நித்யா ராம் (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நித்யா ராம்
Nithya Ram in 'Nandini'.jpg
பிறப்பு31 சனவரி 1990 (1990-01-31) (அகவை 34)
பெங்களூர், கர்நாடகா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2010-2020
அறியப்படுவதுநந்தினி
பெற்றோர்கே.எஸ். ராமு (தந்தை)
வாழ்க்கைத்
துணை
கௌதம் (தி. 2019)
உறவினர்கள்ரச்சிதா ராம் (இளைய சகோதரி)

நித்யா ராம் (Nithya Ram) என்பவர் தென் இந்தியா மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடிக்கும் நடிகை ஆவார். இவர் 2011ஆம் ஆண்டு கன்னடத் தொடர் மூலம் நடிப்புத் துறைக்கு வந்தார். 2017ஆம் ஆண்டு இவர் நடித்த நந்தினி என்ற வெற்றி தொடர் மூலம் தென் இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். விஜய்/Nithya Ram/9962446579

ஆரம்பகால வாழ்க்கை

நித்யா ராம் ஒரு கலைக் குடும்பத்திலிருந்து நடிப்பு துறைக்கு வந்தவர். இவரின் தந்தை கே.எஸ் ராமுவும், சகோதரி ரச்சிதா ராம்[1] ஆகியோரும் தொன்மையான நடனக் கலைஞர்கள் ஆவார்கள். இவரும் நடனக்கலை பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்று சில காலம் பணியாற்றினார், ஆனால் நடிப்பின் மீது வைத்து இருந்த ஆர்வத்தால் நடிப்புத்துறைக்கு வந்தார்.

நடிப்புத்துறை

2011ஆம் ஆண்டு ஜீ கன்னடத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பென்கியல்லி அரலிடா ஹூவு என்ற தொடரில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த தொடரில் துணை கதாபாத்திரத்தில் இவரின் சகோதரி நடித்துள்ளார். 2012ஆம் ஆண்டு தமிழ் தொடரான அவள் என்ற தொடரில் ஷாலினி என்ற காதாபாத்திரம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவருடன் சஞ்சீவ், லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற பல தமிழ் நடிகர்கள் நடித்துள்ளார்கள். இதை தொடர்ந்து 2013 ஆண்டில் கர்பூரத கோம்பே, ராஜ்குமாரி போன்ற கன்னடத் தொடர்களில் நடித்தார்.

2013ஆம் ஆண்டு முது பிடா என்ற தெலுங்கு மொழித் தொடரில் கீதா/சங்கீதா என்ற இரட்டை கதாபாத்திரம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதை தொடர்ந்து 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு அம்மா நா கோடலா[2] என்ற தெலுங்கு தொடரிலும் இரடு கனசு (2015)[3], கிரிஜா கல்யாணா (2016) போன்ற கன்னடத் தொடர்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் டிகாந்த் திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்தார் ஆனால் சில காரணங்களால் அந்தப்படத்தில் நடிக்கவில்லை. 2014ஆம் ஆண்டு முட்டு மனசே என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு பூர்வி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு ஜோடியாக அரு கவுடா என்ற நடிகர் நடித்துளளார். இதுவே இவரின் முதல் திரைப்படம் ஆகும். இந்த படம் ஆகத்து 28, 2015ஆம் ஆண்டு வெளியாகி விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனத்தை பெற்றது.

2017ஆம் ஆண்டு ஒளிபரப்பான நந்தினி என்ற பிரமாண்டமான கற்பனைத் தொடரில் கங்கா/நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த தொடர் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் தமிழ், கன்னடத்தில் நேரடியாக எடுக்கப்பட்டு மலையாளம், தெலுங்கு மற்றும் வங்காளம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. பிரபல இயக்குநரும், நடிகருமான ராஜ்கபூர் இயக்கினார். இந்த தொடரில் இவருடன் குஷ்பூ, மாளவிகா வேல்ஸ், ராகுல் ரவி, ரியாஸ் கான், விஜயகுமார் போன்ற பலர் நடித்து உள்ளார்கள். இந்த தொடரின் இரண்டாம் பாகம் கன்னடம், தெலுங்கு மொழிகளில் தற்போதுவரை ஒளிபரப்பாகிறது.

2019ஆம் ஆண்டு லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தமிழ்த் தொடரில் டிசி நித்யா என்ற ஒரு சிறப்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் அடுக்களையில் பணியுண்டு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கின்றார்.

தொலைக்காட்சி

ஆண்டு பெயர் கதாபாத்திரம் மொழி அலைவரிசை குறிப்புகள்
2010 பெங்கியல்லி அரளித ஹூவு மல்லி கன்னடம் ஜீ கன்னடம்
2012–2013 அவள் ஷாலினி தமிழ் விஜய் தொலைக்காட்சி
2013 கர்பூரத கோம்பே ஸ்ரவாணி கன்னடம் ஸ்டார் சுவர்ணா
ராஜ்குமாரி ஜீ கன்னடம்
2012–2014 முத்து பிடா கீதா/சங்கீதா தெலுங்கு ஜீ தெலுங்கு
2014–2017 அம்மா நா கோடலா மதுமிதா சைத்து
2015 இரடு கனசு கன்னடம்
2016 கிரிஜா கல்யாணா பார்வதி கலர்ஸ் சூப்பர்
2017–2018 நந்தினி பகுதி 1 கங்கா/நந்தினி தமிழ்
கன்னடம்
சன் தொலைக்காட்சி
உதயா தொலைக்காட்சி
மலையாளம்
தெலுங்கு
வங்காளம்
(மொழி மாற்றம்)
2018-ஒளிபரப்பில் நந்தினி பகுதி 2 கங்கா/நந்தினி கன்னடம் உதயா தொலைக்காட்சி தெலுங்கு
(மொழி மாற்றம்)
2017–2018 அசத்தல் சுட்டீஸ் தலைவர் தமிழ் சன் தொலைக்காட்சி
கில்லாடி கிட்ஸ் கன்னடம் உதயா தொலைக்காட்சி
2018 சவாலிகே ஸ்யே தொகுப்பாளர்
மசாலா கஃபே தலைவர் தமிழ் சன் லைப்
2019–ஒளிபரப்பில் லட்சுமி ஸ்டோர்ஸ் டிசி நித்யா சன் தொலைக்காட்சி

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2015 முத்து மனசே பூர்வி கன்னடம்
2019 அடுக்களையில் பணியுண்டு அறிவிக்கப்படும் மலையாளம் படப்பிடிப்பில்

விருதுகள்

ஆண்டு விருது பரிந்துரை தொடர் மொழி முடிவு
2018 சன் குடும்பம் விருதுகள் சிறந்த ஜோடி நந்தினி பகுதி 1 தமிழ் Won
தேவதைகள் விருது Won
சிறந்த கதாநாயகி Won
கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த நடிகை Nominated

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நித்யா_ராம்_(நடிகை)&oldid=23620" இருந்து மீள்விக்கப்பட்டது