பக்த மார்க்கண்டேயா
பக்த மார்க்கண்டேயா | |
---|---|
இயக்கம் | பி. எஸ். இரங்கா |
தயாரிப்பு | பி. எஸ். இரங்கா விக்ரம் புரொடசன்ன்ஸ் |
கதை | துறையூர் மூர்த்தி |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | வி. நாகைய்யா கே. ஏ. தங்கவேலு பாபுஜி சாய்ராம் ஆனந்த் நாகேந்திர ராவ் சுந்தரம் புஷ்பவள்ளி ராஜ்குமார் பத்மினி பிரியதர்சினி பாலசரஸ்வதி லட்சுமிகாந்தம் |
வெளியீடு | சனவரி 2, 1957 |
நீளம் | 16983 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த மார்க்கண்டேயா (Bhaktha Markandeya) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் வேறுபட்ட நடிகர்களுடன் படமாக்கப்பட்டது. இரண்டு படங்களிலும் மாஸ்டர் ஆனந்த் மார்கண்டேயனாக நடித்தார். இப்படம் 1957 இல் வெளியானது.[1][2]
கதை
குழந்தை இல்லாத மிருகண்ட மகரிசிக்கு குழந்தை பிக்கியம் கொடுக்கிறார் சிவபெருமான். ஆனால் புத்திசாலியான அவர்களின் பிள்ளையான மார்க்கண்டேயாவுக்கு 16 ஆண்டுகள் மட்டுமே ஆயுள் என்று கூறுகிறார். மார்கண்டேயன் சிவனை வரம்பற்ற பக்தியுடன் வணங்குவனாக உள்ளான். மார்கண்டேயனின் 16 வயதுக்குப் பிறகு தங்களுடன் அவன் இருக்கமாட்டானே என்ற கவலை அவர்களை ஆட்கொள்கிறது. அவர்கள் அஞ்சிய படியே மார்கண்டேயனின் 16 வது வயதின்போது, யமன் அவனது உயிரைப் பறிக்க வருகிறான். மார்க்கண்டேயனோ சிவலிங்கத்ததைப் பிடித்துக் கொண்டு சிவனை தஞ்சம் அடைகிறான். யமன் பாசக் கயிறை வீசும்போது சிவன் அங்கு தோன்றி, மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வேண்டாம் என்று அவனிடம் கூறுகிறி தன் பக்தனை மீட்கிறார். சிவனின் வரத்தால் மார்கண்டேயன் சிரஞ்சீவியாகிறான். கடவுளிடம் சரணடைவவர் மரணத்தைப் பற்றி கவலைப்பட தேவையில்லை என்கிறது கதை.
நடிப்பு
தமிழ்ப் பதிப்பு
- மார்கண்டேயனாக மாஸ்டர் ஆனந்த்
- சித்தூர் வி. நாகையா
- புஷ்பவல்லி
- கே. ஏ. தங்கவேலு
- பாபுஜி
- பத்மினி பிரியதர்சினி
- சிறீராம்
- பாலசரஸ்வதி
- சூரியகலா
- இலட்சுமிகாந்தம்
- ஆர். நாகேந்திர ராவ்
- சுந்தரம்
கன்னடப் பதிப்பு
- மாஸ்டர் ஆனந்த்
- ஆர். நாகேந்திர ராவ்
- டி. ஆர் நரசிம்ம ராஜு[3]
- திக்கி மாதவ ராவ்
- வி. நாகையா
- காமெடியன் குகூ
- எச். ஆர். அனுமந்த ராவ்
- கே. புஷபவள்ளி
- பி. இரமாதேவி
- இரகுராமையா
- சூரியகலா
- பத்மினி பிரியதர்சினி
படக்குழுவினர்
தயாரிப்பாளர் (ம)
இயக்குநர்: பி. எஸ். இரங்கா
உரையாடல்: துறையூர் மூர்த்தி (தமிழ்) சி சதாசிவியா (கன்னடம்)
படத்தொகுப்பு: பி. ஜி. மோகன், எம். தேவேந்திரநாதன்
நடன அமைப்பு: Chopra
ஒளிப்பதிவு: ஆர். வேகடாச்சரி
படப்பிடிப்பு வளாகம்: விக்ரம்[1][2]
பாடல்
தமிழ்ப் பதிப்பில்
இப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர். பாடல் வரிகளை அ. மருதகாசி எழுதினார்.[2] பாடல்களை வி. நாகையா, பின்னணிப் பாடகர்களான வி. என். சுந்தரம், பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், சிவராமன், பி. லீலா, ஏ. பி. கோமளா, கே. ஜமுனா ராணி, டி. சத்யவதி, சூலமங்கலம் இராஜேஸ்வரி, பி. சுசீலா, ஆர். பாலசரஸ்வதி ஆகியோர் பாடியுள்ளனர்.[4]
எண். | பாடல் | பாடகர் | நாளம் (நி:வி.நா) |
---|---|---|---|
1 | "ஓம் நமச்சிவாயா" | வி. நாகையா, பி. லீலா | 03:00 |
2 | "திருமாலும் பிரம்மனும் தேடியும் காணாத" | 03:38 | |
3 | "உலகமெல்லாம்" | வி. என். சுந்தரம் | |
4 | "தேவாதி தேவா" | 05:35 | |
5 | "ஆடுவதும் பாடுவதும்" | ஏ. பி. கோமளா | 06:17 |
6 | "நரகம் இதுதான்" | எஸ். சி. கிருஷ்ணன், கே. ஜமுனா ராணி | |
7 | "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" | பி. லீலா (ம) குழுவினர் | 02:40 |
8 | "மியாவ் மியாவ் மியாவ்" | எஸ். சி. கிருஷ்ணன் | |
9 | "உன்னையே நீ எண்ணிப் பார்" | சிவராமன் | 02:39 |
10 | "உலகின் முழுமுதலே, பரம்பொருளே" | டி. சத்தியவரி | 03:06 |
11 | "இரவானால் இவ்வுலகில்" | ||
12 | "சிவனே உன்னைத்தொழுது" | ||
13 | "அன்பின் உருவே நீயே" | பி. பி. சீனீவாஸ், சூலமங்கலம் இராஜேஸ்வரி | 03:09 |
14 | "ஒரு மாங்குயில்" | பி. சுசீலா | 03:26 |
15 | "இங்கும் அங்கும்" | ஆர். பாலசரஸ்வதி தேவி | |
16 | "அண்டசராசரங்கள்" | சூலமங்கலம் இராஜேஸ்வரி |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Film News Anandan (2004) (in ta). Sadhanaigal padaitha Tamil Thiraipada Varalaaru. Chennai: Sivagami Publications. http://www.newbooklands.com/new/product1.php?catid=4&&panum=94.
- ↑ 2.0 2.1 2.2 "1957 – பக்த மார்க்கண்டேயா" இம் மூலத்தில் இருந்து 11 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161011054451/http://www.lakshmansruthi.com/cineprofiles/1957-cinedetails10.asp.
- ↑ "Bhaktha Markandeya Kannada movie Scene || Narasimha Raju Comedy Scenes". https://m.youtube.com/watch?v=NhM6VtSYcEs&feature=youtu.be.
- ↑ G. Neelamegam (in ta). Thiraikalanjiyam — Part 1. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition December 2014. பக். 127.