செந்தில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
செந்தில்
Senthil at Producer AL Alagappan & Valliammai 60th Wedding Day Function.jpg
பிறப்புமுனுசாமி
பணிநகைச்சுவை நடிகர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1979 — இன்று
அரசியல் கட்சிபாஜக
வாழ்க்கைத்
துணை
கலைச்செல்வி
பிள்ளைகள்மணிகண்ட பிரபு,
ஹேமச்சந்திர பிரபு

செந்தில் (பிறப்பு: மார்ச் 23, 1951), தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.

வாழ்க்கைக் குறிப்பு

செந்தில் 1951ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23ஆம் திகதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ள இளஞ்செம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை இராமமூர்த்தி மற்றும் தாயார் திருக்கம்மல் ஆவார். இவரது இயற்பெயர் முனுசாமி ஆகும். இவருடன் பிறந்தவர்கள் ஆறு பேர், இதில் செந்தில் மூன்றாவதாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் தந்தை தூற்றியக் காரணத்தால் தனது 12ஆம் வயதில் சொந்த ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு மதுபானக் கடையில் பணி புரிந்தார். பின்பு நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இதுவே அவர் திரையுலகத்தில் நுழைய உதவியாக இருந்தது. சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவர் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.

செந்தில் நடித்த சில திரைப்படங்கள்

இவர் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.


