உத்தமராசா
உத்தம ராசா | |
---|---|
இயக்கம் | ராஜ்கபூர் |
தயாரிப்பு | கே. பாலு |
கதை | ராஜ்கபூர் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு குஷ்பூ ராதாரவி ராஜா |
ஒளிப்பதிவு | வேலு பிரபாகரன் |
படத்தொகுப்பு | கணேஷ்-குமார் |
கலையகம் | கே. பி. பிலிம்ஸ் |
விநியோகம் | கே. பி. பிலிம்ஸ் |
வெளியீடு | 14 ஏப்ரல் 1993 |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உத்தமராசா (Uthama Raasa)என்ற திரைப்படம் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழிதிரைப்படமாகும் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்கபூர் ஆவார் இத்திரைப்படத்தில் பிரபு, குஷ்பூ ,ரோஜா மற்றும் ராதாரவி ஆகியோர் நடித்துள்ளனர் . இத்திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டவர் கே பாலு ஆவார் . இசையமைத்தவர் இளையராஜா ஆவார் [1][2]
கதைக்களம்
சின்னையா மற்றும் பரமத்தேவர் ஆகிய இருவருக்கும் இடையே 18 வருடங்களாக பகை இருந்து வந்தது. இதனால் அவர்களுக்கிடையில் சண்டை தொடர்ந்து நடைபெற்றது . சின்னையா தனது பதின்வயது காலத்தில் தனது தந்தையை பரமத்தேவர் கொன்றதற்காக அவருடைய கைகளை வெட்டினான். பரமத்தேவரின் மகள் இதற்கு சாட்சி ஆகிறார். இதனால், பரமத்தேவரின் மகளான வைஷ்ணவிக்கு பேரதிர்ச்சி ஏற்படுகிறது. இதன் காரணமாக அவரின் திருமணம் தடைபடுகிறது. சின்னையாவின் உறவினரான மீனாட்சி என்ற மீனு நகரத்தில் படிப்பை முடித்துவிட்டு திரும்புகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். அதை சொல்லாமலே காலத்தைக் கடத்துகிறார்கள். இதற்கிடையில், பரமத்தேவரின் மகனான மருது மீனுவின் அழகில் மயங்குகிறான். மருது மீனுவின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவளது நினைவாக இருக்கிறான். ஒரு முறை கிராம விழாவின்போது சின்னையா மருதுவுடன் சண்டையிடுகிறார். இதன் விளைவாக மீனு சின்னையாவின் மீது குற்றம் சாட்டுகிறார் . ஆனால் விரைவில் இருவரும் சமரசம் ஆகிறார்கள். மீனாவின் நண்பர்களான இரட்டையர்கள் அவளை ஒரு திருமணத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் புறப்படுவதற்கு முன்பு, மீனுவை வேடிக்கைக்காக சின்னையாவுடன் ஒரு நாடகத்தை நடத்துமாறு சொல்கிறார்கள். முதலில் தயக்கம் காட்டினாலும் மீனு அதற்கு ஒப்புக்கொள்கிறார். சின்னையாவை ஏமாற்ற அவனிடம் தான் ஒரு பையனை அதிகம் காதலிப்பதாக மீனு பொய் சொல்கிறாள். அந்த நேரத்தில், அவரது தாயார் ஆத்தா, சின்னையா மற்றும் மீனுவுடனான திருமணத்தை முடிவு செய்ய செல்கிறார். சின்னையா மீனு மற்றும் மருது இருவரையும் ஒன்றாகக் சேர்ந்து பார்க்கிறார். இது ஒரு தற்செயலான சந்திப்பு. ஆனால் சின்னையா அவர்கள் இருவரும் ஒரு ஜோடி என்று தவறாக நினைத்து முடிவு செய்கிறார். மீனு மருதுவை காதலிக்கிறார் என்று நினைக்கிறார். மருது எடுத்த மீனுவின் படங்களை பார்த்த பிறகு இது மோசமடைகிறது. மீனு, குற்ற உணர்ச்சியுடன், மாமாவிடம் நிற்க முடியவில்லை, அதனால் ஒரு உரையில் சின்னையாவின் புகைப்படத்தை வைத்துக் கொடுக்கிறார். புகைப்படத்தில் உள்ள நபரை காதலிப்பதாகவும் அவன் இல்லாமல் வாழ முடியாது என்றும் அவனிடம் சொல்கிறாள். அவள் திருமணத்திற்கு புறப்படுகிறாள், அது மருதுவின் படம் என்று சின்னையா நினைக்கிறான். அவரது தாயின் அனுமதி இல்லாமல், பரமாவுக்கு இடையிலான பகைமையை மறந்துவிட்டு, மீனுவின் பொருட்டு திருமணத்தை முடிவு செய்ய சின்னையா செல்கிறார். அங்கு, பரமா சின்னையாவை தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறார், அதற்கு அவர் ஒப்புக்கொள்கிறார். மீனு திரும்பி வந்து அதிர்ச்சி அடைகிறாள். அதன்பிறகு, சின்னையாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறாள்.
பரமு உண்மையில் மீனுவின் சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு விரட்டவும், சின்னையாவை தனது மகளுடன் திருமணத்திற்கு முன்பு கொல்லவும் திட்டமிட்டிருந்தார். பரமாவின் தாய், இதைக் கேட்கிறார். அது தெரிந்து பரமு. தனது தாயைக் கொல்கிறார். பரமாவின் மகள் பின்னர் மீனு மற்றும் சின்னையா பற்றிய உண்மையை அறிந்துகொள்கிறாள். அவள் தன் தந்தையிடம் சொல்கிறாள், மருது மனம் உடைந்தான். பரமா பழிவாங்குகிறார். சின்னையாவின் தாயார் திருமணத்தை நிறுத்த வரும்போது, பரமா தனது ஆட்களைச் சுற்றி நிர்வாணமாக நடக்கும்படி அவமானப்படுத்தினார். கோபமடைந்த, சின்னையா பரமாவைக் கொல்லச் செல்கிறார். வழியில், பரமாவின் மகள் சின்னையாவின் வேலைக்காரனை திருமணம் செய்து கொள்கிறார். மருது தனது காதலை விட்டுவிடுகிறான்.
மீண்டும் அவமானப்படுத்தப்பட்ட பரமா, சின்னையாவைக் கொன்று மீனுவை தனது மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். சின்னையா மீனுவை மீட்டு, பரமாவின் முன் அவளை மணக்கிறார். அவரது அனைத்து தவறான செயல்களுக்காகவும் கிராம மக்கள் கூடி பரமாவை உயிரோடு புதைக்க திட்டமிடுகின்றனர். சின்னையா தலையிட்டு கிராம மக்களிடம் பரமாவைத் தண்டிப்பது தனது வாழ்வோடு தொடர்புடையது என்று சொல்கிறான். கிராமவாசிகள் அதற்கு சம்மதித்து கலைந்து செல்லும்போது, ஒரு அரிவாளை எடுத்து சின்னையாவைக் கொல்ல பரமா முற்படுகிறார். ஆனால், அவர் மருதுவால் கொல்லப்படுகிறார். சின்னையா மற்றும் மீனு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதுடன் திரைப்படம் முடிவடைகிறது
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Uthama Raasa". spicyonion.com. http://spicyonion.com/movie/uthama-rasa/. பார்த்த நாள்: 2014-11-16.
- ↑ "Uthama Raasa". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-12-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141216221332/http://www.gomolo.com/uthamarasa-movie/11702. பார்த்த நாள்: 2014-11-16.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Mannath, Malini (April 30, 1993). "Engrossing". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19930430&printsec=frontpage&hl=en.