த டெரரிஸ்ட்
த டெரரிஸ்ட் | |
---|---|
இயக்கம் | சந்தோஷ் சிவன் |
கதை | சந்தோஷ் சிவன் |
நடிப்பு | ஆயிஷா தக்கர்[1] கே.கிருஷ்ணா விஷ்வாஸ் அனுராதா சோனு சிசுபால் |
வெளியீடு | 1999 |
ஓட்டம் | 95 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
த டெரரிஸ்ட் (The Terrorist) திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ராஜீவ் காந்தி தற்கொலைத் தாக்குதலுடன் ஒத்தே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 1998 ஆம் ஆண்டிற்குரிய சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது இப்படத்திற்கு கிடைத்தது. [2][3]
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
விடுதலை இயக்கமொன்றில் முக்கிய உறுப்பினராக இருக்கும் பெண்ணான மல்லி (ஆயிஷா தக்கர்) அங்கிருப்பவர்களின் வேண்டுகோளுக்கிணையவும் தனது விருப்பத்தின்படியும் அரசியல் தலைவர் ஒருவரைத் தற்கொலைத் தக்குதலில் கொள்வதற்காகச் செல்கின்றார்.இவரது இத்தற்கொலைத் தாக்குதலிற்காக இந்தியாவில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில் செல்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.அதே சமயம் தனது சொந்த இடத்திலிருந்து செல்லும் வழியில் பிராமணச் சிறுவனொருவனினால் உதவி செய்யப்பட்டு அங்கிருக்கும் கண்ணிவெடிகளைத் தாண்ட உதவப்படுகின்றாள் மல்லி.அவளை அனுப்பிய பின்னர் அங்கு வரும் இராணுவத்தினரால் அச்சிறுவன் சுட்டு வீழ்த்தப்படுவதையும் உணர்கின்றாள் மல்லி.பின்னர் இந்தியாவின் வள்ளம் மூலம் வந்திறங்கும் மல்லி கிராமம் ஒன்றில் உள்ள வயோதிபரிடம் ஆராய்ச்சியாளர் என்ற பொய்யைக்கூறி அங்கு குடி கொள்கின்றாள் மல்லி.அங்கு அவளைத் தன் மகள் போல அன்பு செலுத்தும் அவ்வயோதிபர் பின்னர் அவள் கர்ப்பபிணிப் பெண் என்பதனையும் உணர்கின்றார்.இதற்கிடையில் அரசியல் தலைவரைக் கொல்வதற்கான நேரம் நெருங்கியது.அங்கிருந்து தற்கொலைத் தாக்குதலிற்கு ஆயத்தம் செய்து கொண்டு செல்கின்றாள்.இதற்கிடையில் வயோதிபரின் மனைவியும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலேயே அசைவேதும் இல்லாதிருப்பதனையும் காண்கின்றாள்.அரசியல் தலைவர் அவ்வூருக்கும் வந்திறங்குகின்றார்.அவரிடம் செல்லும் அவள் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிருக்காக தன்னுடலை வெடிப்பதனை நிறுத்துகின்றாள்.
துணுக்குகள்
- 50,000 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவில் 15 நாட்களில் வெளிவந்த திரைப்படம்.
மேற்கோள்கள்
- ↑ "Global nod for Malayalam director Santosh Sivan". Ibnlive.in.com. 2012-06-04 இம் மூலத்தில் இருந்து 2014-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140323080737/http://ibnlive.in.com/news/global-nod-for-malayalam-director-santosh-sivan/264187-71-209.html.
- ↑ "2007 Project". 28 May 2009 இம் மூலத்தில் இருந்து 23 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140323091643/http://apm.asianfilmmarket.org/eng/database/view_ppp_history.asp?order_year=2007&idx=256&no=4.
- ↑ "45th National Film Festival" இம் மூலத்தில் இருந்து 29 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029193927/http://dff.nic.in/2011/45th_NFA.pdf.