நம்மவர்
நம்மவர் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். சேதுமாதவன் |
தயாரிப்பு | ஆர். வெங்கடராம ரெட்டி |
கதை | கமலஹாசன் |
இசை | மகேஷ் மாதவன் |
நடிப்பு | கமலஹாசன் கௌதமி நாகேஷ் ஸ்ரீவித்யா கரண் |
ஒளிப்பதிவு | மது அம்பாட் (Madhu Ambat) |
படத்தொகுப்பு | என். பி. சதீஷ் |
கலையகம் | சந்தமாமா விஜயா கம்பைன்ஸ் |
வெளியீடு | நவம்பர் 2, 1994 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நம்மவர், (Nammavar) என்பது 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தை கே. எஸ். சேதுமாதவன் இயக்க கமலஹாசனும் கௌதமியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளர் மகேஷ் மாதவன். இப்படம் வசூலில் வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் நல்லதொரு படமென பலராலும் பாராட்டப்பட்டது.
கதைச் சுருக்கம்
செல்வம் (கமலஹாசன்) கல்லூரியின் புதிய வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் துணை முதல்வர். அக்கல்லூரியின் செல்வாக்கு படைத்த ஒரு பெரிய மனிதனின் மகன் ரமேஷ் (கரண்). பெற்றோரின் அன்பும் வழிகாட்டலும் சரியான முறையில் கிடைக்காத ரமேஷ் கல்லூரியில் பாதை மாறிச் செல்லும் ஒரு முரட்டு மாணவன். தன்னோடு போகாமல் தனது பணத்தாலும் செல்வாக்காலும் பிற மாணவர்களையும் கெடுக்கிறான், தனக்குப் படியாதவர்களைப் பாடாய்படுத்துகிறான். செல்வத்திற்கும் ரமேஷுக்கும் நடக்கும் மோதல்களும் இறுதியாக செல்வம் அவனை வழிப்படுத்தி, கல்லூரியை எப்படி சரிப்படுத்துகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.
நடித்தவர்கள்
- கமலஹாசன் செல்வமாக
- கௌதமி வசந்தியாக
- நாகேஷ் திரு. ராவ் ஆக
- ஸ்ரீவித்யா
- கரண் ரமேஷாக
- செந்தில்
- கோவை சரளா
- சந்தான பாரதி
- டெல்லி கணேஷ்
- பிருந்தா நிர்மலாவாக
படப்பிடிப்பின் முதற்காட்சி
இப்படத்தின் முதல் காட்சியாக, கரண் கல்லூரி மாணவனாகவும் கமலகாசன் ஆசிரியராகவும் வரும் வகுப்பறைக் காட்சி விஜயவாகினி ஸ்டியோவில் படமாக்கப்பட்டது.[1]
விருதுகள்
- இப்படத்தில் நடித்த நாகேஷுக்கு, சிறந்த குணசித்திர நடிகருக்கான தேசிய விருது[2] கிடைத்தது
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது (இரண்டாம் பரிசு) கிடைத்தது.
- 1994 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது இப்படத்திற்கு கிடைத்தது.[2]
ஒலிப்பதிவு
இப்படத்தின் 6 பாடல்களும் இசையமைப்பாளர் மகேஷ் மாதவனால் இசையமைக்கப்பட்டது. இப்படத்திற்கு இசையமைக்கும் பணியை ஏற்றுக் கொள்வதற்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் மகேஷுக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகத்தான் புற்றுநோய் உள்ளவராக கமலஹாசனின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்ற கருத்து நிலவியது.[3] மகேஷ் தான் இறந்து போவதற்கு முன் (2002), கமலஹாசனின் குருதிப்புனல், ஆளவந்தான் படங்களிக்காக இசையமைத்தார். பின்னணிப் பாடகர் சீனிவாஸ் இவரது இசையில்தான் அறிமுகமானார்.[4]
- பூங்குயில் பாடினால் - எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
- எதிலும் வாழ்வான் டா - கமலஹாசன், எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- மண்ணில் எங்கும் - முகமது ரஃபி
- சொர்க்கம் என்பது நமக்கு - ஸ்ரீநிவாஸ், சுவர்ணலதா
- உடையோடு பிறக்கவில்லை - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா
- தீம் மியூசிக் (Instrumental Theme Music)
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2007-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071015082239/http://www.hindu.com/fr/2007/08/03/stories/2007080350800100.htm.
- ↑ 2.0 2.1 "42nd National Film Awards" (PDF). திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா. http://dff.nic.in/2011/42nd_nff_1995.pdf. பார்த்த நாள்: 05 March 2012.
- ↑ http://lazygeek.net/2004/05/nammavar-was-mahesh-mahadevan-the-inspiration
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-11-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108155414/http://www.hindu.com/mp/2005/09/10/stories/2005091000340100.htm.