செல்லப்பிள்ளை
செல்லப்பிள்ளை | |
---|---|
இயக்கம் | எம். வி. ராமன் |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் ஏவிஎம் புரொடக்சன்ஸ் |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | டி. எஸ். பாலையா கே. ஆர். ராமசாமி கே. ஏ. தங்கவேலு ஜாவர் சீதாராமன் பி. ஆர். பந்துலு சாவித்திரி பி. கண்ணாம்பா பண்டரிபாய் |
வெளியீடு | சூன் 24, 1955 |
நீளம் | 15332 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செல்லப்பிள்ளை (Chella Pillai) 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படத்தை ஆவிச்சி மெய்யப்பன் தனது ஏவிஎம் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்[1][2]. இத்திரைப்படத்தில் க. ரா. இராமசாமி, சாவித்திரி,[3] பி. ஆர். பந்துலு, ப. கண்ணாம்பா மற்றும் டி. எஸ். பாலையா போன்றவர்கள் முன்னணி கதபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் பண்டரிபாய், கே. ஏ. தங்கவேலு, ஜாவர் சீதாராமன் மற்றும் காகா இராதாகிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.[4][5][6] ஜாவர் சீதாராமன் எழுத்தில், ஆர்.சுதர்சனம் இசையில் வெளிவந்துள்ளது.[7] தெலுங்கு மொழியில் "வதின" (1955) என்ற பெயரில் வெளிவந்துள்ளது. ஒரு அனாதைக் குழந்தையை வளர்ப்பதில் உள்ள முக்கியத்துவம், குறிப்பாக அக்குழந்தைக்கு செல்லம் அளிப்பதா? அல்லது ஒழுக்கத்தைக் கற்றுத்தருவதா?, என்பதுதான் "செல்லப் பிள்ளை" படத்தின் முக்கிய கருவாகும்.[1][8]
கதை
மணி (க. ரா. இராமசாமி) அவரது சகோதரர் (பி. ஆர். பந்துலு) மற்றும் அவரது மனைவி (ப. கண்ணாம்பா) மூலம் வளர்க்கப்பட்ட ஒரு அனாதை. அவர் செய்யும் அனைத்து மோசமான செயல்களுக்கும், சிறிய குற்றங்களையும் கண்டிக்காமல் வளர்த்து வருவதால் எவ்வித தொல்லையும் இல்லாமல் இருக்கிறார். விரைவில், அவர் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஒரு பொறுப்பற்ற இளைஞனாக வளர்கிறார். அவர் ஒரு இளம் நடன பெண் லலிதாவைச் (சாவித்ரியை) சந்திக்கிறார், தான் ஒரு திரைப்பட நட்சத்திரமாக மாறுவதே அவரது கனவாகும். மணி திரைப்படங்களில் அவளை அறிமுகப்படுத்துவதாக வாக்களிக்கிறார். இதற்கிடையில், மணியின் குடும்பம் அவருக்கு சாதாரண குடும்பப் பெண்ணான (பண்டரிபாயை) திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறது. மணி, லலிதாவுடன் திரைப்படத்தை தயாரிப்பதற்கு வீட்டை விட்டு சென்று விடுகிறார். படத் தயாரிப்புகளுக்கு பணம் தேவை என்பதால், தனது சகோதரர் பரமசிவம் வேலை செய்யும் கடையில் திருடுகிறார். பின்னர் கள்ளப் பணம் அச்சிடும் கும்பலுடன் அவருக்கு தொடர்பு ஏற்படுகிறது. மணி பரமசிவத்திற்கு உதவுவதற்காக கள்ளப் பணத்தை அச்சிட்டு தனது சகோதரனுக்கு அளிக்கும் போது காவல் துறையினர் பரமசிவத்தை கைது செய்கிறனர். தவறான வழியில் செல்லும் கதாநாயகன் எப்படி தனது வழிகளிலிருந்து மீண்டு வருகிறாரென்பது திரைப்படத்தின் மற்ற பகுதிகள் கூறுகிறது.[1]
