வாஞ்சிநாதன் (திரைப்படம்)
வாஞ்சிநாதன் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | சாஜி கைலாஸ் |
தயாரிப்பு | எம். காஜாமைதீன் |
கதை | லியாகத் அலி கான் |
இசை | கார்த்திக் ராஜா (songs) ராஜாமணி (score) |
நடிப்பு | விசயகாந்து சாக்ஷி சிவானந்த் ரம்யா கிருஷ்ணன் பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | எசு. சரவணன் |
படத்தொகுப்பு | எல். பூமிநாதன் |
கலையகம் | ரோஜா நிறுவனம் |
வெளியீடு | 14 சனவரி 2001 |
ஓட்டம் | 163 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வாஞ்சிநாதன் (Vaanchinathan) திரைப்படம் ஷாஜிகைலாஷ் தமிழில் இயக்குநராக அறிமுகமாகி விஜயகாந்த் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் அதிரடி திரைப்படம் ஆகும். இதற்கு லியாகத் அலிகான் வசனம் எழுதியிருந்தார். விஜயகாந்த், சாக்ஷி சிவானந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கதை
வாஞ்சிநாதன் (விஜயகாந்த்) குஜராத்திலிருந்து மாற்றலாகிவரும் வழக்கமான காவல் அதிகாரி. அவர் சட்டத்தால் தண்டிக்கமுடியாத, சட்டத்தைப் பயன்படுத்தி தீய வழிகளில் செயல்படுபவர்களை, தன் சொந்த சட்டத்தை கையில் எடுத்து சான்றுகள் இல்லாமல் தண்டிக்கிறார். சிதம்பரம் (பிரகாஷ் ராஜ்) தன் சொந்த பத்திரிக்கை வளர்ச்சிக்காக அரசியலில் குழப்பத்தை விளைவித்து குழப்பத்தை வளர்ப்பதன் மூலம் பத்திரிக்கை விற்பனையை அதிகரித்து ஆதாயம் அடைகிறார். ஒரு பகல் பொழுதில் வாஞ்சிநாதன் கண் முன்னையே கொலை செய்து தன்னை கைது செய்ய முடியாது என சவால் விடுவது மூலம் வாஞ்சிநாதனுக்கும் சிதம்பரத்துக்கும் இடையில் தனிப்பட்ட பகை உண்டாகிறது.
நடிகர்கள்
- விஜயகாந்த்
- சாக்ஷி சிவானந்த்
- ரம்யா கிருஷ்ணன்
- பிரகாஷ் ராஜ்
- அஞ்சு அரவிந்த்
- நாசர்
- ராஜ்கபூர்
- கலாபவன் மணி
- பிரமிட் நடராஜன்
- டெல்லி கணேஷ்
- தியாகு
தயாரிப்பு
இத்திரைப்படத்தில் முதலில் சுரேஷ் கோபியிடம் தான் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டது, பின்னர் நேரமின்மை காரணமாக பிரகாஷ் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[1] அதே போல் ஷில்பா ஷெட்டி தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அவர் தொடர் வேலைப்பளு காரணமாக வெளியேறினார்.[2] விஜயகாந்த், ரம்யா கிருஷ்ணன் பங்கேற்கும் சண்டைக்காட்சி ஏவி.எம் ல் படமாக்கப் பட்டது.[3] பாடல் காட்சிகள் நியுஸிலாந்தில் படமாக்கபட்டது.[4]
வெளியிடு
படம் வெளியான பொழுது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. "கடைசியில் மசாலாவை வைத்தே பசியை அடக்கியது போல" என ரெட்ஃப் எழுதியது.[5] அதேசமயம் "விஜயகாந்தின் முந்தைய படங்களிலிருந்து காட்சிகளை உருவி ஒரு படம்" என லொள்ளு எக்ஸ்பிரஸ் எழுதியிருந்தது. இந்து " லியாகத் அலிகானின் கதை திரைக்கதை சுறுசுறுப்பான அதிரடி கலவை"எனவும் "காட்சி அமைப்பு பார்த்திபன் நடித்த அபிமன்யூ படத்தையும் விஜயகாந்த் நடித்த வல்லரசு படத்தையும் ஞாபகபடுத்துகிறது" என்றும் எழுதியது.[6] படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் கடும் நஷ்டம் அடைந்தனர்.[7] படம் வெளியான பின்பு இரு கதாநாயகிகளின் காட்சிகளை நேரத்தை குறைப்பதற்காகவும் எதிர்ப்பை சம்பாதிக்கும் எனவும் காரணம் காட்டி நீக்கினர் என வதந்தி பரவியது.[8][9]
பாடல்கள்
விஜயகாந்தின் அலெக்ஸாண்டர் படத்திற்கு பின் கார்த்திக் ராஜா இசையமைத்த இரண்டாவது படம்.[10]
- முத்தமிட வேண்டும்
- சிரிக்கும் சிரிப்பிலே
- அமுல் பேபி
மேற்கோள்கள்
- ↑ "Prakashraj pips Suresh Gopi at the post". Web.archive.org. 2004-10-22 இம் மூலத்தில் இருந்து 22 October 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041022010429/http://www.chennaionline.com/reeltalk/dec043.asp. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ "rediff.com, Movies: Gossip from the Southern film industry". Rediff.com. 2000-08-11. http://www.rediff.com/movies/2000/aug/11ss.htm. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ "Vaanchinathan". Web.archive.org. 2001-03-09 இம் மூலத்தில் இருந்து 9 March 2001 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20010309203444/http://www.chennaionline.com/location/vanchi.asp. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ "Tamil Cinema 2000". Cinematoday2.itgo.com. http://cinematoday2.itgo.com/sHot%20News%20Just%20for%20U.htm. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ "rediff.com, Movies: The Rediff Review: Vanchinathan". Rediff.com. 2001-01-25. http://www.rediff.com/movies/2001/jan/25vanchi.htm. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ "Film Review: Vanchinathan". The Hindu. 2001-02-09 இம் மூலத்தில் இருந்து 2016-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160123093354/http://www.thehindu.com/2001/02/09/stories/09090223.htm. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ "TAMIL CINEMA 2000". Cinematoday2.itgo.com. http://cinematoday2.itgo.com/Hot%20News%20Just%20for%20U771.htm. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ "Chinna". Cinematoday2.itgo.com. http://cinematoday2.itgo.com/Hot%20News%20Just%20for%20U031.htm. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ "Priyanka Chopra". Cinematoday2.itgo.com. http://cinematoday2.itgo.com/Hot%20News%20Just%20for%20U888.htm. பார்த்த நாள்: 2016-01-20.
- ↑ Raaga.com. "Vanchinathan Songs - Tamil Movie Songs". Raaga.com. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0000317. பார்த்த நாள்: 2016-01-20.