திரைப்படம் ஆண்டு
ஒரு கோவில் இரு தீபங்கள் 1979
ஆடுகள் நனைகின்றன 1981
இன்று போய் நாளை வா 1981
அர்ச்சனைப் பூக்கள் 1982
தூறல் நின்னு போச்சு 1982
நிஜங்கள் 1982
மஞ்சள் நிலா 1982
சாட்சி 1983
சாட்டை இல்லாத பம்பரம் 1983
பகவதிபுரம் ரெயில்வே கேட் 1983
மலையூர் மம்பட்டியான் 1983
மாறுபட்ட கோலங்கள் 1983
24 மணி நேரம் 1984
அம்பிகை நேரில் வந்தாள் 1984
அவள் ஒரு மாதிரி 1984
இங்கேயும் ஒரு கங்கை 1984
குவா குவா வாத்துகள் 1984
சத்தியம் நீயே 1984
தலையணை மந்திரம் 1984
நல்ல நாள் 1984
நான் பாடும் பாடல் 1984
நேரம் நல்ல நேரம் 1984
மண்சோறு 1984
மதுரை சூரன் 1984
மன்மத ராஜாக்கள் 1984
வைதேகி காத்திருந்தாள் 1984
அண்ணி 1985
அவன் 1985
அன்பின் முகவரி 1985
ஆகாயத் தாமரைகள் 1985
இரண்டு மனம் 1985
உதயகீதம் 1985
உரிமை 1985
கீதாஞ்சலி 1985
சித்திரமே சித்திரமே 1985
சிவப்பு நிலா 1985
செல்வி 1985
திறமை 1985
தென்றல் தொடாத மலர் 1985
நல்ல தம்பி 1985
பிரெம பாசம் 1985
மருதாணி 1985
யார் 1985
ராஜா யுவராஜா 1985
வெற்றிக்கனி 1985
வேஷம் 1985
ஹலோ யார் பேசறது 1985
அம்மன் கோயில் கிழக்காலே 1986
ஆயிரம் பூக்கள் மலரட்டும் 1986
உனக்காகவே வாழ்கிறேன் 1986
என்றாவது ஒரு நாள் 1986
கண்ணே கனியமுதே 1986
காலமெல்லாம் உன் மடியில் 1986
குங்கும பொட்டு 1986
கொயில் யானை 1986
டிசம்பர் பூக்கள் 1986
தர்மபத்தினி 1986
நம்ம ஊரு நல்ல ஊரு 1986
நிலவே மலரே 1986
பதில் சொல்வாள் பத்ரகாளி 1986
பாரு பாரு பட்டணம் பாரு 1986
பிறந்தேன் வளர்ந்தேன் 1986
புதிய பூவிது 1986
பூக்களை பரிக்காதே 1986
மந்திர புன்னகை 1986
மறக்கமாட்டேன் 1986
ரசிகன் ஒரு ரசிகை 1986
அருள் தரும் ஐயப்பன் 1987
ஆண்களை நம்பாதே 1987
ஆயுசு நூறு 1987
ஆனந்த ஆராதனை 1987
இது ஒரு தொடர்கதை 1987
இவர்கள் இந்தியர்கள் 1987
இனிய உறவு பூத்தது 1987
உழவன் மகன் 1987
உள்ளம் கவர்ந்த கள்வன் 1987
ஊர்க்குருவி 1987
எங்க ஊரு பாட்டுக்காரன் 1987
ஒரே ரத்தம் 1987
கல்யாண கச்சேரி 1987
கிருஷ்ணன் வந்தான் 1987
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா 1987
சிறைப்பறவை 1987
சின்னகுயில் பாடுது 1987
சொல்லுவதெல்லாம் உண்மை 1987
தங்கச்சி 1987
தீர்த்த கரையினிலே 1987
துளசி 1987
நல்ல பாம்பு 1987
நினைக்க தெரிந்த மனமே 1987
நினைவே ஒரு சங்கீதம் 1987
பரிசம் போட்டாச்சு 1987
பூ மழை பொழியுது 1987
பூப்பூவா பூத்திருக்கு 1987
பூவிழி வாசலிலே 1987
மனிதன் 1987
முப்பெரும் தேவியர் 1987
மேகம் கருக்குது 1987
மைக்கேல் ராஜ் 1987
ராஜ மரியாதை 1987
ரேகா 1987
வாழ்க வளர்க 1987
வெளிச்சம் 1987
வேலுண்டு வினையில்லை 1987
வேலைக்காரன் 1987
இது எஙள் நீதி 1988
இரண்டில் ஒன்று 1988
உழைத்து வாழ வேண்டும் 1988
உள்ளத்தில் நல்ல உள்ளம் 1988
எங்க ஊரு காவக்காரன் 1988
என் வழி தனி வழி 1988
என்னை விட்டு பொகாதே 1988
ஒருவர் வாழும் ஆலயம் 1988
கண் சிமிட்டும் நேரம் 1988
கல்யாண பறவைகள் 1988
காலையும் நீயே மாலையும் நீயே 1988
குங்கும கோடு 1988
கைநாட்டு 1988
கொயில் மணி ஓசை 1988
சக்கரைப்பந்தல் 1988
சுதந்திர நாட்டின் அடிமைகள் 1988
செண்பகமே செண்பகமே 1988
செந்தூரப்பூவே 1988
த்ங்க கலசம் 1988
தம்பி தங்க கம்பி 1988
தாய்மேல் ஆணை 1988
நம்ம ஊர் நாயகன் 1988
நான் சொன்னதே சட்டம் 1988
நெருப்புநிலா 1988
பட்டிக்காட்டு தம்பி 1988
பாட்டி சொல்லை தட்டாதே 1988
பாய்மரக்கப்பல் 1988
பார்த்தால் பசு 1988
பாலைவனத்தில் பட்டாம்பூச்சி 1988
பூவும் புயலும் 1988
மனைவி ஒரு மந்திரி 1988
ராசாவே உன்னை நம்பி 1988
வளைகாப்பு 1988
ஜாடிக்கேத்த மூடி 1988
அத்தைமடி மெத்தையடி 1989
அன்புக்கட்டளை 1989
எங்க ஊரு மாப்பிள்ளை 1989
எங்கள் அண்ணன் வரட்டும் 1989
ஒரே தாய் ஒரே குலம் 1989
கரகாட்டக்காரன் 1989
காவல் பூனைகள் 1989
சம்சாரமே சரணம் 1989
தங்கமான ராசா 1989
அம்மன் கோவில் திருவிழா 1990
ஆத்தா நான் பாஸாயிட்டேன் 1990
ஆவதெல்லாம் பெண்ணாலே 1990
இணைந்த கைகள் 1990
ஊரு விட்டு ஊரு வந்து 1990
எங்க ஊரு ஆட்டுக்கரன் 1990
எனக்கு ஒரு நீதி 1990
சிலம்பு 1990
தங்கைக்கு ஒரு தாலாட்டு 1990
நீங்களும் ஹீரோதான் 1990
பாட்டாளி மகன் 1990
பாலம் 1990
புது பாட்டு 1990
மருதுபாண்டி 1990
மல்லுவேட்டி மைனர் 1990
முதலாளியம்மா 1990
வெற்றிமாலை 1990
ஜகதல பிரதாபன் 1990
அண்ணன் காட்டிய வழி 1991
அதிகாரி 1991
அபூர்வ நாகம் 1991
அர்சனா I.A.S. 1991
அன்பு சங்கிலி 1991
ஆத்தா உன் கோவிலிலே 1991
ஈசுவரி 1991
ஊரெல்லாம் உன் பாட்டு 1991
எங்க ஊரு சிப்பாய் 1991
என் ராசாவின் மனசிலே 1991
ஒயிலாட்டம் 1991
சேரன் பாண்டியன் 1991
தாயம்மா 1991
தூதுபோ செல்லக்கிளியே 1991
தை பூசம் 1991
நாடு அதை நாடு 1991
நான் புடிச்ச மாப்பிள்ளை 1991
நான் வளர்த்த பூவே 1991
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு 1991
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் 1991
பொண்டாட்டி பொண்டாட்டிதான் 1991
மரிக்கொழுந்து 1991
மில் தொழிலாளி 1991
மூக்குத்தி பூமேலே 1991
வாசலிலே ஒரு வெண்ணிலா 1991
வெற்றிக்கரங்கள் 1991
வைதேகி கல்யாணம் 1991
அபிராமி 1992
உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் 1992
ஊர் மரியாதை 1992
சின்ன கவுண்டர் 1992
சின்ன பசங்க நாங்க 1992
உத்தமராசா 1993
எஜமான் 1993
கோயில் காளை 1993
சின்னஜமீன் 1993
பேண்ட் மாஸ்டர் 1993
பொறந்தவீடா புகுந்த வீடா 1993
பொன்னுமணி 1993
மகராசன் 1993
ராக்காயி கோயில் 1993
ஜென்டில்மேன் 1993
கட்டப்பொம்மன் 1993
சேதுபதி ஐ.பி.எஸ் 1994
சத்யவான் 1994
சின்ன மேடம் 1994
சீமான் 1994
செந்தமிழ் செல்வன் 1994
டூயட் 1994
தாய் மனசு 1994
நம்மவர் 1994
நாட்டாமை 1994
நிலா 1994
பூவரசன் 1994
மேட்டுப்பட்டி மிராசு 1994
ரசிகன் 1994
ராஜகுமாரன் 1994
ராஜபாண்டி 1994
வரவு எட்டணா செலவு பத்தணா 1994
வனஜா கிரிஜா 1994
வீரப்பதக்கம் 1994
வீரா 1994
ஜல்லிக்கட்டு காளை 1994
ஜெய் ஹிந்த் 1994
அசுரன் 1995
கூலி 1995
கோலங்கள் 1995
சந்த்தைக்கு வந்த கிளி 1995
சந்திரலேகா 1995
சின்ன வாத்தியார் 1995
தமிழச்சி 1995
நாடோடி மன்னன் 1995
முத்து 1995
இந்தியன் 1996
உள்ளத்தை அள்ளித்தா 1996
கோயம்புத்தூர் மாப்ளே 1996
அருணாச்சலம் 1997
ஜீன்ஸ் 1998
படையப்பா 1999
வானத்தைப்போல 2002
பாய்ஸ் 2003
விசில் 2003
ஜெயம் 2003
எங்கள் ஆசான் 2009
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் 2009
அன்பே அன்பே 2010
எல்லைச்சாமி 2010
சத்யம் 2010
தங்க மனசுக்காரன் 2010
சின்னத்தாயி 2012
உன்ன நினச்சேன் பாட்டு படிச்சேன்
என்றும் அன்புடன்
ஒன்னா இருக்க கத்துக்கணும்
சித்து
சின்னவர்
சேவகன்
தாய்மாமன்
புன்னகைப்பூவே
ரோஜாவை கிள்ளாதே
ஹெலோ
தானா சேர்ந்த கூட்டம் 2018

