இரு கோடுகள்
இரு கோடுகள் | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | என். செல்வராஜ் கலாகேந்திரா |
இசை | வி. குமார் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சௌகார் ஜானகி ஜெயந்தி வி. எஸ். ராகவன் |
வெளியீடு | அக்டோபர் 2, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4682 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரு கோடுகள் (Iru Kodugal) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இரு பெண்களை மணந்த ஒரு மனிதனைச் சுற்றி இக்கதை நகர்கிறது.[2] இரு கோடுகள் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[3] இந்த விருதை பெற்ற பாலச்சந்தரின் முதல் படம் இதுவாகும்.[2] இதே பெயரிலான ஒரு மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம், கன்னடத்தில் எரடு றெக்கேகளு என்றும், தெலுங்கில் கலெக்டர் ஜானகி என்றும், இந்தியில் சன்ஜோக் என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
கதை
காசியில் ஜானகியை (சௌகார் ஜானகி) பார்க்கும் கோபிநாத் (ஜெமினி கணேசன்) அவரைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்தை கோபிநாத்தின் தாயார் ஏற்கவில்லை, இதனால் இருவரும் பிரிய நேரிடுகிறது. ஜானகி கர்ப்பமாக இருக்கிறார், ஜானகியை எந்த ஆணும் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்பதை உணர்ந்த அவரது தந்தை (வி. எஸ். ராகவன்), ஜானகியை மேற்கொண்டு படிக்கவைக்க முடிவு செய்கிறார். தமிழ்நாடு திரும்பும் கோபிநாத், ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். தனது முந்தைய திருமணத்தை மறைத்து ஜெயாவை (ஜெயந்தி) திருமணம் செய்து கொள்கிறார். இந்த இணையர் மூன்று குழந்தைகளுடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றனர். கோபிநாத் பணிபுரியும் அலுவலகத்துக்கு ஒரு புதிய ஆட்சியர் வருகிறார், அது வேறு யாருமல்ல அவரின் முதல் மனைவி ஜானகிதான்.
இருவரும் ஓரே அலுவலகத்தில் வேலைப்பார்த்துவருகின்றனர். ஜானகியின் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் ஒருவரான பாபு (நாகேஷ்) ஜானகிக்கும் கோபிநாத்துக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு வதந்தியை பரப்புகிறார். இந்த வதந்தி ஜெயாவை எட்டுகிறது. இதனால் ஜெயா முற்றிலும் கலக்கமடைகிறார். ஜானகிக்கும் கோபிநாத்துக்குமான உறவின் இரகசியத்தை ஜெயா கண்டுபிடிக்கிறார். இதனிடையே, ஜானகி, ஜெயா ஆகிய இருவரின் மகன்களான ராமு, பிரபாகர் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். ராமு மருத்துவமனையில் இறந்துவிட, பிரபாகர் உயிர் பிழைக்கிறான். ஜெயா தன் மகனை ஜானகிக்கு பரிசாக அளிக்கிறாள். ஜானகிக்கு வெளிநாட்டில் பணி கிடைத்ததால் அவர் வெளிநாடு செல்கிறார்.
