பத்மினி
பத்மினி ராமச்சந்திரன் | |
---|---|
1950-இல் பத்மினி | |
பிறப்பு | பத்மினி சூன் 12, 1932 [1] திருவனந்தபுரம், திருவிதாங்கூர் |
இறப்பு | செப்டம்பர் 24, 2006 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 74)
மற்ற பெயர்கள் | நாட்டியப்பேரொளி, பப்பிமா |
சமயம் | இந்து |
பெற்றோர் | தங்கப்பன், சரஸ்வதி, |
வாழ்க்கைத் துணை | ராமச்சந்திரன் |
பத்மினி (சூன் 12, 1932 - செப்டம்பர் 24, 2006) பிரபல இந்திய நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்றவர். நாட்டியப் பேரொளி எனப் பெயர் எடுத்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்த பத்மினியின் பெற்றோர் தங்கப்பன், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இளையவர் ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். இவர்களது பெரிய தாயாரின் கலை ஆர்வமே இவர்களை நடனத்தில் ஈடுபடச் செய்தது. பெரிய தாயாருக்கு மலாயாவில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. திருவாங்கூரில் பல தொழில் நிறுவனங்களில் இயக்குனராக இருந்தவர்.[2] மற்றொரு பெரிய தாயார் திருவாங்கூர் மகாராணியின் சகோதரரின் மனைவி.[2] திருவாங்கூர் சகோதரிகளின் சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். பத்மினி 1961 ஆம் ஆண்டு, டாக்டர் இராமச்சந்திரன் என்பவரை மணந்தார். பிறகு 1977இல் அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் குடியேறினார். அங்கு பத்மினி ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பை நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தார்.
கலையுலக வாழ்வு
பத்மினி நான்கு வயதில் நாட்டியம் ஆடப்பயின்றார். முதலில் சகோதரிகள் திருவாங்கூர் நடன ஆசிரியர் கோபிநாத்திடம் பயிற்சி பெற்றனர்.[2] கதகளி, பரதம், மணிப்புரி ஆகிய மூன்று ஆடல் கலைகளிலும் பயிற்சி பெற்றனர்.[2] பத்து வயதில் அரங்கேறி, ஏறக்குறைய 64 ஆண்டுகள் நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்டார். குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.
17 வயதில் திரையுலகில் புகுந்தார். இயக்குனர் உதயசங்கர் தனது கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் முதலில் இவர்களை நடிக்க வைத்தார்.[2][3] ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார்.[2] பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். என். எஸ். கிருஷ்ணன் தயாரித்த மணமகள் என்ற படத்தில் நடித்தார்.[2] இவை தவிர சிலோன் தியேட்டர்சின் கபாடி அரட்சகாயா என்ற சிங்களப் படத்திலும் நடனமாடினார்கள்.[2] தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். பத்மினி 250 படங்களுக்கு மேல் நடித்தார். சிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர். வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினிக்கும், வைஜயந்திமாலாவிற்கும் நடக்கும் நாட்டியப்போட்டிக் காட்சி புகழ் பெற்றது.
விருதுகள்
- சிறந்த நடிகை விருது (Film Fans Association in 1954, 1959, 1961 and 1966)
- கலைமாமணி விருது (தமிழ் நாடு அரசு, 1958)
- சிறந்த பரதநாட்டிய கலைஞர் விருது - மாஸ்கோ இளைஞர் விழா 1957.
- பிலிம் ஃபேர் விருது (1985).
- சோவியத் ஒன்றியம் அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.[சான்று தேவை]
இறப்பு
பத்மினி, 2006 செப்டம்பர் 24 ஞாயிறு இரவு மாரடைப்பால் சென்னையில் காலமானார்.[1][3]
நடித்த திரைப்படங்கள்
- வாழ்க்கை (1949)
- பவளக்கொடி (1949)
- சந்திரிகா (1950)
- காஞ்சனா (1952)
- பொன்னி (1953)
- தூக்குத் தூக்கி (1954)
- எல்லாம் இன்பமயம் (1955)
- ராஜா ராணி (1956)
- உத்தம புத்திரன் (1958)
- சம்பூரண இராமாயணம் (1958)
- ராஜா தேசிங்கு (1960)
- ஸ்ரீ வள்ளி (1961)
- அந்தமான் கைதி
- அமரதீபம்
- அரசிளங்குமரி
- அன்பு (1953)
- ஆசை மகன்
- இரு துருவம்
- இரு மலர்கள்
- இல்லற ஜோதி
- எதிர்காலம்
- எதிர்பாராதது
- ஏழை படும் பாடு
- கண் கண்ட தெய்வம்
- கண்ணின் மணிகள்
- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
- கன்னியின் காதலி
- காட்டு ரோஜா
- காவேரி
- குருதட்சணை
- குலமா குணமா
- கோடீஸ்வரன்
- சம்பூர்ண ராமாயணம்
- சிங்காரி
- சித்தி
- செந்தாமரை
- சொர்க்க வாசல்
- தங்கப்பதுமை
- திருமகள்
- திருமால் பெருமை
- திருவருட்செல்வர்
- தில்லானா மோகனாம்பாள்
- தெய்வப்பிறவி
- நாட்டிய ராணி
- நான் வணங்கும் தெய்வம்
- பக்த மார்க்கண்டேயா
- பணம்
- பாலாடை
- புனர்ஜென்மம்
- பெண் தெய்வம்
- மங்கையர்க்கரசி
- மணமகள்
- மதுரை வீரன் (1956)
- மரகதம்
- மல்லிகா
- மாங்கல்ய பாக்கியம்
- மாயாவதி
- மீண்ட சொர்க்கம்
- ராணி சம்யுக்தா
- ராஜ ராஜன்
- வஞ்சிக்கோட்டை வாலிபன்
- வியட்நாம் வீடு
- விளையாட்டுப் பிள்ளை
- வீரபாண்டிய கட்டபொம்மன்
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ 1.0 1.1 "Front Page : Queen of Tamil cinema no more". Chennai, India: The Hindu. 2006-09-26 இம் மூலத்தில் இருந்து 2007-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071022125223/http://hindu.com/2006/09/26/stories/2006092607872200.htm. பார்த்த நாள்: 2011-06-07.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "திருவாங்கூர் நடன சகோதரிகள்". பேசும் படம்: 113-117. சனவரி 1948.
- ↑ 3.0 3.1 "நாட்டியப் பேரொளி பத்மினி மறைவு" (in தமிழ்). பிபிசி. 26 செப்டம்பர், 2006. http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/09/060926_padminiobituary.shtml. பார்த்த நாள்: 2006-11-08.
வெளி இணைப்புக்கள்
- Pages containing citation needed template with unsupported parameters
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- 1932 பிறப்புகள்
- 2006 இறப்புகள்
- பரதநாட்டியக் கலைஞர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- திருவனந்தபுரம் மாவட்ட நபர்கள்
- 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்