பி. எஸ். இரங்கா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. எஸ். இரங்கா
பிறப்புபிந்திகானவிலே சீனிவாஸ் ஐயங்கார் ரங்கா
(1917-11-11)11 நவம்பர் 1917
மகதி, மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு12 திசம்பர் 2010(2010-12-12) (அகவை 93)
தேசியம் இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர்

பிந்திகானவிலே சீனிவாஸ் ஐயங்கார் ரங்கா (Bindiganavile Srinivas Iyengar Ranga) (11 நவம்பர் 1917 - 12 திசம்பர் 2010 [1] ) ஒரு இந்திய புகைப்படக் கலைஞரும், நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும் ஆவார். இவர் கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கில் பல முக்கிய திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். விக்ரம் ஸ்டுடியோஸின் உரிமையாளராகவும் இருந்தார். [2] சுமார் 87 படங்களை இயக்கி தயாரித்துள்ளார். கன்னடத்தில் ராஜ்குமார் நடிப்பில் மட்டும் 18 படங்களை இயக்கி தயாரித்துள்ளார். [3]

சுயசரிதை

கர்நாடக மாநிலத்தின் மைசூரின் மகதி கிராமத்தில் பிறந்தார். ஒரு கலைகளின் பின்னணியில் வளர்ந்த இவரது குழந்தை பருவத்திற்குப் பிறகு, பல மேடை ஆளுமைகளுடன் தொடர்பிலிருந்தார். பின்னர், புகைப்படத் துறையில் நுழைந்தார். 17 வயதில், சுயமாக பயிற்சி பெற்ற இவர் தனது சில படைப்புகளை இலண்டனில் உள்ள கலைக்கூடத்திற்கு காட்சிக்கு அனுப்பினார். மேலும், அரச புகைப்படக் கலைஞர்களின் அமைப்பில் கௌரவ சக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, இவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். மேலும் ஒளிப்பதிவுக் கலைஞரும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநருமான கிருஷ்ண கோபால் என்பவரிடம் பயிற்சி பெற்றார். பின்னர் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த ஒரு திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தயாரிப்பு நிறுவனமான விக்ரம் புரொடக்சன்ஸ் 1960கள் மற்றும் 1970களில் முக்கியத்துவம் பெற்றது. மேலும் இவருக்கு இரண்டு குடியரசுத் தலைவர் விருதுகள் உட்பட பல விருதுகள் கிடைத்தன. முதலாவது தெலுங்கில் வெளியான தெனாலி ராமகிருஷ்ணா என்ற படத்துக்காக ( என்.டி.ராமராவும் அக்கினேனி நாகேஸ்வர ராவும் நடித்திருந்தனர்) கிடைத்தது. இரண்டாவதாக கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படமான அமர்ஷில்பி ஜக்கனாச்சாரி என்றப் படத்துக்காக கிடைத்தது.

இறப்பு

சில காலமாக 'வயது தொடர்பான நோயால்' பாதிக்கப்பட்டுவந்த இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்' சிகிச்சை பெற்று வந்தார். திசம்பர் 12, 2010 அன்று தனது 93 வயதில் காலமானார். இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

விருதுகள்

  • 1957 இல் சிறந்த திரைப்படத்திற்கான அகில இந்திய விருது [4]
  • 1956 - தெலுங்கில் சிறந்த திரைப்படத்திற்கான குடியரசுத்தலைவரின் வெள்ளிப் பதக்கம் - தெனாலி ராமகிருஷ்ணா

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பி._எஸ்._இரங்கா&oldid=21133" இருந்து மீள்விக்கப்பட்டது