இவரது நகைச்சுவையான வசனங்கள் சில:

  • அந்த இன்னொன்னு தாண்ணே இது (கரகாட்டக்காரன்)
  • நேர்மை எருமை கருமை
  • பாட்றி என் ராசாத்தி
  • டேய் அண்ணனுக்கு பொற வைடா அண்ணன் நன்றி உள்ளவரு
  • டேய்! அண்ணன் சிகப்புடா கோயில் காளை
  • புலிகுட்டி தம்பி பூனகுட்டி, பூனகுட்டி தம்பி புலிகுட்டி
  • இது மந்திரிச்சு விட்ட தாயத்து இல்ல, இது தான் சயனைடு சப்பி
  • ம்ம்ம்ம்ம்ம், ர்ர்ர்ர்-அ விட்டுட்டே (இந்தியன்)
  • அய்யய்யய்யய்யோ, அறிவுக்கொளுந்துண்ணே நீங்க
  • கோழி முட்ட மாதிரி இருக்கு, இதுல எப்படிண்ணே லைட் எரியும்!... ... ... என்னண்ணே உடைச்சிட்டீங்க! (வைதேகி காத்திருந்தாள்)
  • ஸ்பேனர் புடிச்சவன் எல்லாம் மெக்கானிக்குன்னு சொல்றான் (சேரன் பாண்டியன்)
  • அண்ணே! ஆத்தா பல்லு ஏண்ணே அப்படி இருக்கு! (சின்ன கவுண்டர்)

அரசியல்

அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த இவர் 2011, 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.[1].முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமமுகவில் இணைந்தார்.அங்கு, அவருக்கு கட்சி அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.[2]2020 ஆம் ஆண்டு அமமுகவில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.11 மார்ச் 2021 அன்று தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் [3]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-30. பார்க்கப்பட்ட நாள் 2018-03-04.
  2. "அதிமுக அமைப்பு செயலாளராக நடிகர் செந்தில் நியமனம்.. கோகுல இந்திரா நீக்கம்:தினகரன் அதிரடி அறிவிப்பு".
  3. செய்திப்பிரிவு, ed. (11 மார்ச் 2021). நல்ல கட்சி என்பதால் இணைந்தேன்: பாஜகவில் இணைந்த பின்பு செந்தில் பேட்டி. தி ஹிந்து தமிழ் நாளிதழ்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=செந்தில்&oldid=21823" இருந்து மீள்விக்கப்பட்டது