பார்த்திபன் கனவு (2003 திரைப்படம்)
பார்த்திபன் கனவு (Parthiban Kanavu) 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கரு பழனியப்பன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்நேகா, மணிவண்ணன், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். 2003 இல் இத்திரைப்படம் எதிர்பாராத அளவு பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படம் அம்மாயி பாகுந்தி என்னும் பெயரில் தெலுங்கில் மறு ஆக்கம் செய்திருக்கிறார் ‘லவ்டுடே’ பாலசேகரன். மேலும் இப்படம் மஞ்சு பெய்யும் முன்பே என்னும் பெயரில் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.[1]
பார்த்திபன் கனவு | |
---|---|
இயக்கம் | கரு பழனியப்பன் |
தயாரிப்பு | சத்யஜோதி பிலிம்ஸ் |
கதை | கரு பழனியப்பன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | ஸ்ரீகாந்த் ஸ்நேகா மணிவண்ணன் விவேக் தேவதர்ஷினி |
வெளியீடு | 2003 |
ஓட்டம் | 172 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
நவீன இளைஞனான பார்த்திபன். (ஸ்ரீ காந்த்). ஒரு நவீனகரமான பெண்ணை (சிநேகா) சாலையில் பார்த்த கணத்திலேயே இவர்தான் தன் துணைவி என்றே எண்ணிவிடுகிறார் பார்த்திபன்.
அதே நேரத்தில் அவரது குடும்பத்தால் திருமணத்திற்காக பெண் பார்க்க வேண்டா வெறுப்பாபக செல்லும் பார்திபன், அங்கே சத்யா என்னும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அங்கே பார்த்திபனுக்கு இன்ப அதிர்ச்சியாக அவர் சாலையில் பார்த்த பெண்ணே அவர். உடனே சம்மதம் தெரிவித்து விடுகிறார். மணமும் முடிந்துவிடுகிறது. மனைவியுடன் மகிழுந்தில் வீட்டுக்குச் செல்லும்போது, எப்போதும் போல் அதே நவீனப் பெண், புன்னகையுடன் சாலையைக் கடக்கிறாள். பார்த்திபனால் அந்தக் கணத்தில் அதிர்ச்சியடைகிறான்.
விசாரிக்கும் போது தான் ஆசைப்பட்ட பெண்ணின் பெயர் ஜனனி, அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவருகிறது. அதே ஜனனி பார்த்திபனின் வீட்டெதிரே குடிவருகிறார். இதன் காரணமான சிக்கல்கள் உருவாகின்றன, அதன் முடிவு என்ன என்பது மீதிக்கதை.
பாடல்கள்
- கனாக் கண்டேனடி (பாடல்: யுகபாரதி, பாடகர்: மதுபாலகிருஷ்ணன்)
- தீராத தம் வேண்டும் (பாடல்: நா. முத்துக்குமார், பாடியோர்: மாணிக்க விநாயகம், திப்பு, தேவன்)
- பக் பக் (பாடல்: பா.விஜய், பாடியோர்: டி. எல். மகாராஜன், பலராம், மனோ, கார்த்திக், மஞ்சுளா, சந்தியா, சித்ரா, கல்யாணி)
- என்ன தவம் செய்தனை (பாடல்: கபிலன், பாடியவர்: ஹரிணி)
- என்ன செய்ய (பாடியோர்: கார்த்திக், கல்யாணி)
- வாடி மச்சினியே (பாடல்: அறிவுமதி, பாடியோர்: சிவசிதம்பரம், மாலதி)
மேற்கோள்கள்
- ↑ "சினிமாஸ்கோப் 36: அபூர்வ சகோதரிகள்". கட்டுரை (தி இந்து). 2107 சூன் 9. http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D-36-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article9722724.ece. பார்த்த நாள்: 9 சூன் 2017.