மலைக்கள்ளன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மலைக்கள்ளன்
இயக்கம்எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பானுமதி ராமகிருஷ்ணா
ஸ்ரீராம்
வெளியீடு22.07.1954
ஓட்டம்186 நிமிடங்கள்.

மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பானுமதி ராமகிருஷ்ணா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 90 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

ம. கோ. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தார்.[1]

நடிகர்கள்

நடிகர்கள்[2]
  • எம். ஜி. இராமசந்திரன் - மலைக்கள்ளன், குமார வீரன், அப்துல் ரஹீம்
  • ஶ்ரீராம் - வீரராஜன்
  • டி. எஸ். துரைராஜ் - ஏட்டு கருப்பைய்யா
  • டி. பாலசுப்ரமணியம் - சொக்கேசமுதலியார்
  • எம். ஜி. சக்ரபாணி - சப் இன்ஸ்பெக்டர்
  • இ. ஆர். சகாதேவன் - காத்தவராயன்
  • வி. எம். ஏழுமலை - சடையன்
  • எஸ். எம். திருப்பதி சாமி - குட்டிப்பட்டி ஜமீந்தார்
  • கே. துரைசாமி - வயோதிக மலைக்கள்ளன்
  • எஸ். எம். சுப்பைய்யா - மருத்துவர்
  • தாமஸ் & ராயப்பன் - போலீஸ் ஜவான்கள்
  • கன்னைய்யா - கண்ணப்பர்
  • முருகேசன் - வண்டிக்காரன்
  • சௌந்திரராஜன், வெள்ளிங்கிரி, கரீம், ஆறுமுகம், ரத்னவேலி - மலைக்கள்ளன் ஆட்கள்

நடிகைகள்
  • பி. பானுமதி - பூங்கோதை
  • பி. எஸ். ஞானம் - காமாட்சியம்மாள்
  • சுரபி பாலசரஸ்வதி - ஜானகி
  • சந்தியா - சின்னி
  • சாந்தா - செங்கமலம்
  • சாயி - அல்லி
  • சுப்புலக்ஷ்மி - வல்லி
நடனம்
  • சாயி & சுப்புலட்சுமி

மேற்கோள்கள்

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. Malaikallan (motion picture). Pakshiraja Studios. 1954. Opening credits, from 1:37 to 2:08.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மலைக்கள்ளன்&oldid=36307" இருந்து மீள்விக்கப்பட்டது