கே. ஏ. தங்கவேலு
Jump to navigation
Jump to search
கே. ஏ. தங்கவேலு | |
---|---|
பிறப்பு | காரைக்கால் அருணாசலம் தங்கவேலு 15 சனவரி 1917 காரைக்கால், தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 28, 1994 சென்னை, தமிழ்நாடு | (அகவை 77)
பணி | நடிகர், பாடகர் |
வாழ்க்கைத் துணை | டி. ராஜாமணி, எம். சரோஜா |
கே. ஏ. தங்கவேலு (K. A. Thangavelu)(இறப்பு: 28 செப்டம்பர், 1994[1]) 1950 முதல் 1970 வரை தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகராவார். டணால் தங்கவேலு என்று பரவலாக அழைக்கப்படுபவர். இவருடைய துணைவியார், எம். சரோஜாவுடன் இணைந்து நடித்த கல்யாண பரிசு திரைப்படம் புகழ்பெற்றது. இவர் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியுடன் இணைந்து நடித்த தில்லானா மோகனாம்பாள், இவரை மேலும் புகழ் பெறச் செய்தது.
இல்வாழ்க்கை
நடிகர் கே. ஏ. தங்கவேலுவும், எம். சரோஜாவும் இணையராக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ஆம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தனர்.
நடித்த திரைப்படங்கள்
1950 - 1959
- சிங்காரி (1951)
- அமரகவி (1952)
- கலியுகம் (1952)
- பணம் (1952)
- திரும்பிப் பார் (1952)
- அன்பு (1953)
- பணக்காரி (1953)
- இல்லற ஜோதி (1954)
- சுகம் எங்கே (1954)
- நண்பன் (1954)
- பணம் படுத்தும் பாடு (1954)
- பொன்வயல் (1954)
- போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
- விளையாட்டுப் பிள்ளை (1954)
- வைரமாலை (1954)
- உலகம் பலவிதம் (1955)
- எல்லாம் இன்பமயம் (1955)
- கதாநாயகி (திரைப்படம்) (1955)
- குலேபகாவலி (1955)
- கோடீஸ்வரன் (1955)
- கோமதியின் காதலன் (1955)
- செல்லப்பிள்ளை (1955)
- மகேஸ்வரி (1955)
- மங்கையர் திலகம் (1955)
- மேதாவிகள் (1955)
- மிஸ்ஸியம்மா (1955)
- அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1955)
- ரம்பையின் காதல் (1956) - கதைத் தலைவன்
- அமரதீபம் (1956)
- காலம் மாறிப்போச்சு (1956)
- குடும்பவிளக்கு (1956)
- நல்ல வீடு (1956)
- நாக பஞ்சமி (1956)
- மர்ம வீரன் (1956)
- மாதர் குல மாணிக்கம் (1956)
- அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)
- அம்பிகாபதி (1957)
- எங்கள் வீட்டு மகாலட்சுமி (1957)
- கற்புக்கரசி (1957)
- சக்கரவர்த்தி திருமகள் (1957)
- சௌபாக்கியவதி (1957)
- நீலமலைத் திருடன் (1957)
- பக்த மார்க்கண்டேயா (1957)
- பாக்யவதி (1957)
- மல்லிகா (1957)
- மாயா பஜார் (1957)
- வணங்காமுடி (1957)
- உத்தம புத்திரன் (1958)
- கடன் வாங்கி கல்யாணம் (1958)
- கன்னியின் சபதம் (1958)
- காத்தவராயன் (1958)
- செஞ்சுலக்ஷ்மி (1958)
- நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)
- மனமுள்ள மறுதாரம் (1958)
- மாங்கல்ய பாக்கியம் (1958)
- வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
- கல்யாண பரிசு (1959)
- தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959)
- நான் சொல்லும் ரகசியம் (1959)
- மஞ்சள் மகிமை (1959)
1960 - 1969
- அடுத்த வீட்டுப் பெண் (1960)
- அன்புக்கோர் அண்ணி (1960)
- இரும்புத்திரை (1960)
- கடவுளின் குழந்தை (1960)
- கைதி கண்ணாயிரம் (1960)
- கைராசி (1960)
- தங்கம் மனசு தங்கம் (1960)
- தங்கரத்தினம் (1960)
- தெய்வப்பிறவி (1960)
- நான் கண்ட சொர்க்கம் (1960)
- பாட்டாளியின் வெற்றி (1960)
- புதிய பாதை (1960)
- மீண்ட சொர்க்கம் (1960)
- அரசிளங்குமரி (1961)
- திருடாதே (1961)
- பாசமலர் (1961)
- எங்க வீட்டுப் பெண் (1965)
- உயிர் மேல் ஆசை (1967)
- ராஜாத்தி (1967)
- தில்லானா மோகனாம்பாள் (1968)
- ஹரிச்சந்திரா (1968)
- நம் நாடு (1969)
1970 - 1979
- வியட்நாம் வீடு (1970)
- அருட்பெருஞ்ஜோதி (1971)
மேற்கோள்கள்
- ↑ "த இந்து நாளிதழில்" இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105034202/http://www.hindu.com/fr/2005/07/08/stories/2005070800730300.htm.