ஏ. பி. கோமளா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏ. பி. கோமளா
ஏ. பி. கோமளா.jpg
பின்னணித் தகவல்கள்
பிறப்பு28 ஆகத்து 1934 (1934-08-28) (அகவை 90)
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகி
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)வாய்ப்பாட்டு
இசைத்துறையில்1949–1973

ஏ. பி. கோமளா (A. P. Komala, பிறப்பு: 28 ஆகத்து 1934)[1] தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.

பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள்‎, பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._பி._கோமளா&oldid=8783" இருந்து மீள்விக்கப்பட்டது