சுஜாதா மோகன்
Jump to navigation
Jump to search
சுஜாதா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சுஜாதா மோகன் സുജാത മോഹന് |
பிற பெயர்கள் | இசைக்குயில் , இசை தேவதை |
பிறப்பு | மார்ச்சு 31, 1964[1][2] திருவனந்தபுரம், இந்தியா |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகி |
இசைத்துறையில் | 1974–இன்று வரை |
சுஜாதா மோகன் (பிறப்பு: மார்ச்சு 31, 1964) ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழித் திரைப்படங்களில் ஏறத்தாழ 20000 பாடல்கள் பாடியுள்ளார். மேலும் இவர் பல விருதுகளும் பெற்றுள்ளார்.
இளமைக் காலம்
சுஜாதா மோகன் மார்ச்சு 31, 1963 ஆம் ஆண்டு, இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் லட்சுமி என்பவருக்கு, மகளாகப் பிறந்தார். இவருடைய தாத்தா டி. கே. நாராயண பிள்ளை ஆவார். இவர் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, முந்தைய திருவாங்கூர் – கொச்சி மாநில முதல் தலைமை அமைச்சராக இருந்தார்.
திருமண வாழ்க்கை
1981 ஆம் ஆண்டு கிருஷ்ணா மோகன் என்பரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சுவேதா மோகன் என ஒரு மகள் உள்ளார். இவரும் ஒரு பின்னணிப் பாடகி ஆவார்.
பெற்ற விருதுகள்
- 2001-ல் ‘தில்’ திரைப்படத்தில் இருந்து ‘உன் சமையலறையில்’ பாடலுக்கும், 1996-ல் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இருந்து ‘பூ பூக்கும் ஓசை’ பாடலுக்கும், 1993-ல் ‘புதிய முகம்’ திரைப்படத்தில் இருந்து ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ மற்றும் ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இருந்து ‘என் வீட்டு தோட்டத்தில்’ போன்ற பாடலுக்காக, சிறந்த பின்னனி பாடகிக்கான தமிழ் அரசு மாநில விருது வழங்கப்பட்டது.
- பதினொரு முறை பிலிம் கிரிட்டிக்ஸ் விருது.
- சினிமா எக்ஸ்பிரஸ் விருது.
- தினகரன் விருது.
- 1996, 1999 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கேரளா மாநில திரைப்பட விருது.
- 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான ஏசியாநெட் திரைப்பட விருது.
- 2008 – ஜி.எம்.எம்.ஏ மூலம் சிறந்த பெண் பாடகர் விருது.
- 2009 – ஸ்வராலையா யேசுதாஸ் விருது.