நான் அவனில்லை (1974 திரைப்படம்)
நான் அவனில்லை | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஜெமினி கணேசன் (ஸ்ரீ நாராயணி பிலிம்ஸ்) |
திரைக்கதை | கே. பாலச்சந்தர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் லட்சுமி கமல்ஹாசன் ஜெயசுதா |
ஒளிப்பதிவு | பி. எஸ். லோகநாத் |
படத்தொகுப்பு | என். ஆர். கிட்டு |
வெளியீடு | சூன் 7, 1974 |
நீளம் | 4386 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் அவனில்லை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், லட்சுமி, கமல்ஹாசன், ஜெயசுதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1962 ஆம் ஆண்டய மராத்திய நாடகமான டு மீ நவ்ஹெச்சியை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். பலவிதமான வேடமிட்டு பல பெண்களை வசீகரித்து திருமணம் செய்யும் ஒருவனின் கதையாகும்.
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்
- லட்சுமி
- கமல்ஹாசன்
- ஜெயபாரதி
- ஜெயசுதா
- பூர்ணம் விஸ்வநாதன்
- எஸ். ஏ. அசோகன்
- தேங்காய் சீனிவாசன்
- ராஜசுலோசனா
- எம். என். ராஜம்
- லீலாவதி
- காந்திமதி
- செந்தாமரை
தயாரிப்பு
நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் தயாரித்த ஒரே திரைப்படம் இதுவாகும்.[1]
பாடல்கள்
எம். எஸ். விஸ்வநாதனால் பாடல்களுக்கு இசை இயற்றப்பட்டது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடிய "ராதா காதல் வராதா" எனும் பாடல் வரவேற்பைப் பெற்றது.[2]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "எங்கிருந்தோ வந்தால்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கண்ணதாசன் | 03:46 |
2 | "ராதா காதல் வராதா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 06:17 | |
3 | "மந்தார மலரே" | பி. ஜெயச்சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி | கண்ணதாசன், பி. பாஸ்கரன் (மலையாளம் வரிகள்) | 04:43 |
4 | "நான் சின்னஞ்சிறு" | பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ் |
கண்ணதாசன், குமார மித்ரா (இந்தி வரிகள்) | 03:20 |
5 | "இங்கே நான்" | எல். ஆர். ஈஸ்வரி, சாய்பாபா |
கண்ணதாசன் | 05:37 |
மறு ஆக்கம்
2007 ஆம் ஆண்டில் இதே பெயரில் இதே கதையில் நான் அவனில்லை (2007 திரைப்படம்) எனும் திரைப்படம் மறுபடியும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது, அத்திரைப்படத்தில் ஜீவன், சினேகா, நமிதா, மாளவிகா, ஜோதிமயி, கீர்த்தி சாவ்லா, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்திருந்தனர். நடிகை இலட்சுமி அவர்கள் மறுபடியும் அத்திரைப்படத்தில் நடித்தார்.
மேற்கோள்கள்
- ↑ "ஜெமினியின் வாடகை வீடு... ஜெயலலிதாவின் உத்தரவு..! - ஜெமினி கணேசனின் நினைவு தினப் பகிர்வு". ஆனந்த விகடன். 22 மார்ச் 2018. https://cinema.vikatan.com/tamil-cinema/119900-remembering-gemini-on-his-thirteenth-year-commemoration. பார்த்த நாள்: 27 செப்டம்பர் 2020.
- ↑ "'உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்', 'ராதா காதல் வராதா?', 'அவள் ஒரு நவரச நாடகம்', 'பொட்டுவைத்த முகமோ', 'தேன்சிந்துதே வானம்', 'நந்தா நீ என் நிலா'; - ஏகப்பட்ட வெரைட்டி... எழுபதுகளில் எஸ்.பி.பி. பாடல்கள்". இந்து தமிழ். 25 செப்டம்பர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/583513-s-p-balasubramaniam.html. பார்த்த நாள்: 29 செப்டம்பர் 2020.
வெளி இணைப்புகள்
- 1974 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- லட்சுமி நடித்த திரைப்படங்கள்
- பூர்ணம் விஸ்வநாதன் நடித்த திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்
- செந்தாமரை நடித்த திரைப்படங்கள்