விமலா ராமன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
விமலா ராமன்
Vimala Raman
பிறப்புசனவரி 23, 1984 (1984-01-23) (அகவை 42)
சிட்னி, ஆஸ்திரேலியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2006–இன்று
உயரம்1.68 மீட்டர்

விமலா ராமன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். கே. பாலச்சந்தர் இயக்கிய பொய் (2007) திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் அனைத்து தென்னிந்திய மொழித் திரைப்படங்களிலும், இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த விமலா, சிட்னியில் நடன ஆசிரியை ஜெயலட்சுமி கந்தையாவிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்று 2000-ஆவது ஆண்டில் அரங்கேறினார். கணினித்துறையில் பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற விமலா தரவுத்தள ஆய்வாளராகத் தொழிலாற்றுகிறார். 2006-ஆம் ஆண்டில் இவர் ஆத்திரேலிய இந்திய அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

திரையுலகில்

2004 ஆம் ஆண்டில் இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் தமிழ்ப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான விமலா ராமன் 2007 ஆம் ஆண்டில் டைம் என்ற மலையாளப் படத்தில் சுரேஷ் கோபியுடன் நடித்து மலையாளத் திரைக்கு அறிமுகமானார். நஸ்ரானி என்ற மலையாளப் படத்தில் மம்மூட்டியுடனும், மோகன்லாலுடன் காலேஜ் குமரன் படத்திலும் நடித்தார். பொய் படத்திற்குப் பின்னர் ராமன் தேடிய சீதை என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேரனுடன் இணைந்து நடித்தார். டேம் 999 என்ற பன்னாட்டு ஆங்கிலத் திரைப்படத்தில் சோகன் ராய் இயக்கத்தில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

குறி
Films that have not yet been released இதுவரை வெளிவராத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2006 பொய் சில்பா தமிழ் முதல் திரைப்படம்
2007 டைம் வைகா மேனன் மலையாளம்
பிரணயகாலம் மரியா வார்கீசு
சூரியன் மாயா
நசுரானி சேரா ஏப்பென்
ரோமியோ டாக்டர் பிரியா
2008 கல்கத்தா நியூஸ் சிமித்தா
காலேஜ் குமரன் மாதவி மேனன்
அபூர்வா லட்சுமி தேவி
ராமன் தேடிய சீதை ரஞ்சிதா தமிழ்
2009 எவரைனா எப்புதைனா மதுமிதா தெலுங்கு [2]
2010 அப்தரக்சக்கா நாகவல்லி கன்னடம்
காயம் 2 வித்யா தெலுங்கு
ரங்கா தி தொங்கா மங்கம்மா
2011 ராஜ் பிரியா
சட்டம் சிந்து
டேம் 999 மீரா ஆங்கிலம் மலையாளத்தில் மொழிமாற்றம்
2012 குளுமனாலி பிரவல்லிகா தெலுங்கு
நுவ நேனா விமலா ராமன் "தா தா தமாரா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 மும்பாய் மிரர் ஜியா இந்தி
சுக்கலாந்தி அம்மாயி சக்கநயினா அப்பாயி சமீரா தெலுங்கு
அமேசான் திருப்புமுனை மதோன்னா மலையாளம்
2015 ராஜ ராஜேந்திரா யமுனா கன்னடம்
2016 பொய் மறஞ்சு பறயாதே சுவயம்பிரபா மலையாளம்
ஒப்பம் தேவயானி [3]
2017 ஓம் நமோ வெங்கடேசையா சிறீதேவி
பத்மாவதி
தெலுங்கு [4]
2019 இருட்டு ஜின் சைக்கா தமிழ்
2022 கிராண்ட்மா பிரியங்கா
2023 அசுவின்சு ஆர்த்தி
ருத்ராங்கி மீரா பாய் தெலுங்கு
காந்தீவதாரி அர்ஜுனா டாக். பிரியா பகதூர்
2024 அந்திம தீர்ப்பு சூர்ய தேவார ரத்ன பிரபா
2025 மதராஸி செரின் தமிழ்
கே-ராம்ப் ஸ்டெப்பி தெலுங்கு சிறப்புத் தோற்றம்[5]

வலைத்தொடர்கள்

ஆண்டு பெயர் பாத்திரம் வலையமைப்பு குறிப்புகள்
2021 பப்கோவா ஆதிரா ஜீ5 [6]

விருதுகள்

  • 2004 - ஆத்திரேலிய-இந்திய அழகி 2004 விருது

மேற்கோள்கள்

  1. Vimala Raman crowned Miss India Australia (tribuneindia.com)
  2. "'Evaraina Epudaina' fame Vimala Raman looks stunning on Instagram and we have proof". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 January 2019. Archived from the original on 3 June 2021. Retrieved 31 May 2021.
  3. "Vimala Raman as Mohanlal's heroine". 24 January 2017 இம் மூலத்தில் இருந்து 7 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180807011744/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Vimala-Raman-as-Mohanlals-heroine/articleshow/50851806.cms. 
  4. "Forgotten Actress' Surfaces in Hot Avatar". 22 July 2020. Archived from the original on 2 June 2021. Retrieved 31 May 2021.
  5. "'K-Ramp' OTT release date: When and where to watch Kiran Abbavaraam And Yukti Thareja starrer romantic comedy". The Times of India. 2025-11-15. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/k-ramp-ott-release-date-when-and-where-to-watch-kiran-abbavaraam-and-yukti-thareja-starrer-romantic-comedy/articleshow/125346964.cms. 
  6. "PubGoa on Zee5: Forgotten Actress Hopes for A Career in OTT". 21 November 2020. Archived from the original on 6 May 2021. Retrieved 31 May 2021.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=விமலா_ராமன்&oldid=498529" இலிருந்து மீள்விக்கப்பட்டது