பொய் (திரைப்படம்)
பொய் | |
---|---|
இயக்கம் | கே.பாலசந்தர் |
தயாரிப்பு | பிரகாஷ் ராஜ் |
கதை | கைலாசம் பாலசந்தர், தாமிரா (வசனம்) |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | உதய் கிரண் விமலா ராமன் கீது மோகன்தாஸ் பிரகாஷ் ராஜ் ஆதித்யா கே.பாலசந்தர் |
ஒளிப்பதிவு | பிஜு விஸ்வநாத |
கலையகம் | டூயட் மூவீஸ் |
வெளியீடு | 22 டிசம்பர் 2006 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொய் (Poi) கே.பாலசந்தர் இயக்கி தமிழ் மொழியில் 2006இல் வெளிவந்தது.[1][2] இது அவரது 101வது மற்றும் கடைசிப்படமாகும்.
கதைச்சுருக்கம்
நேர்மையான அரசியல்வாதியான வள்ளுவனாரின் ஒரே மகன் கம்பன் தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறை செல்ல நேர்கிறது. இதை எதிர்கட்சி பயன்படுத்தி அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்கிறது. இது வள்ளுவனாருக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. ஊடகங்கள் இதை பெரிதுபடுத்துகிறது. கம்பன் இப்பிரச்சனை சரியாகும் வரை நாட்டை விட்டு வெளியேற தீர்மானிக்கிறார். அவரது தாயார் வாசுகி (அனுராதா கிருஷ்ணமூர்த்திக்கு) தகவல் தெரிவித்துவிட்டு, இலங்கையிலுள்ள அவரது பெங்காலி நண்பர் பானர்ஜியுடன் ([படவா கோபி) தங்குகிறார். ஒரு நாள் கடற்கரையில் ஒரு தமிழ் இலக்கிய புத்தகத்தை அவர் கண்டுபிடிக்கிறார். அப்புத்தகம் ஷில்பா (விமலா ராமனுக்கு) சொந்தமானதாகும். இங்கே உண்மையாகவும், கற்பனை பாத்திரங்களாகவும் கதை நகர்கிறது. அந்த கற்பனை கதையில் கம்பனுக்கு தீப்பொறி என்ற தந்தை பாத்திரம் தோன்றி ஷில்பாவை காதலிக்க சொல்கிறது. காதல் மற்றும் திருமணங்கள் பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கையின் வழியில் வரும் ,போகும் என்று உணர்கிறார். மீதமுள்ள கதை அவரது வாழ்க்கை மற்றும் காதல் இடையே உணர்ச்சி மோதல் பற்றி நகர்கிறது. முடிவில் அந்த கற்பனை கதாபாத்திரம் கடைசியில் பொய் கூறியதாகக் கூறி ஒரு துயரமான முடிவை நோக்கி நகர்கிறது.
நடிகர்கள்
கம்பனாக உதய் கிரண்
ஷில்பாவாக விமலா ராமன்
ரம்யாவாக கீது மோகன்தாஸ்
ரோஷனாக ஸ்ரீதர்
விஷ்ணுவாக ஆதித்யா
வள்ளுவனராக அவினாஷ்
விதி யாக பிரகாஷ் ராஜ்
மேனகாவாக ரேணுகா
பானர்ஜியாக படவா கோபி
வாசுகியாக அனுராதா கிருஷ்ணமூர்த்தி
கே.பாலச்சந்தர் (சிறப்புத் தோற்றம்)
பாடல்கள்
பொய் | ||||
---|---|---|---|---|
ஒலிச்சுவடு
| ||||
வெளியீடு | 10 திசம்பர் 2006 | |||
ஒலிப்பதிவு | வர்சா வல்லகி கலையகம் | |||
இசைப் பாணி | திரைப்பட ஒலிச்சுவடு | |||
இசைத்தட்டு நிறுவனம் | ஈரோஸ் மியூசிக் | |||
இசைத் தயாரிப்பாளர் | வித்தியாசாகர் | |||
வித்தியாசாகர் காலவரிசை | ||||
|
இப்படத்தின் இசையை வித்தியாசாகர் மேற்கொண்டார்.
அழகான பொய்களே - ரஞ்சித்
என்ன தொலைத்தாய் - சித்ரா
ஹிட்லர் பெண்ணே - சுஜாதா மோகன், திப்பு
இங்கே இங்கே ஒரு பாட்டு - சங்கர் மகாதேவன்
அயகுணரே - ஹரிணி, ஸ்ரீராம் பார்த்தசாரதி
கண்டு பிடித்தேன் - கே. நாராயண்
கண்ணாமூச்சி - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
குட்டி குட்டி கவிதை - ஷாலினி
லா லா லா - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
தயாரிப்பு
இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் 75வது பிறந்த நாளில் வெளிவந்தது.[3] நடிகர்கள் ரஜினி, கமல் ,நடிகை ஜெயஸ்ரீ ஆகியோர் நடிப்பதாக பொய்யான வதந்தி ஒன்று இருந்தது.[4].[5] தெலுங்கு நடிகர் உதய் கிரண் தமிழ் மொழியில் அறிமுகமானார், மற்றும் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த விமலா ராமன் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நல தமயந்தி திரைப்படத்தில் தோன்றிய கீத் மோகன்தாஸ்க்கு இது இரண்டாவது மற்றும் கடைசி திரைப்படமாகும். கே.பாலச்சந்தர் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
வெளியீடு
முதலில் 2006 அக்டோபரில் வெளியிட திட்டமிடப்பட்டது.006,[6] விநியோகஸ்தர்கள் திரைப்படம் காலத்திற்கு ஒவ்வாத கதையாக இருப்பதாக உணர்ந்ததால் ஆரம்பத்தில் தயக்கம் காட்டினர், பின்னர், ஆஸ்கார் பிலிம்ஸ் இப்படத்தின் உரிமையை வாங்கியது.[7] இறுதியாக 2006 டிசம்பரில் வெளிவந்தது.[8]
மேற்கோள்கள்
- ↑ "Brahma of new wave Indian cinema K Balachander passes away". 24 December 2014. http://www.deccanchronicle.com/141224/entertainment-tollywood/article/%E2%80%98brahma-new-wave-indian-cinema%E2%80%99-k-balachander. பார்த்த நாள்: 5 August 2018.
- ↑ "End of an era: K. Balachander (1930-2014)". 23 December 2014. https://www.thehindu.com/features/cinema/iyakunar-sigaram-k-balachander/article6697817.ece. பார்த்த நாள்: 5 August 2018.
- ↑ "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers" இம் மூலத்தில் இருந்து 9 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140909012920/http://www.indiaglitz.com/channels/tamil/events/7755.html. பார்த்த நாள்: 5 August 2018.
- ↑ "Tamil movies : Balachandar draws distributors to Prakash Raj". http://www.behindwoods.com/features/News/News28/30-8-05/tamil-movie-news-poi.html. பார்த்த நாள்: 5 August 2018.
- ↑ "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers" இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070714180645/http://www.indiaglitz.com/channels/tamil/article/16281.html. பார்த்த நாள்: 5 August 2018.
- ↑ "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers" இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061004215428/http://www.indiaglitz.com/channels/tamil/article/25750.html. பார்த்த நாள்: 5 August 2018.
- ↑ "Tamil movies : Prakashraj sour: still no takers for Poi". http://www.behindwoods.com/tamil-movie-news/sep-06-01/09-09-06-poi.html. பார்த்த நாள்: 5 August 2018.
- ↑ "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers" இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070122183009/http://www.indiaglitz.com/channels/tamil/article/25895.html. பார்த்த நாள்: 5 August 2018.