மணிவாசகம்
மணிவாசகம் (Manivasagam, இறப்பு: 2001) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றினார்.[1]
தொழில்
மணிவாசகம் தனது திரைப்பட வாழ்க்கையை நம்ம ஊரு பூவாத்தா (1990) படத்திலிருந்து தொடங்கினார். அதைத் தோடர்ந்து கிராம அதிரடி நாடகப்படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். பெரும்பாலும் நடிகர் சரத்குமாருடன் பணிபுரிந்தார். இவர் அடிக்கடி சொந்தமாக படங்களைத் தயாரித்தார். மேலும் இவரது மனைவி ராஜேஸ்வரி மணிவாசகத்தை தலைமை தயாரிப்பாளராக குறிப்பிட்டார். இவரது படமான நாடோடி மன்னன் (1995) தோல்வியானது, இவரை படங்களை இயக்குவதில் இருந்து சிலகாலம் ஒதுங்கி இருக்க வைத்தது. இவரது இறுதி படமான மாப்பிள்ளை கவுண்டர் (1997) படமானது எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக மோசமாக தோல்வியுற்றது.[2] மணிவாசகம் 2001 இல் இறந்தார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
அட்டகத்தி தினேஷ் நடித்த களவாணி மாப்பிள்ளை படத்தின் மூலம் இவரது மகன் காந்தி இயக்குநராக அறிமுகமானார்.[4]
திரைப்படவியல்
- இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
1990 | நம்ம ஊரு பூவாத்தா | |
1991 | வைதேகி கல்யாணம் | |
1992 | பெரிய கவுண்டர் பொண்ணு | |
1992 | பட்டத்து ராணி | |
1993 | ராக்காயி கோயில் | |
1993 | கட்டப்பொம்மன் | |
1994 | ஜல்லிக்கட்டுக்காளை | இயக்குனர் |
1995 | மருமகன் | இயக்குனர் |
1995 | நாடோடி மன்னன் | |
1997 | மாப்பிள்ளை கவுண்டர் |
- தயாரிப்பாளர்
- பட்டுக்கோட்டை பெரியப்பா (1994)
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-21. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.
- ↑ "Archived copy". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 16 October 2015.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://www.cooljilax.com/2001/stat2001.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-03-30.