நடிகர்கள்
- ஜெமினி
- ஜெயந்தி
- சவுக்கார் ஜானகி
- நாகேஷ்
- எஸ். வி. சகஸ்ரநாமம்
- வி. எஸ். ராகவன்
- எஸ். ராமா ராவ்
- ஹரி கிருஷ்ணன்
- கோகுல்நாத்
- ஜெமினி மகாலிங்கம்
- சேஷாத்திரி
- சச்சு
- சி. கே. சரஸ்வதி
- எஸ். என். லட்சுமி
- ஷோபா
- நவகுமாரி
- பார்வதி
- மாஸ்டர் பிரபாகர்
- மாஸ்டர் ஆதிநாராயணன்
- பேபி மைதிலி
- பேபி சுமதி
- கணபதிபட்
- ஜெமினி பாலு
- தனபால்
- ஆர். ஆர். கோபால்
- தன்ராஜ்
- சந்திரன்
- பரந்தாமன்
- எல். பாலு
தொழில் நுட்பக் குழு
- ஒளிப்பதிவு - என். பாலகிருஷ்ணன்
- ஒளிப்பதிவு உதவி - டி. பிலிப்ஸ், எஸ். பி. சங்கர், கே. எஸ். சடையன்
- ஒலிப்பதிவு - என். ரகுநாதன்
- உதவி = ஜகன்நாதன், கிட்டப்பா
- படத்தொகுப்பு - என். ஆர். கிட்டு
- படத்தொகுப்பு உதவி - ஆர். பி. திலக்
- கலை -ராமசாமி
- நடன அமைப்பு - பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
- அரங்க அமைப்பு - பி. ஆர். என். சாமி, ஏ. ராமானுஜம், வி. பி. ஆர். மூர்த்தி, பி. ஆர். சடகோபன்
- திரை ஓவியம் - ஆர். லோகநாதன், ஆர். செல்வராஜ்
- ஒப்பனை - எம். ராமசாமி, மன்மதராவ், சுந்தர மூர்த்தி, வீரராஜ், பாண்டியன், சுந்தரம்
- ஒப்பனை உதவி - சுப்பையா
- உடைகள் - பி. பொன்னுசாமி
- உடைகள் உதவி - மணி, அப்துல்லா
- துணை வசனம் - என். பாஸ்கரன்
- உதவி இயக்குனர்கள் - சுவாமிநாதன், மணியம், நாமக்கள் ரா. பாலு, மா. அன்பழகன்
- தயாரிப்பு - என். செல்வராஜ், பி. துரைசாமி, கிருஷ்ணன், வி. கோவிந்தராஜன்
தயாரிப்பு
இரு கோடுகள் ஜோசப் ஆனந்தன் எழுதிய அதே பெயரிலான நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.[4] பாலச்சந்தர் மற்றும் கணேசனின் முதல் கூட்டணி இதுவாகும்.[5] சௌகார் ஜானகி வேடங்களை விரும்புகிக் கேட்கும் பழக்கமற்றவர் என்றாலும், பாலச்சந்தரிடம் அப்பாத்திரத்தைக் பாத்திரம் கேட்டு பெற்றுக்கொண்டார்.[6][7] படத்தில் ஒரு காட்சியில் ஜானகியின் கதாபாத்திரம் முதலமைச்சரை சந்திக்கிறது. பாலச்சந்தர் முன்னாள் முதல்வர் சி. என். அண்ணாதுரையை (அவர் 1969 இல் இறந்தார்) காட்சிக்காகக் கொண்டுவர விரும்பினார், ஆனால் காட்சியில் அவரைக் காண்பிக்கவில்லை. மாறாக அண்ணாதுரையின் குரலை சிவகங்கை சேதுராஜனைக் கொண்டு பேசவைத்து காட்சியாக்கினார்.[8] மேலும், மேசையில் ஒரு ஜோடி கண்ணாடியும், முன்புறத்தில் ஒரு பேனாவும் காணப்படுகின்றன, இது அண்ணாதுரையை சித்தரிக்கும் நோக்கம் கொண்ட பாத்திரம் என்பதைக் குறிக்கிறது.[9]
பாடல்கள்
இப்படத்திற்கு வி. குமார் இணையத்தார், வாலி பாடல் வரிகளை எழுதினார்.[10][11]
பாடல் | பாடகர் | நீளம் |
---|---|---|
"மூன்று தமிழ் தோன்றி" | டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன், கே. சுவர்ணா | 04:58 |
"நான் ஒரு குமாஸ்தா நான் பாடுவேன் தமாசா" | டி. எம். சௌந்தரராஜன் | 02:50 |
"புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக" | கே. ஜமுனா ராணி, பி. சுசீலா | 05:04 |
"கவிதை எழுதிய" | பி. லீலா, பி. சுசீலா | 02:37 |
வெளியீடும் வரவேற்பும்
இரு கோடுகள் 2 அக்டோபர் 1969 அன்று வெளியானது.[12] இந்தியன் எக்ஸ்பிரசில் பாலச்சந்தர் நாடகத்தை நன்றாகத் தழுவி எடுத்ததற்காக அவரைப் பாராட்டியது. மேலும் முன்னணி நடிகர்களின் நடிப்பைப் பாராட்டியது.[13] மாலதி ரங்கராஜன் ஜானகியின் நடிப்பைப் பாராட்டினார்.[14] இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்தது.[15] மேலும் 1970 இல் ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கத்துடன் தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது. அதே நேரத்தில் ஜானகி சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதைப் பெற்றார்.[16][17]
மேற்கோள்கள்
- ↑ "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024.
