வைதேகி கல்யாணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வைதேகி கல்யாணம்
இயக்கம்மணிவாசகம்
தயாரிப்புராஜேஸ்வரி மணிவாசகம்
பி. எஸ். மணி
கதைமணிவாசகம்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பி. அகமத்
படத்தொகுப்புஎல்.கேசவன்
கலையகம்ராஜ்புஷ்பா பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 11, 1991 (1991-07-11)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வைதேகி கல்யாணம் (Vaitheki kalyanam) 1991 ஆம் ஆண்டு சரத்குமார் மற்றும் ரேகா நடிப்பில், மணிவாசகம் இயக்கத்தில், தேவா இசையில் வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2]

கதைச்சுருக்கம்

ராஜமாணிக்கம் (சரத்குமார்) கிராமத்தின் தலைவர். அவர் அந்தக் கிராம மக்களின் மரியாதைக்குரியவராக இருக்கிறார். அவருக்கு கௌரி மற்றும் வைதேகி என்ற இரு மகள்கள். கௌரியின் கணவன் மது அருந்துபவனாகவும் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்துபவனாகவும் இருக்கிறான். எனவே இளைய மகள் வைதேகிக்கு நல்ல மாப்பிள்ளையாகப் பார்த்துத் திருமணம் செய்துவைக்க எண்ணுகிறார் ராஜமாணிக்கம். வைதேகி கல்லூரியில் படிக்கிறாள். கல்யாணமும் (ராமர்ஜூன்) வைதேகியும் காதலர்கள். ராஜமாணிக்கத்திடம் வேலை செய்யும் சின்னசாமியின் (டெல்லி கணேஷ்) மகன்தான் கல்யாணம் . அந்தக் கிராமத்திற்கு புதிதாக வரும் மருத்துவர் கிருஷ்ணமூர்த்திக்கு (இளவரசன்) மருத்துவமனை அமைத்துக்கொள்ள இடம் தருகிறார் ராஜமாணிக்கம். வைதேகியோடு ஊரைவிட்டுச் சென்று திருமணம் செய்ய நினைக்கிறான் கல்யாணம். கணவனை இழந்து தன் மகனுடன் வசிக்கும் பள்ளி ஆசிரியை வசந்தி (ரேகா) கல்யாணத்திடம் வைதேகியை ராஜமாணிக்கத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறுகிறாள்.

கடந்த காலக் கதை: ராஜமாணிக்கம் ஒரு நிறுவனத்தில் மேலாளாராக பணிபுரிகிறார். திருமணமான ராஜமாணிக்கத்தை வசந்தி நேசிக்கிறாள். அவள் காதலை ஏற்கமறுக்கும் ராஜமாணிக்கத்திடம் அவரையே திருமணம் செய்துகாட்டுவதாக சவால் விடுகிறாள். ஒருநாள் விபத்தில் சிக்கும் வசந்தியை மருத்துவமனையில் சேர்த்துக் காப்பாற்றுகிறார் ராஜமாணிக்கம். அவரின் நல்லகுணத்தைப் புரிந்துகொள்கிறாள் வசந்தி. வைதேகிக்கு அவளே ஆசிரியையாக இருந்து கற்பிக்கிறாள்.

ராஜமாணிக்கம் தன் மகள் வைதேகிக்கும் மருத்துவர் கிருஷ்ணமூர்த்திக்கும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார். கிருஷ்ணமூர்த்தி பெண்களிடம் தவறாக நடக்கக்கூடியவன். வைதேகி யாரைத் திருமணம் செய்தாள்? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் காளிதாசன்.[3][4]

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 சூட்டுதான் சூட்டுதான் எஸ். பி. பாலசுப்ரமணியன், சித்ரா 4:31
2 மத்தளம் தட்டுங்கடி மலேசியா வாசுதேவன், சித்ரா 4:10
3 கல்யாணம் கல்யாணம் சுனந்தா 4:18
4 தேன் தூவும் வசந்தம் மனோ, சித்ரா 4:45
5 பாஞ்சாலி கிளியே கங்கைஅமரன் 4:40

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வைதேகி_கல்யாணம்&oldid=37909" இருந்து மீள்விக்கப்பட்டது