சு. மு. சிறீராமுலு நாயுடு
Jump to navigation
Jump to search
எசு. எம். சிறீராமுலு நாயுடு | |
---|---|
பிறப்பு | சுப்பராயலு முனுசாமி சிறீராமுலு நாயுடு 1910 திருச்சி |
இறப்பு | 1976 |
சிறீராமுலு நாயுடு என்றும் அழைக்கப்படும் சுப்பராயலு முனுசாமி சிறீராமுலு நாயுடு (S. M. Sriramulu Naidu, 1910-1976) என்பவர் கோயம்புத்தூரில் இருந்த ஓர் இந்திய தொழிலதிபர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 1945 இல் பட்சிராஜா ஸ்டுடியோவை நிறுவினார்.
வாழ்க்கை
கோயம்புத்தூரில் தமிழ்த் திரையுலகின் ஆரம்பகால வளர்ச்சிக்குக் காரணமான இவர், "கோயம்புத்தூர் திரைப்பட மன்னன்" என்று அழைக்கப்பட்டார். இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் படங்களை இயக்கி தயாரித்துள்ளார். அதே நேரத்தில் ஒரு கன்னட படத்தையும் தயாரித்துள்ளார். 1944 ஆம் ஆண்டில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவராக இவர் இருந்தார். அதனால் 1945 ஆம் ஆண்டு வரை தண்டனை அனுபவித்தார், பின்னர் சான்றுகள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்
- மலைக்கள்ளன் (1954)
- சபரிமலை அய்யப்பன் (1961)
விருதுகள்
- 1954 : தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான சனாதிபதியின் வெள்ளிப் பதக்கம்[1] - மலைக்கள்ளன்
- 1961 : மலையாளத்தில் மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான தகுதிச் சான்றிதழ் - சபரிமலை அய்யப்பன்[2]
மேலும் பார்க்கவும்
குறிப்புகள்
- மூலங்கள்
- Baker-turned filmmaker - The Hindu article
- Naidu: Hits & Misses - The Hindu (Randoor Guy)
- Reel-time nostalgia
- The Cinema Resource Centre (TCRC)
- மேற்கோள்கள்
- ↑ "2nd National Film Awards" (PDF). http://dff.nic.in/2011/2nd_nff_1955.pdf. பார்த்த நாள்: 24 April 2014.
- ↑ "9th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா இம் மூலத்தில் இருந்து 2 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161202115652/http://iffi.nic.in/Dff2011/Frm9thNFAAward.aspx. பார்த்த நாள்: 8 September 2011.