அவதார புருஷன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அவதார புருஷன்
இயக்கம்பாண்டியன் அறிவாளி
தயாரிப்புஏ. ஜகநாதன்
கஸ்தூரி ஆனந்த்
கதைபாண்டியன் அறிவாளி
இசைசிற்பி
நடிப்பு
ஒளிப்பதிவுசேகர் வி. ஜோசப்
படத்தொகுப்புகௌரி  — பாரி
கலையகம்ஜகநாதன் புரடக்சன்
வெளியீடுசூன் 28, 1996 (1996-06-28)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவதார புருஷன் (Avathara Purushan) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியன் அறிவாளி இப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் ரஞ்சித் , ஆனந்த், சிவரஞ்சனி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கௌண்டமணி , செந்தில் , விவேக் , வீரபாண்டியன், தலைவாசல் விஜய் , கவிதா, கரிகாலன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ. ஜெகன்நாதன் மற்றும் கஸ்தூரி அனந்த் இப்படத்தை தயாரித்தனர். சிற்பி இசையமைக்க, ஜூன் 28, 1996 ஆம் தேதி வெளியானது.[1][2][3]

கதைச்சுருக்கம்

ஆனந்த் (ஆனந்த்) மற்றும் வைஷாலி (சிவரஞ்சனி) ஆகியோர் ஒரே கல்லூரியில் கல்வி பயின்றனர். ஆனந்த் வைஷாலியின் மேல் காதல் கொள்ள அதனை அவளிடம் வெளிப்படுத்துகிறான். ஆனால் வைஷாலியோ ஆனந்தின் காதலை நிராகரிப்பதுடன் அவனை கேலியும் செய்கிறாள். அந்த நாளில் இருந்து வைஷாலி செல்லும் இடங்களிற்கு எல்லாம் ஆனந்தும் சென்று அவளை துன்புறுத்தி வந்தான். பின்பு வைஷாலி பொலிஸிடம் முறையிடுகின்றாள். இதன் பின்னர் வைஷாலி கற்பமடைந்து விடுகிறாள் மற்றும் அக்குழந்தையின் தந்தை யார் என்பதையும் தனது பெற்றோரிடம் இருந்து மறைத்து விடுகிறாள். இவளின் கற்பத்தால் அவமாமானப்பட்டதாக நினைத்த அவளின் குடும்பத்தார் ஊட்டிக்கு குடிபெயர்கின்றனர்.

வைஷாலி இறுதியில் தன்னை கற்பழித்தவன் பற்றி தனது பெற்றோரிடம் தெரிவிப்பதோடு அவளின் குழந்தையை கற்பழித்தவனின் வீட்டின் முன்பு விட்டுச்சென்று விடுகிறாள். ஆனால் ஆனந்திற்கு (ரஞ்சித்) இது எதனையும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனந்தும் அக்கல்லூரியில் கல்விபயிலும் மாணவன். மேலும் ஆனந்த் வைஷாலியை துன்புறுத்தியதாக பொலிஸார் தவறுதலாக கைதும் செய்திருந்தனர்.

ஆனந்த் (ரஞ்சித்) அக்குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்கிறான். அதன்பிறகே ஆனந்த் (ரஞ்சித்) கற்பழித்த மற்றைய ஆனந்த் (ஆனந்த்) பற்றி சிந்திக்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிகொள்கின்றனர். ஆனால் அவ்விருவரும் அப்பாவிகளாவர். அதேசமயம் வைஷாலிக்கும் ராஜாவிற்கும் (வீரபாண்டியன்) இடையில் நட்பு ஏற்படுகிறது. இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்

  • ரஞ்சித் - ஆனந்த்
  • ஆனந்த் - ஆனந்த்
  • சிவரஞ்சனி - வைஷாலி
  • கௌண்டமணி - பெரியசாமி
  • செந்தில்
  • விவேக் - அடைக்கலம்
  • வீரபாண்டியன் - ராஜா
  • தலைவாசல் விஜய் - வைஷாலியின் தந்தை
  • கவிதா - வைஷாலினியின் தாய்
  • கரிகாலன்
  • தாமு
  • போண்டா மணி
  • மயில்சாமி
  • செல்லதுரை
  • ஜோக்கர் துளசி
  • கோவை செந்தில்
  • மதி
  • மாஸ்டர் விஜய்
  • பேபி ராணி
  • யோகேஸ்வரி
  • சுசிலா
  • நிர்மலா
  • ஈஸ்வரி
  • அனுபமா
  • இந்து

இசை

இப்படத்தின் இசையமைப்பாளர் சிற்பி ஆவார். இதில் உள்ள 5 பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி.[4][5]

ட்ராக் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'டிகிரி வாங்கி' மனோ 4:05
2 'சினமானாய் சின்னமணி' மனோ 4:23
3 'ஆகாய பந்தலில்' எஸ்.பி. பாலசுப்ரமணியம் , எஸ்.பி. சைலஜா 3:18
4 'மதித்தாளா' ஸ்வர்ணலதா 4:19
5 உன்னை நெனச்சி எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.எஸ். சித்ரா 4:58

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அவதார_புருஷன்&oldid=30241" இருந்து மீள்விக்கப்பட்டது