சினேகா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சினேகா
Sneha at Un Samayal Arayil Press Meet.jpg
இயற் பெயர் சுகாசினி ராஜாராம்
பிறப்பு அக்டோபர் 12, 1981 (1981-10-12) (அகவை 42)
மும்பை, இந்தியா[1]
நடிப்புக் காலம் 2000 - இன்றளவும்
குறிப்பிடத்தக்க படங்கள் சத்யா/ஜனனி - பார்த்திபன் கனவு
திவ்யா - ஆட்டோகிராப்
இணையத்தளம் http://www.sneha-online.com/

சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். 2001 இல் இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 இல் என்னவளே என்ற திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

பிறப்பும் கல்வியும்

சினேகா தமிழ்நாட்டில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார்[1]. இவரின் குடும்பம் இவரின் பிறப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார். பின்னர் இவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது.[சான்று தேவை]

திரைப்பட வாழ்க்கை

சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பக்சி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெறத் தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று ஏறத்தாழ எழுபது படங்களில் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கை

2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகாவின் வடிவழகு நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் 2011 நவம்பர் 9 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.[2][2]. தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகத்து 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விகான் என்று பெயர் சூட்டினார்கள். சினேகா தமது பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

விளம்பர வடிவழகுத் தொழில்

சரவண ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ், ஆஷிர்வாட் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார். திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் பிரசன்னாவுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார், சென்னை சர்வதேச ஃபேஷன் வீக், சிட்னி ஸ்லேடன் பேஷன் வாரம் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் நடித்தார்.

பொது வாழ்வும் உதவியும்

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாளாக போராடினர். டெல்லியில் போராடிய விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெறும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.[சான்று தேவை]

நடித்த திரைப்படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சினேகா&oldid=22774" இருந்து மீள்விக்கப்பட்டது