கற்புக்கரசி
கற்புக்கரசி | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | எம். சோமசுந்தரம் |
கதை | சிவ சுந்தரம் |
திரைக்கதை | ஏ. எஸ். ஏ. சாமி அரு. இராமநாதன் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் சாவித்திரி எம். என். நம்பியார் எம். கே. ராதா ஜி. வரலட்சுமி கே. ஏ. தங்கவேலு |
ஒளிப்பதிவு | பி. ராமசாமி |
படத்தொகுப்பு | கே. கோவிந்தசாமி |
கலையகம் | நெப்டியூன் ஸ்டுடியோஸ் ரேவதி ஸ்டுடியோஸ் |
விநியோகம் | ஜூபிடர் பிக்சர்ஸ் |
வெளியீடு | 14 ஜூன் 1957[1] |
ஓட்டம் | 137 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கற்புக்கரசி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். கே. ராதா, சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
திரைக்கதைச் சுருக்கம்
ஒரு தேவ கன்னிகையான சசிகலாவை, 'தான் அடைய வேண்டும்' என ஒரு மந்திரவாதி விரும்புகிறான். மன்னராக இருக்கும் ஒருவரை, அவரது மகன், ஒரு கிரகண தினத்தில் கொல்ல வைத்தால், சசிகலாவை 'தான் அடையலாம்' என மந்திரவாதிக்குத் தெரிய வருகிறது.
வஜ்ரபுரி மன்னரான ஜெயசீலர், வேட்டைக்குச் சென்ற இடத்தில், சந்திரிகா என்ற ஏழைப் பெண்ணைக் காதலித்து, அவளை மணம் செய்கிறார். சந்திரிகா 'ராணி' ஆனதைக் கண்டு பொறாமை அடைந்த அவளது சிற்றன்னை சிங்காரி, மந்திரவாதியின் உதவியினால், தன் மகள் மோகனாவை, சந்திரிகா போல் உருமாற்றி, மகாராணி இடத்தில் அமர்த்தி விடுகிறாள். நிஜச் சந்திரிகா, மோகனாவாக உருமாற்றப்பட்டு, பிரதாபனைப் பெற்றெடுக்கிறாள். போலி மகாராணிக்கு, ஜெகவீரன், மகனாகப் பிறக்கிறான். மந்திரவாதி, ஜெகவீரனுக்கு ஆசானாக இருந்து, அவன் தந்தையைக் கொல்லும் வகையில் வளர்த்து வருகிறான்.
பிரதாபன், தன் நண்பன் சிலம்பனோடு நகருக்கு வருகிறான். மந்திரியின் மகளான மஞ்சுளாவின் காதலைப் பெறுகிறான். ஒரு மதம் பிடித்த யானையை அடக்கி, மன்னரின் அன்பையும், ஜெகவீரனின் விரோதத்தையும் சம்பாதிக்கிறான்.
பல மந்திர, தந்திரங்கள், தடைகள் என எல்லாவற்றையும் முறியடித்து, பிரதாபன், தான் உண்மையில் இளவரசன் என்பதை நிலைநாட்டி, மஞ்சுளாவைத் திருமணம் செய்கிறான்.[3]
நடிகர்கள்
நடிகர்கள் பட்டியல், கற்புக்கரசி பாட்டுப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது.[3]
- ஜெமினி கணேசன் - இளவரசன் பிரதாபன்
- எம். என். நம்பியார் - இளவரசன் ஜெகதீரன்
- ஆர். பாலசுப்பிரமணியம் - மந்திரவாதி
- எம். கே. இராதா - வஜ்ரபுரி மன்னன், பிரதாபனின் தந்தை
- கே. ஏ. தங்கவேலு - சிலம்பன், பிரதாபனின் நண்பன்
- பி. எஸ். வெங்கடாசலம் - சச்சிதானந்த யோகி
- பி. பி. இரங்காச்சாரி - முனிவர்
- ஆர். முத்துராமன் - வேடுவர் தலைவன்
- ஜி. வரலட்சுமி - சந்திரிகா, பிரதாபனின் தாய்
- சாவித்திரி - மஞ்சுளா
- ஈ. வி. சரோஜா - சசிகலா
- எம். சரோஜா - பங்கஜம்
- எஸ். மோகனா - மோகனா
- கே. ஆர். செல்லம் - சிங்காரி, மோகனாவின் தாய்
- எஸ். ரேவதி - மாயக்கார ராணி
தயாரிப்புக்குழு
இந்தப் பட்டியல், 'கற்புக்கரசி' பாட்டுப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது.[3]
- ஒளிப்படம் = சத்யம், கே. அருணாச்சலம்
- ப்ராசசிங் = பி. ஜி. ஷின்டே (பிலிம் சென்டர்)
- ஒலிப்பதிவு = ஏ. கோவிந்தசாமி, வி. சி. சேகர்
- நடனப்பயிற்சி = பி. எஸ். கோபாலகிருஷ்ணன், கே. என். தண்டாயுதபாணி, சோகன் லால்
- வாட்சண்டைப் பயிற்சி = வி. பி. பலராமன்
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், ஏ. மருதகாசி, உடுமலை நாராயண கவி ஆகியோர் இயற்றினார்கள். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி, கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடினர். பி. பி. ஸ்ரீநிவாஸ், எம். எல். வசந்தகுமாரி இருவரும் பாடிப் பிரபலமான கனியோ, பாகோ, கற்கண்டோ... பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை.
