ஆர். பாலசுப்பிரமணியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வேதாள உலகம் (1948) திரைப்படத்தில் ஆர். பாலசுப்பிரமணியம்

ஆர். பாலசுப்பிரமணியம் (R. Balasubramaniam) தமிழ் நாடக, திரைப்பட நடிகராவார். இவர் 1930கள் முதல் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

பாலசுப்பிரமணியம் தமிழ்நாடு, சுவாமிமலையில் பிறந்தவர்.[1] தஞ்சாவூர் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து, கும்பகோணத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியப் பணியுடன் கும்பகோணத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த வாணி விலாச சபையின் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார்.[1] பட்டாபிராம சாத்திரியார் இராமாயணத்தை பகுதி பகுதியாக நாடகமாக்கி நடத்தி வந்த போது பாலசுப்பிரமணியம் சீதையாக நடித்து வந்தார். ஏ. ராஜகோபால் செட்டியார் இராமனாக நடித்து வந்தார். சில காலத்திலேயே பாலசுப்பிரமணியம் கம்சன், இராவணன் போன்ற வேறு வேடங்களிலும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.[1]

பாலசுப்பிரமணியத்தின் நாடகத்தைப் பார்த்த சிறீராமுலு நாயுடு துகாராம் (1938) திரைப்படத்தில் மும்பாஜியாக நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். முசிரி சுப்பிரமணிய ஐயர் இதில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாலசுப்பிரமணியம் இராகமாலிகையில் ஒரு பாடலும் பாடினார்.[1] இதன் பின்னர் சீதா ஜனனம், ரம்பையின் காதல், வேதாள உலகம்[2], மனோன்மணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இறுதியாக 1964 இல் வெளிவந்த கர்ணன் திரைப்படத்திலும், பின்னர் 1971 இல் வெளிவந்த ஆதிபராசக்தி திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

ஆர். பாலசுப்பிரமணியம் ராஜசூயம் (1942) திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதி, நடித்திருந்தார்.[3]

நடித்த திரைப்படங்கள்

  1. ராஜா தேசிங்கு (1936)
  2. பிரகலாதா (1939)
  3. வேதவதி (1941)
  4. சுபத்ரா அர்ஜூனா (1941)
  5. ராஜசூயம் (1942)
  6. தமிழறியும் பெருமாள் (1942)
  7. ஹரிச்சந்திரா (1944)
  8. துளசி ஜலந்தர் (1947)
  9. கடகம் (1947)
  10. பொன்னருவி (1947)
  11. மோகினி (1948)
  12. வேதாள உலகம் (1948)
  13. திருமழிசை ஆழ்வார் (1948)
  14. கிருஷ்ண விஜயம் (1950)
  15. பாரிஜாதம் (1950)
  16. லைலா மஜ்னு (1950)
  17. பொன்முடி (1950)
  18. நால்வர் (1953)
  19. சொர்க்க வாசல் (1954)
  20. கனவு (1954)
  21. கற்புக்கரசி (1957)
  22. தாய் மகளுக்கு கட்டிய தாலி (1959)
  23. தங்கப்பதுமை (1959)
  24. குறவஞ்சி (1960)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 மாரதன் (சனவரி 1949). "நடிக திலகம் ஆர். பாலசுப்பிரமணியம்". பேசும் படம்: பக். 98-108. 
  2. ராண்டார் கை. "Vedhala Ulagam 1948". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2016.
  3. ராண்டார் கை. "Rajasuyam (1942)". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 13 செப்டம்பர் 2016.
"https://tamilar.wiki/index.php?title=ஆர்._பாலசுப்பிரமணியம்&oldid=21475" இருந்து மீள்விக்கப்பட்டது