கும்கி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கும்கி
கும்பி பட சுவரொட்டி
இயக்கம்பிரபு சாலமன்
தயாரிப்புலிங்குசாமி
சுபாஷ் சந்திர போஸ்
திரைக்கதைபிரபு சாலமன்
இசைஇமான்
நடிப்புவிக்ரம் பிரபு
லட்சுமி மேனன்
ஒளிப்பதிவுசுகுமார்
படத்தொகுப்புஎல். கே. வி. தாசு
கலையகம்திருப்பதி பிரதர்சு
விநியோகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுதிசம்பர் 14, 2012 (2012-12-14)
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கும்கி 2012ல் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இது பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவின் அறிமுகப்படமாகும். இப்படம் தெலுங்கில் கஜராஜூ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் லட்சுமி மேனன் தமிழில் அறிமுகமானார் ஆனால் இவரின் அடுத்த படமான சுந்தர பாண்டியன் படம் முதலில் வெளிவந்தது. இப்படத்தில் தம்பி ராமையா விக்ரம் பிரபுவின் மாமாவாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.[1][2][3]

கதை

பொம்மன் யானைப்பாகன், பொம்மனின் மாமா கோத்தலி (பொம்மன் கூடவே இருந்து வருபவர்), பொம்மனின் உதவியாள் உண்டியல். தன் யானையான மாணிக்கத்தை திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற வாடகைக்கு விடுவதன் மூலம் பொம்மனின் வாழ்வு நடக்கிறது. ஆதிகாடு என்ற பழமையை கடைபிடிக்கும் கிராமத்தில் கொம்பன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்கிறது, கொம்பனால் பயிர்களுக்கும் உயிர்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது. அரசாங்க அதிகாரிகளின் உதவியில்லாமல் தாங்களே கொம்பனை சமாளித்து அறுவடையை எச்சேதமும் இல்லாமல் செய்ய கிராம பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள். இதற்காக கும்கி யானையை அறுவடை சமயத்தில் கொண்டு வந்து கொம்பனை அடக்க முடிவு செய்கிறார்கள். கும்கி யானைக்கு உரியவர் தவிர்க்க இயலாமல் வெளியூர் சென்றதால் அதற்கு பதில் 2 நாட்கள் மாணிக்கத்தை கும்கி யானையாக நடிக்க வைக்க பொம்மன் முடிவு செய்கிறார். பொம்மன், மாணிக்கம், கோத்தலி, உண்டயலுடன் ஆதிகாட்டை அடைகிறார். அங்கு கிராமத் தலைவனின் மகள் அல்லியைக் கண்டதும் காதல் கொள்கிறார். அக்கிராம மக்கள் வெளியூர் மக்களைத் திருமணம் செய்வதில்லை. திருமணம் அக்கிராமத்தில் உள்ளவர்களுக்குள்ளேயே தான் நடக்கும். 200 ஆண்டுகளுக்கு மேலாக இப்பழக்கம் அங்கு உள்ளது. அல்லி பொம்மனை விரும்ப ஆரம்பிக்கிறாள். இச்சமயத்தில் கொம்பன் அக்கிராமத்தைத் தாக்குகிறது கோத்தலியும் உண்டியலும் கொம்பனால் இறக்கிறார்கள் பொம்மன் காயமடைகிறார். மாணிக்கத்திற்கும் கொம்பனுக்கும் நடந்த சண்டையில் கொம்பன் இறக்கிறது, சண்டையில் மாணிக்கத்திற்கு பலமான காயமேற்பட்டு அதுவும் இறக்கிறது. தன் காதலால் கோத்தலி, உண்டியல் மாணிக்கத்தை இழந்ததை எண்ணி பொம்மன் அழுகிறார். கிராமத் தலைவர் அல்லிக்கும் பொம்மனுக்கும் உள்ள காதலை அறிகிறார்.

கதை மாந்தர்கள்

பாடல்கள்

பாட்டு பாடலாசிரியர் பாடியவர்
சொல்லிட்டாளே அவ காதல யுகபாரதி ரன்ஜித், சிரேயா கோசல்
சொய் சொய் யுகபாரதி மகிழினி மணிமாறன்
அய்யய்யோ ஆனந்தமே யுகபாரதி அரிசரன்
யெல்லா ஊரும் யுகபாரதி இமான், பென்னி தயால்
ஒன்னும் புரியல் யுகபாரதி இமான்
நீ எப்போ புள்ள யுகபாரதி அல்போன்சு யோசப்

மேற்கோள்கள்

  1. "Kumki - Movie Reviews, Story, Trailers, Wallpapers, Tamil, Pictures". Movies.sulekha.com. பார்க்கப்பட்ட நாள் 2012-12-19.
  2. "Tamil director, Linguswamy signs three film deal". CNN IBN. 2011-07-11. Archived from the original on 2011-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-12-19.
  3. TNN 24 Jun 2011, 12.39pm IST (2011-06-24). "Prabhu's son turns hero". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 2012-09-08. பார்க்கப்பட்ட நாள் 2012-12-19.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)

வார்ப்புரு:பிரபு சாலமனின் திரைப்படங்கள் வார்ப்புரு:லிங்குசாமி இயக்கியுள்ள திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=கும்கி_(திரைப்படம்)&oldid=32414" இருந்து மீள்விக்கப்பட்டது