ராஜ்கபூர் (இயக்குநர்)
Jump to navigation
Jump to search
ராஜ்கபூர் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 10, 1965 கோம்பை[1], தமிழ்நாடு, இந்தியா |
பணி | இயக்குனர் (திரைப்படம்), நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991–தற்போது |
வாழ்க்கைத் துணை | சஜீலா கபூர் |
பிள்ளைகள் | மறைந்த சாரூக் கபூர், சமீமா கபூர், சானியா கபூர் |
ராஜ் கபூர் தமிழ் இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2] இவர் குணச்சித்திர வேடங்களிலும் எதிர் நாயாகனாகவும் நடித்துள்ளார்.
பணி
- திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் அவரிடம் உதவியாளராக சேர்ந்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் ஸ்ரீதரிடம் உதவி இயக்குநர்களாக பணிபுரிந்த பாரதி–வாசுவிடம் சிறிது காலம் உதவி இயக்குநராக பணியாற்றி பிறகு பல படங்களை இயக்கியுள்ளார்.
- மேலும் இவர் திரையுலகில் எம். ஜி. ஆர் அவர்களின் தீவிர ரசிகர் ஆவார். அதனால் எம்ஜிஆரின் சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான அவரது தாயார் பெயரில் செயல்பட்டு வந்த சத்யா ஸ்டுடியோ பெயரையே ராஜ் கபூர் தனது இயக்கிய பல படங்களில் கதாநாயகன், கதாநாயகிகளுக்கு சத்யா என்ற பெயர் வைத்து நடிக்க வைப்பார்
- மேலும் ராஜ் கபூர் பல திரைப்படங்களில் வில்லனாகவும், நகைசுவை கலந்த குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
- சன் தொலைக்காட்சியில் வெளியான நந்தினி தொலைக்காட்சித் தொடரை இயக்கினார்.[3]
திரைப்பட பணிகள்
இயக்குநர்
ஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
1991 | தாலாட்டு கேக்குதம்மா | பிரபு, கனகா | தமிழ் | |
1992 | சின்ன பசங்க நாங்க | முரளி, ரேவதி, சாரதா பிரீதா | ||
1993 | உத்தமராசா | பிரபு, குஷ்பூ | ||
சின்ன ஜமீன் | கார்த்திக் (தமிழ் நடிகர்), சுகன்யா, வினிதா | |||
1994 | சீமான் | கார்த்திக், சுகன்யா | ||
சத்தியவான் | முரளி, கௌதமி | ஏப்ரல் 1 விடுதல என்னும் படத்தின் மறுஆக்கம் | ||
1997 | வள்ளல் | சத்யராஜ், மீனா, ரோஜா செல்வமணி | ||
1998 | அவள் வருவாளா | அஜித் குமார், சிம்ரன், பப்லு பிரித்திவிராஜ் | பெல்லி என்னும் தெலுகு படத்தின் மறுஆக்கம் | |
கல்யாண கலாட்டா | சத்யராஜ், குஷ்பூ, ராசி | |||
1999 | ஆனந்த பூங்காற்றே | அஜித் குமார், கார்த்திக், மீனா, மாளவிகா | வசனத்திற்கு மாநில விருது | |
2000 | சுதந்திரம் | அர்ஜுன், ரம்பா, ரகுவரன் | குலாம் என்னும் இந்தி திரைப்படத்தின் மறுஆக்கம் | |
2001 | என்ன விலை அழகே | பிரசாந்த், அமீஷா பட்டேல், ரகுவரன், மணிவண்ணன், சுகுமாரி | (படம் முடிக்கப்படவில்லை - காரணம் தெரியவில்லை) | |
2002 | சமஸ்தானம் | சரத்குமார், சுரேஷ் கோபி, தேவயானி, அபிராமி | ||
2003 | ராமச்சந்திரா | சத்யராஜ், விஜயலட்சுமி | ||
2005 | சிவலிங்கம் I.P.S. | சத்யராஜ், ஜோதிமயி, கார்த்திக் | பரத்சந்திரன் I.P.S. என்னும் மலையாளப் படத்தின் மறுஆக்கம்.
