ஒரு வீடு இரு வாசல் (திரைப்படம்)
ஒரு வீடு இரு வாசல் (Oru Veedu Iru Vasal) 1990 இல் வெளியான இந்திய தமிழ்த் தொகைத் திரைப்படமாகும். கே. பாலசந்தர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யாமினி, வைஷ்ணவி, சூர்யா, கணேஷ், குமரேஷ் நடித்துள்ளனர்.[2] இத்திரைப்படம் இரு தனித்தனிக் கதைகளைக் கொண்டது. இரண்டிற்குமான இணைப்பு படத்தின் இறுதியில் காட்டப்படுகிறது. மூலக்கதை தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணன் எழுதிய புதினமாகும். 38 ஆவது தேசிய திரைப்பட விழாவில் இத்திரைப்படம் பிற சமூகப் பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது.
ஒரு வீடு இரு வாசல் | |
---|---|
இயக்கம் | கே. பாலசந்தர்[1] |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசாமி[2] |
கதை | அனுராதா ரமணன் (கதை 1) அனந்து (கதை 2) |
திரைக்கதை | கே’ பாலசந்தர் |
இசை | வி. எஸ். நரசிம்மன்[2] |
நடிப்பு | யாமினி கணேஷ் குமரேஷ் லிவிங்ஸ்டன் சூர்யா வைஷ்ணவி |
ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் கிஷோர் குமார் |
கலையகம் | கவிதாலயா புரொடக்ஷன்ஸ் |
விநியோகம் | கவிதாலயா புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 7, 1990[2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைக் கரு
இத்திரைப்படம் இரு தனிக்கதைகளை உள்ளடக்கியது. இரு கதைகளும் ஆணாதிக்கமிக்க இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சித்தரிக்கிறது. இரு கதைகளின் நாயகிகளும் தங்கள் கணவர்களால் படும் துன்பங்களை ஒரு எல்லைக்கு மேல் தாங்க முடியாமல் தங்களுக்கான வாழ்க்கைப் பாதையைத் துணிவுடன் தேர்ந்தெடுக்கின்றனர்.
நடிகர்கள்
- வினோதாவாக யாமினி
- சுகுமாராக குமரேஷ்.
- ஜவஹராக கணேஷ்
- லிவிங்ஸ்டன் அருண் கபூராக
- செண்பகமாக சூர்யா
- வைஷ்ணவி யமுனா
- சார்லி இளங்கோவாக
- விவேக் பன்னீர்
- கே. சிவப்பு ருக்மணியாக எஸ்.ஜெயலட்சுமி
- கவிதாலயா கிருஷ்ணன் உதவி இயக்குநர்
- சித்தாரா (விருந்தினர் தோற்றம்)
- நிழல்கள் ரவி (விருந்தினர் தோற்றம்)
- டிஸ்கோ சாந்தி (விருந்தினர் தோற்றம்)
- ஆர். சுந்தரமூர்த்தி (விருந்தினர் தோற்றம்)
- பிருந்தா (சிறப்பு தோற்றம்)
விருதுகள்
- 1991 – பிற சமுதாய சிக்கல்கள் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது
மேற்கோள்கள்
- ↑ Oru Veedu Iru Vasal, IMDb, retrieved 2008-12-13
- ↑ 2.0 2.1 2.2 2.3 Oru Veedu Iru Vasal, Cine South, archived from the original on 2011-07-21, retrieved 2008-12-13