கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
இயக்கம்ராஜிவ் மேனன்
தயாரிப்புகலைப்புலி S. தானு
ஏ. எம். ரத்னம்
கதைராஜிவ் மேனன்
இசைஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புமம்முட்டி
ஐஸ்வர்யா ராய்
தபு
அஜித்
அப்பாஸ்
ஒளிப்பதிவுரவி கே. சந்திரன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்சிறீ சூர்யா மூவீஸ்,V. Creations
வெளியீடுவைகாசி 4, 2000
ஓட்டம்151 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (Kandukondain Kandukondain) திரைப்படம் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மேலும் இத்திரைப்படத்தில் பிரபல மலையாளத் திரைப்பட நடிகரான மம்முட்டியும்,அஜித்,ஐஸ்வர்யா ராய்,தபு,அப்பாஸ் போன்ற பலரது நடிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தினை ராஜிவ் மேனன் இயக்கியுள்ளார்.இத்திரைப்படத் தழுவல் நாவலான சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி இருந்து எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

இலங்கையில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையில் தலைமை தாங்கிய பாலா (மம்முட்டி) அங்கு நடக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட அமைதிப் படையினருக்கும் ஏற்பட்ட போரில் ஊனப்படுத்தப்படும் பாலா பின்னர் இந்திய அரசாங்கம் தமது நாட்டிற்காகப் போர் செய்தவர்களை முற்றிலும் மறந்து விட்டது என்ற குற்ற உணர்வோடு காணப்படுகின்றார்.பின்னர் மீனாட்சியை விரும்புகின்றார். ஆனால் செயற்கைக் கால்கள் பொருத்திய பாலாவை மீனாட்சி காதலிக்காது போகவே மனம் நோகின்றார் பாலா.மீனாட்சியோ சிறீகாந்தைத் (அப்பாஸ்) தனது காதலனாக ஏற்றுக்கொள்கின்றார். பின்னர் அவர்கள் இருவரும் பிரியவே மீனாட்சி பாலாவைக் காதல் கொள்கின்றார். இதற்கிடையில் மனோகருக்கும் (அஜித்) சௌம்யாவிற்கும் (தபு) ஏற்படும் காதல் அவர்கள் சேர்ந்தார்களா இல்லையா எனத் திரைப்படம் நகர்கின்றது.

வெளி இணைப்புகள்