- ↑ Murugesan, Deepauk (23 April 2011). "Trois". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304121846/http://epaper.timesofindia.com/Repository/ml.asp?Ref=VE9JQ0gvMjAxMS8wNC8yMyNBcjAzMzAw&Mode=HTML&Locale=english-skin-custom.
- ↑ Rangarajan, Malathi (2 May 2011). "The granddaddy of Tamil films". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214155455/http://www.thehindu.com/features/cinema/the-granddaddy-of-tamil-films/article1985465.ece.
- ↑ "IFFI 2019 to screen K Balachander's Iru Kodugal". 2019-11-13 இம் மூலத்தில் இருந்து 7 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220107101150/https://indianexpress.com/article/entertainment/tamil/iffi-2019-to-screen-k-balachanders-iru-kodugal-6118044/.
- ↑ Ganesh 2011, ப. 61–62.
- ↑ Shiva Kumar, S. (23 October 1983). "I never failed as an actress – Janaki". மிட் டே: pp. 36 இம் மூலத்தில் இருந்து 26 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220126150501/https://mobile.twitter.com/sshivu/status/1486294918997762048.
- ↑
- ↑ "இரு கோடுகள்: புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக..." (in ta). 2023-10-02. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1132211-iru-kodugal-movie.html.
- ↑ Srinivasan, Meera (15 September 2009). "Significant contribution to Tamil theatre, cinema". தி இந்து இம் மூலத்தில் இருந்து 14 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131214155445/http://www.thehindu.com/news/national/tamil-nadu/significant-contribution-to-tamil-theatre-cinema/article20358.ece.
- ↑ "Iru Kodugal (1969)" இம் மூலத்தில் இருந்து 18 June 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090618135407/http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0001606.
- ↑ "Iru Kodugal" இம் மூலத்தில் இருந்து 6 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190506034235/https://www.jiosaavn.com/album/iru-kodugal/7tFs-dnPabM_.
- ↑ "Iru Kodugal". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 2 October 1969. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19691002&printsec=frontpage&hl=en.
- ↑ "Cinema". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 4 October 1969. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19691004&printsec=frontpage&hl=en.
- ↑ Rangarajan, Malathi (8 March 2014). "Women of Steel". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211220093042/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/women-of-steel/article5761759.ece.
- ↑ Bharathi, Veena (13 October 2013). "Celebrating a big screen beauty". டெக்கன் ஹெரால்டு இம் மூலத்தில் இருந்து 7 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180307022628/http://www.deccanherald.com/content/362729/celebrating-big-screen-beauty.html.
- ↑ Ashok Kumar, S. R. (25 December 2006). "Still ready to act: Sowcar Janaki". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 November 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105184139/http://www.hindu.com/2006/12/25/stories/2006122502790200.htm.
- ↑ India Who's who. INFA Publications. 2000. பக். 282, 286. https://books.google.com/books?id=6TU9AAAAYAAJ&q=kodugal.
வெளி இணைப்புகள்
- 1969 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்
- இந்திய நாடகத் திரைப்படங்கள்
- வி. குமார் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். வி. சகஸ்ரநாமம் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்