(இன்னும் வெளியாகவில்லை) | |
2006 | குஸ்தி | பிரபு, கார்த்திக், மான்யா | ||
2008 | வம்பு சண்டை | சத்யராஜ், உதய் கிரண், தியா |
- தொலைக்காட்சி தொடர்கள்
ஆண்டு | தொடர் | நடிகர்கள் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2017 – 2018 | நந்தினி | மாளவிகா வேல்ஸ், நித்யா ராம், ராகுல் ரவி | தமிழ் தெலுங்கு மொழி கன்னடம் மலையாளம் |
முதல் பாகம் முழுவதும் |
2019 | ராசாத்தி | பவனி, பாலாதித்யா, விசித்ரா | தமிழ் | முதல் 28 பகுதிகள் |
நடிகர்
- திரைப்படங்கள்
வருடம் | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
1983 | ஒரு ஓடை நதியாகிறது | காவலாளி | தமிழ் | ஆரம்ப காலம் |
1986 | அறுவடை நாள் (திரைப்படம்) | காவல் அதிகாரி | ||
1989 | பிக்பாக்கெட் | |||
1998 | தலைமுறை | முத்துவின் அப்பா | ||
1999 | பொப்பிலி வம்சம் | கதாநாயகனின் உயிரியல் தந்தை | தெலுங்கு மொழி | |
தாஜ்மகால் | மச்சக்கன்னியின் தமையன் | தமிழ் | ||
ஆனந்த பூங்காற்றே | மாளவிகாவின் மாமா | |||
2000 | ஏழையின் சிரிப்பில் | |||
சுதந்திரம் | ஒற்றைக் கை மனிதர் | |||
மாயி | ||||
2001 | வாஞ்சிநாதன் | காவல் அதிகாரி | ||
2002 | காதல் வைரஸ் | இயக்குநராக | ||
சமஸதானம் | எதிர் நாயகனின் தந்தை | |||
2003 | தென்னவன் | அரசியல்வாதி | ||
இராமர் | ரவுடி - நாகா | |||
விசில் | நாகா | |||
வின்னர் | வைரக் கண்ணன் - ரவுடி | |||
காதல் கிறுக்கன் | இரவி வர்மா | |||
2004 | கண்ணாடிப் பூக்கள் | காவல் அதிகாரி | ||
அடிதடி | சத்யராசின் உதவியாளர் | |||
ஜெய்சூர்யா | அரசியல்வாதி | |||
மதுர | கந்துவட்டி | |||
மாம்பலக்கலம் | மலையாளம் | |||
கிரி | பரமசிவம்- கிரியின் தந்தை | தமிழ் | ||
2005 | பதவி படுத்தும் பாடு | |||
ஆணை | ஆள் கடத்தல்காரன் | |||
தம்பி | காவல் அதிகாரி | |||
6'2 | ||||
ஐயா | ||||
ஆறு | பூமிநாதன் - எதிர்நாயகனின் தமையன் | |||
2006 | குஸ்தி | ரவுடி | ||
தர்மபுரி | எதிர்நாயகன் | |||
துருப்பலகன் | காவல் அதிகாரி | மலையாளம் | ||
மதராஸி | இரவி பாய் - கொள்ளைக்கூட்டன் | தமிழ் | ||
2007 | வேல் | வேலின் சித்தப்பா | ||
நான் அவனில்லை | காவல் அதிகாரி | |||
அகரம் | ||||
நம் நாடு | ரவுடி | |||
2008 | பழனி | எதிர்நாயகன் - வைகுண்டன் | ||
பாண்டி | எதிர்நாயகன் | |||
தோட்டா (திரைப்படம்) | சண்முகத்தின் தந்தை | |||
புத்திவன்தா | காவல் அதிகாரி | கன்னடம் | ||
தனம் | காவல் ஆய்வாளர் கபூர் | தமிழ் | ||
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | எமலோக குற்றவாளி | |||
சண்டை | எதிர்நாயகனின் மகன் | |||
2009 | மாயாண்டி குடும்பத்தார் | பரமனின் மாமா | ||
மாசிலாமணி | கந்துவட்டி | |||
ஐந்தாம் படை | இராஜதுரை | |||
தீ | காவல் அதிகாரி | |||
வில்லு | ஊர் தலைவர் | |||
