வாகா (திரைப்படம்)
வாகா | |
---|---|
இயக்கம் | ஜி. என். ஆர். குமரவேலன் |
தயாரிப்பு | எம். பாலவிஸ்வநாதன் |
திரைக்கதை | ஜி. என். ஆர். குமரவேலன் |
இசை | டி. இமான் |
நடிப்பு | விக்ரம் பிரபு ரன்யா ராவ் கருணாஸ் சத்யன் ஷாஜி சௌத்ரி |
ஒளிப்பதிவு | எஸ். ஆர். சதீஸ்குமார் |
படத்தொகுப்பு | ராஜா முகமது |
கலையகம் | விஜய் பார்கவி பிலிம்ஸ் |
விநியோகம் | காஸ்மோ வில்லேஜ் |
வெளியீடு | ஆகத்து 12, 2016 |
ஓட்டம் | 122 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாகா (Wagah) 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு மற்றும் ரன்யா ராவ் நடிப்பில், ஜி. என். ஆர். குமரவேலன் இயக்கத்தில், டி. இமான் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3]
கதைச்சுருக்கம்
வாசு (விக்ரம் பிரபு) கல்லூரிப் படிப்பு முடிந்ததும் தன் தந்தை வைத்துள்ள கடையில் அவருக்குத் துணையாக இருக்க விரும்பாமல் எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைக்குச் சேர்கிறான். அவன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பணிக்குச் செல்கிறான். அங்கு காஷ்மீரைச் சேர்ந்த காணம் (ரன்யா ராவ்) என்ற பெண்ணின் மீது காதல் கொள்கிறான்.
அவளும் வாசுவை விரும்பினாலும் அவனைத் திருமணம் செய்ய மறுக்கிறாள். மறுநாள் இந்திய வீரர்கள் இருவரை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்வதால், காஷ்மீரில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை தங்கள் நாட்டுக்குத் திரும்பச் சொல்கிறார்கள். அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இருக்கும் வாசு அவ்வாறு வெளியேறும் பாகிஸ்தானியர்களில் தன் காதலி காணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகிறான். அவள் செல்லும் பேருந்திற்கு கலவரக்காரர்கள் தீ வைக்கின்றனர்.
அவளைக் காப்பாற்றும் வாசு பாகிஸ்தானிலுள்ள அவளின் வீட்டுக்கு மாற்றுவழியில் அழைத்துச்செல்கிறான். அனுமதியின்றி பாகிஸ்தானுக்கும் நுழையும் அவன் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்படுகிறான். பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பிக்கும் வாசு தன் காதலி காணம் வீட்டுக்குச் செல்கிறான். அங்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ரஜாக் அலிகான் (ஷாஜி சௌத்ரி) காணம் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரையும் கொன்றதை அறிகிறான். ஆனால் ரஜாக்கிடம் சிக்காமல் தப்பிக்கும் காணம் மற்றும் வாசு இருவரும் இந்திய எல்லையை நோக்கிச் செல்கின்றனர். அவர்களைக் கொல்ல ரஜாக் துரத்தி வருகிறான். என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
நடிகர்கள்
- விக்ரம் பிரபு - வாசு
- ரன்யா ராவ் - காணம்
- ஷாஜி சௌத்ரி - ரஜாக் அலிகான்
- கருணாஸ் - நாகப்பன்
- சத்யன் - பழனி
- இராசேந்திரன் - உடற்கல்வி ஆசிரியர்
- ராஜ் கபூர் - வாசுவின் தந்தை
- துளசி - வசுவின் தாய்
- வித்யுலேகா ராமன் - ஜூஹி
- அஜய் ரத்னம்
- ரங்கராஜ் பாண்டே - ரங்கராஜ் பாண்டே
- 'ஜெயா டிவி' ஜேக்கப் - பெரியப்பா
தயாரிப்பு
படத்தின் முன்னோட்டம் 2016 ஏப்ரல் 13 ன்று வெளியானது.[4][5]
இசை
படத்தின் இசையமைப்பாளர் டி. இமான்.
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் | பாடலாசிரியர் |
---|---|---|---|---|
1 | சொல்லத்தான் | திவ்யா குமார் | 4:23 | வைரமுத்து |
2 | ஏதோ மாயம் | விக்ரம் பிரபு, ஜித்தன் ராஜ் | 4:46 | மோகன் ராஜ் |
3 | ஆணியே | செண்பகராஜ் | 4:10 | அருண்ராஜ் காமராஜ் |
4 | ஆசைக் காதல் | வந்தனா ஸ்ரீனிவாசன் | 4:53 | வைரமுத்து |
5 | லவ் பார் அவர் நேசன் | இசை மட்டும் | 4:11 | மோகன்ராஜ் |
விமர்சனம்
மாலைமலர்: எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் கதையை சொல்ல வந்தாலும், இந்த படத்தின் மையக்கரு காதல்தான்.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- வாகா ஐஎம்டிபி இணையதளம்
- வாகா- முகநூல் பக்கம்
- வாகா - டுவிட்டர் பக்கம்