திடீர் கண்ணையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திடீர் கண்ணையா
Thideerkannaiya.jpg
பிறப்பு1936[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்புநவம்பர் 17, 2013[1]
அயனாவரம், சென்னை, தமிழ்நாடு
பணிகுணச்சித்திர நடிகர்

திடீர் கண்ணையா (இறப்பு: 17 நவம்பர் 2013) தமிழ்த் திரைப்பட, நாடக நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் ஆவார்.

கண்ணையா சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். நாடகங்களில் திடீர் என்று தோன்றி வசனம் பேசும்படியாக இவர் அதிகமாக நடித்தால் 'திடீர்' கண்ணையா என்று பெயர் பெற்றார்.[2] இயக்குநர் கே. பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். இவர் ஐநூற்றிற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

குடும்பம்

கண்ணையாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர்.[3]

தொழில்

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். "அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமானார். சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டே படங்களில் நடித்து வந்தார்.[4]

நாடகம்

நாடகத் துறையில் இருந்தபோது அதில் வரும் திருப்புமுனைக் காட்சிகளில் கண்ணையா தோன்றுவதாகக் காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தது. இதனால் அவர் "திடீர்' கண்ணையா என்றழைக்கப்பட்டார்.[5]

திரைப்படங்கள்

கே. பாலசந்தர் இயக்கிய, அவள் ஒரு தொடர்கதை அவர் நடித்த முதல் படமாகும். அபூர்வ ராகங்கள், ஏட்டிக்குப் போட்டி, என்ன பெத்த ராசா, வெள்ளை ரோஜா, ப்ரியா, அபூர்வ சகோதரர்கள், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

மறைவு

இவர் மாரடைப்பு காரணமாக, நவம்பர் 17, 2013 அன்று தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 https://www.vikatan.com/news/cinema/21405.html
  2. நடிகர் 'திடீர்' கண்ணையா காலமானார் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், TamilPlex, நவம்பர் 19, 2013
  3. "பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் கண்ணையா மரணம்!". Archived from the original on 2013-11-22. பார்க்கப்பட்ட நாள் 2013-11-18.
  4. 500 படங்களில் நடித்தவர் நடிகர் திடீர் கண்ணையா மரணம் உடல் தகனம் நாளை நடக்கிறது
  5. நடிகர் "திடீர்' கண்ணையா காலமானார்
"https://tamilar.wiki/index.php?title=திடீர்_கண்ணையா&oldid=23771" இருந்து மீள்விக்கப்பட்டது