2010 | கோரிப்பாளையம் | எதிர்நாயகன் | ||
குரு சிஷ்யன் | சத்தியராசின் உதவியாளர் | |||
கனகவேல் காக்க | ||||
வாடா | அரசியல்வாதி | |||
2011 | பொன்னர் சங்கர் | அரசனின் அமைச்சர் | ||
முத்துக்கு முத்தாக | இளவரசுவின் உறவினர் | |||
பவானி ஐ. பி. எஸ். | வழக்கறிஞர் | |||
நூறாவது நாள் | இயக்குநராக | |||
2012 | அகிலன் | சிபிஐ அதிகாரி | ||
கொண்டான் தொடுத்தான் | ||||
ஒரு நடிகையின் வாக்குமூலம் | இயக்குநராக | |||
பாண்டி ஒலிபெறுக்கி நிலையம் | ||||
மத கஜ ராஜா | ||||
2013 | ஒருவர் மீது இருவர் சாய்ந்து | |||
ஹரிதாஸ் | உடற்கல்வி ஆசிரியர் | |||
அலெக்ஸ் பாண்டியன் | காவல் அதிகாரி | |||
2014 | அரண்மனை | ஓட்டுநர் | ||
சூரன் | காவல் அதிகாரி | |||
2015 | ஆம்பள | சரவணனின் மாமா | ||
எலி | முன்னாள் காவல் அதிகாரி | |||
பள்ளிக்கூடம் போகாமலே | கயல்விழியின் தந்தை | |||
சாகசம் | அரசியல்வாதி | |||
தகடு | அரசனின் மந்திரி | |||
2016 | அரண்மனை 2 | ஓட்டுநர் | ||
ஜெனிபர் கருப்பையா | ||||
அட்ரா மச்சான் விசிலு | காவல் அதிகாரி | |||
வாகா | வாசுவின் தந்தை | |||
ஆசை | துர்காவின் தந்தை | |||
கொடி | நிதி அமைச்சர் | |||
2017 | சத்யா | மலையாளம் | ||
2018 | கிளம்பிட்டாங்கயா கிளம்பிட்டாங்க | தமிழ் | ||
கன்னக்கோல் | காவல் அதிகாரி | |||
2019 | வந்தா ராஜாவாதான் வருவேன் | அரசியல் வாதி |
- தொடர்கள்
ஆண்டு | தொடர் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2019 – 2020 | ரன் | செல்வநாயகம் | தமிழ் |
சொந்த வாழ்க்கை
தனது அம்மாவுடன் மெக்காவிற்கு பயணம் மேற்கொண்ட ராஜ்கபூரின் மூத்த மகன் சாரூக் கபூர் 17 பிப்ரவரி 2020 அன்று மெக்காவில் மரணமடைந்தார்.[4]
ஆதாரங்களும் மேற்கோள்களும்
- ↑ (2020, 25 சூன்).இயக்குனர் ஸ்ரீதர் தனியாக அழைத்து சொன்ன அறிவுரை - Director Raj Kapoor - Chai with Chithra - Part - 1.டூரிங் டாக்கீஸ்.Retrieved during சூலை 2020.
- ↑ "தமிழ் cinema Data B-e of நடிகர்s,actress,இயக்குநர்s". Cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2012-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120918130900/http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=rajkapoor. பார்த்த நாள்: 2012-11-14.
- ↑ "Tamil cinema Data Base of actors,actress,directors". Cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2012-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120918130900/http://www.cinesouth.com/cgi-bin/persondb.cgi?name=rajkapoor. பார்த்த நாள்: 2012-11-14.
- ↑ "Tamil director Raj Kapoor's 23-yr-old son passes away suddenly in Mecca". https://www.thenewsminute.com/article/tamil-director-raj-kapoors-23-yr-old-son-passes-away-suddenly-mecca-118407.