சி

குரல் கலைஞர்

குறிப்புகள்

  1. "All you want to know about #Mayilsami".
  2. "அஞ்சலி: மயில்சாமி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-25. {{cite web}}: Text "ஒரு நகைச்சுவை நடிகரின் அடையாளம்!" ignored (help)
  3. "Mayilsamy's son Nandu ready for his show". 29 October 2009. Archived from the original on 25 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "Mayilsamy's son to debut in K'wood - Tamil News". IndiaGlitz.com. 11 June 2011.
  5. "Mayilsamy's son Anbu debuts in Kollywood". Deccan Chronicle. 24 February 2016.
  6. "Google Translate". translate.google.com. 15 February 2015.
  7. "Mayilsamy's son Anbu to debut in Kollywood". The New Indian Express.
  8. "I Want To Get Out Of My Stereotype Image: Sanjay Saravanan". Desimartini. 6 April 2017.
  9. Subramanian, Anupama (24 October 2018). "Massive set for Chidambaram Railway Gate". Deccan Chronicle.
  10. "Mayilsamy's son Anbu Mayilsamy to debut with 'Alti' - Times of India". The Times of India.
  11. "'Sigai' movie review: A whodunit that over-emphasises its message". The New Indian Express. Archived from the original on 2021-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-04-16.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மயில்சாமி&oldid=22006" இருந்து மீள்விக்கப்பட்டது