விக்ரம் பிரபு
விக்ரம் பிரபு | |
---|---|
பிறப்பு | 15 சனவரி 1986 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது வரை |
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) |
பெற்றோர் | பிரபு புனிதா பிரபு |
வாழ்க்கைத் துணை | இலக்குமி உச்சயினி (தி. 2007) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | சிவாஜி கணேசன் |
விக்ரம் பிரபு (Vikram Prabhu, பிறப்பு: சனவரி 15, 1986) தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனும் ஆவார். இவர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
விக்ரம் இலண்டனில் பட்டப்படிப்புப் பயின்றார். சந்திரமுகி திரைப்படத்திற்கு உதவியாக சென்னை திரும்பினார். [1] சர்வம் திரைப்படத்தின் தயாரிப்பின்போது விஷ்ணுவர்த்தனுக்கு உதவி தயாரிப்பாளராக பணியாற்றினார்.[2]
லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக யானைகள் வளர்ப்பகத்திற்கு சென்று பழகிவந்தார்.[3][4]
நடிகர் விஜய் தயாரிக்கும் சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படத்தில் பணியாற்றுகிறார். கார்த்திகா, பியா பாஜ்பாய், ரீமா சென் ஆகியோருடன் நடிக்கிறார்.[5] இவரது திருமணத்தி்ல் திரைத்துறையினரும் அரசியல்வாதிகளும் பெருமளவில் பங்கேற்றனர். [6]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|
2012 | கும்கி | பொம்மன் | வெற்றி: விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) | |
2013 | இவன் வேற மாதிரி | குணசேகரன் | ||
2014 | அரிமா நம்பி | அர்ஜுன் கிருஷ்ணா | ||
2014 | சிகரம் தொடு | முரளி பாண்டியன் | ||
2014 | வெள்ளக்கார துரை | முருகன் | ||
2015 | இது என்ன மாயம் | அருண் | ||
2016 | வாகா | வாசு | ||
வீர சிவாஜி | சிவாஜி | |||
2017 | சத்திரியன் | குணா | ||
நெருப்புடா | குரு | |||
2018 | பக்கா | பாண்டி | ||
2019 | ||||
2020 | அசுரகுரு | சக்தி | ||
2021 | புலிக்குத்தி பாண்டி | புலி பாண்டி |
மேற்கோள்கள்
- ↑ https://www.imaphsy.com/entertainment/movies/taanakkaran-review-vikram-prabhu-a-true-story-of-police-training-academy/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://expressbuzz.com/entertainment/news/prabhu%E2%80%99s-son-makes-his-big-debut/293501.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-09-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120908044312/http://articles.timesofindia.indiatimes.com/2011-06-24/news-interviews/29698513_1_elephants-wild-tuskers-fresh-face.
- ↑ http://www.thehindu.com/arts/cinema/article2153427.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130722153952/http://articles.timesofindia.indiatimes.com/2012-02-29/news-interviews/31110559_1_sa-chandrashekar-vijay-ilayathalapathy.
- ↑ http://www.indiaglitz.com/channels/tamil/events/11677.html