பசி (திரைப்படம்)
பசி | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | லலிதா (சுனிதா சினி ஆர்ட்ஸ்) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | விஜயன் ஷோபா |
வெளியீடு | திசம்பர் 21, 1979 |
நீளம் | 3785 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பசி (Pasi) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஷோபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
கதைச்சுருக்கம்
இப்படத்தின் கதை 1978இல் நடப்பதாக சித்தரிக்கப்படுகிறது. சென்னையில் சைக்கிள் ரிக்சா ஓட்டுபவரான முனியன் மற்றும் அவனது நோயாளி மனைவியும் மகள் குப்பம்மா (ஷோபா) ஆகியோர் கூவக் கரையோரம் வாழ்ந்து வருகின்றனர். குடிகார முனியனால் குடும்பம் வறுமையில் வாடுகிறது. தாய் தந்தைமீது பாசம் கொண்டவளாக குப்பம்மாள் இருக்கிறாள். குடும்ப வறுமையைப் போக்க குப்பம்மா தன் தோழியுடன் சென்று காகிதம் சேகரித்து அதைவிற்று வரும் பணத்தை தன் தாயிடம் நாளும் கொடுத்துவருகிறாள். தேனிர் கடையில் குப்பம்மாளுக்கு அறிமுகமாகிறான் சரக்குந்து ஓட்டுநரான ரங்கன் (விஜயன்). உடல் நலம் இல்லாத முனியன் தன் மகள் குப்பம்மாளிடம் பிரியாணி வாங்கிவந்து தருமாறு கேட்கிறான். கடைக்கு செல்லும் குப்பம்மாள் அங்கு பிரியாணிவாங்க பணம் போதாமல் திருப்பிக் கொண்டிருகிறான். வழியில் அவளைப் பார்த்த ரங்கன் அவளை அழைத்துச் சென்று அவளுக்கு பிரியாணி வாங்கித் தந்து பிரியாணி பொட்டளத்தையும் வாங்கித் தருகிறான். பின்னர் குப்பம்மாளை தன் சரக்குந்தில் ரங்கன் அழைத்துச் செல்கிறான். ரங்கன்மீது உள்ள நம்பிக்கையால் அவனிடம் தன்னை இழக்கிறான் குப்பம்மாள். வீட்டுக்கு வரும் குப்பம்மாளிடம் ஏன் தாமதம் என அவளின் தாய் கேட்கும்போது அவள் உண்மையை கூறிவிடுகிறாள். மானம் போனதாக கருதிய அவளின் தாய் விடிந்தபோது தொடர்வண்டி பாதையில் இறந்து கிடக்கிறாள்.
நடிகர்கள்
- ஷோபா - குப்பம்மா[2]
- விஜயன் - ரங்கன்
- டெல்லி கணேஷ் - முனியன்
- பிரவீன பாக்யராஜ் - குமுதா
- தாம்பரம் லலிதா - வல்லியம்மை
- எஸ். என். பார்வதி - ராக்கம்மா
- "பசி" சத்யா - செல்லம்மா
- செந்தில் - ஆறுமுகம் (செல்லம்மா சகோதரர்)
சிறப்பு தோற்றம்
விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது முதல் பரிசு.
- சிறப்பு பரிசு - டெல்லி கணேஷ்
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்
- சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்
- சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ் - (ஷோபா)
மேற்கோள்கள்
- ↑ "வெண்ணிற நினைவுகள்: பசித்த மனிதர்கள்". இந்து தமிழ். 15 மார்ச் 2020. https://www.hindutamil.in/news/literature/544267-vennira-ninaivugal.html. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2020.
- ↑ "'ஊர்வசி' ஷோபா... மகத்துவ நாயகி; தனித்துவ நடிகை! - நடிகை ஷோபா பிறந்தநாள் இன்று". இந்து தமிழ். 23 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582592-shoba.html. பார்த்த நாள்: 23 செப்டம்பர் 2020.
- ↑ "தேசிய திரைப்பட விருது". http://books.google.co.in/books?ei=o6TSTZTZENHOrQf55YWmCQ&ct=result&id=kh-2AAAAIAAJ&dq=gnana+oli&q=pasi#search_anchor. பார்த்த நாள்: செப்டம்பர் 4, 2014.