வரிசை எண் |
பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு(m:ss) |
---|---|---|---|---|
1 | கனியா கன்னியா வாழ்வில் இன்பம்.. | டி. எம். சௌந்தரராஜன் & ஜிக்கி | 03:28 | |
2 | நல்வாக்கு நீ கொடடி.. | எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. ஜி. ரத்னமாலா | 03:31 | |
3 | செல்லக் கிளியே அல்லிக் குளமே.. | ஏ. பி. கோமளா | 01:50 | |
4 | ஆடும் பொன்னே ஆசைக் கண்ணே.. | கே. ஜமுனாராணி | 01:00 | |
5 | அன்பே ஆண்டவன் ஆகும்.. | சீர்காழி கோவிந்தராஜன் | 01:00 | |
6 | எனக்கொரு மனக்குறை அகற்றிடல் வேண்டும்.. | எஸ். சி. கிருஷ்ணன் | 00:25 | |
7 | தூங்காது, கண் தூங்காது.. | டி. எம். சௌந்தரராஜன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 01:45 |
8 | தத்தக்க பித்தக்க நாலு காலு.. | சீர்காழி கோவிந்தராஜன் & பி. லீலா | 02:00 | |
9 | காயமே இது மெய்யடா.. | டி. எம். சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 02:40 |
10 | அம்பிகாபதி செய்த பிழை.. | டி. எம். சௌந்தரராஜன் | 01:45 | |
11 | விழியோடு விளையாடும்.. | எம். எல். வசந்தகுமாரி & பி. லீலா | ஏ. மருதகாசி | 06:22 |
12 | இல்லாத அதிசயமா இருக்குதடி.. | ஏ. பி. கோமளா & கே. ஜமுனாராணி | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 02:50 |
13 | மருந்தோ மருந்து நாட்டு வைத்தியர்.. | டி. எம். சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன் | 01:42 | |
14 | புது வாழ்வும் பிரிந்தவர் கூடினால்.. | கே. ஜமுனாராணி | 00:50 | |
15 | இதய வானிலே உதயமானதே.. | டி. எம். சௌந்தரராஜன் & ஜிக்கி | 01:59 | |
16 | கனியோ பாகோ கற்கண்டோ.. | பி. பி. ஸ்ரீநிவாஸ் & எம். எல். வசந்தகுமாரி | உடுமலை நாராயண கவி | 03:42 |
17 | எல்லை மீறுதே மனம் துள்ளி ஆடுதே.. | கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா & ஏ. ஜி. ரத்னமாலா | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 04:30 |
உசாத்துணை
- ↑ 1.0 1.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 4 டிசம்பர் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161204033325/http://www.lakshmansruthi.com/cineprofiles/1957-cinedetails5.asp.
- ↑ "karpukarasi movie". gomolo இம் மூலத்தில் இருந்து 2012-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120316224532/http://www.gomolo.com/karpukarasi-movie-cast-crew/9222. பார்த்த நாள்: 2016-12-04.
- ↑ 3.0 3.1 3.2 கற்புக்கரசி பாட்டுப்புத்தகம். சாந்தி பிரஸ், சென்னை-1.