நடிகர்கள்
- க. ரா. இராமசாமி - மணி
- சாவித்திரி - நடனப் பெண்மணி லலிதா
- பி. ஆர். பந்துலு - பரமசிவம் , மணியின் சகோதரன்
- ப. கண்ணாம்பா - கல்யாணி, மணியின் அண்ணி
- டி. எஸ். பாலையா -யாமன், திரைப்பட இயக்குனர்
- பண்டரிபாய் - அஞ்சலை -மணியின் மனைவி
- கே. ஏ. தங்கவேலு - அவதாரம், லலிதாவின் சகோதரன்
- ஜாவர் சீதாராமன் -மடபோவா, படத்தயாரிப்பாளர்
- காகா இராதாகிருஷ்ணன்
- பி. டி. சம்பந்தம் - முருகன்
- சி. வி. வி. பந்துலு - தீன தயாளன்
- வாதிராஜ் - நலன், மணியின் நண்பன்
மறு ஆக்கம்
செல்லப்பிள்ளை தெலுங்கு மொழியில் "வதின" என்ற பெயரில் அதே வருடத்தில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நாயகனாக நடித்து வெளிவந்தது. விசயவாடவில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.[9]
விமர்சனம்
ராண்டார் கை தி இந்துவில் "செல்லப்பிள்ளை" இக்காலத்திற்கேற்ற ஒரு வித்தியாசமான கதையை கொண்டுள்ளது, மேலும் க. ரா. இராமசாமி மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என எழுதினார்.[10] ப. கண்ணாம்பா, பி. ஆர். பந்துலு , சாவித்திரி போன்றோர் குணசித்திர பாத்திரங்களிலும் , மேலும், திரைப்பட இயக்குனர் யமனாக டி. எஸ். பாலையா , அவதாரமாக கே. ஏ. தங்கவேலு போன்றவர்கள் நகைச்சுவைக் காட்சிகளிலும் நன்றாக சிரிக்க வைக்கின்றனர்.[1]
ஒலித்தொகுப்பு
செல்லப்பிள்ளை | |
---|---|
ஒலித்தொகுப்பு
| |
வெளியீடு | 1955 |
ஒலிப்பதிவு | 1955 |
இசைப் பாணி | அசல் ஒலிப்பதிவு[11] |
நீளம் | 31:19 |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | ஆர். சுதர்சனம் |
இசையமைப்பு ஆர். சுதர்சனம், பாடல்களை உடுமலை நாராயணகவி பாடல்களை எழுத, கே. பி. காமாட்சி, கு. மா. பாலசுப்பிரமணியம் மற்றும், வி.சீதாராமன் (தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும். பின்னணிப் பாடகர்), டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா ,ஜிக்கி, டி. எஸ்.பகவதி மற்றும் எம். எஸ். இராஜேஸ்வரி போன்றோர் பாடியிருந்தனர்,[12] இப்படத்தின் பெரும்பாலான பாடல்கள் இந்தி மொழியில் வெளிவந்த பிரபல பாடல்களை தழுவியே இசையமைக்கப்பட்டது.[13]
எண் | பாடல் | பாடியோர் | எழுதியோர் | நீளம்(m:ss) |
---|---|---|---|---|
1 | "தன்னாலே வரும் காசு" | பி. சுசீலா | 03:02 | |
2 | "சிற்பியின் கை படாத" | தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் | 02:41 | |
3 | "மதன எழில் ராஜா" (வசனம்) | ஜிக்கி & வசனங்கள் தமிழ்த் திரைப்படத்துறையும் திராவிட அரசியலும் | கு. மா. பாலசுப்ரமணியம்[14] | 06:07 |
4 | "நாடு நடக்கிற" | டி. எம். சௌந்தரராஜன் & எம். எஸ். இராஜேஸ்வரி | 03:07 | |
5 | "ஓ நிகரில்லாத" | ஜிக்கி | 03:19 | |
6 | "ஆராரோ ஆராரோ....கோயில் காளை" "நீ பாப்பா" |
டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் (பாடகர்) & பி. சுசீலா |
03:30 | |
7 | "போடனும் குல்லா போடனும்" | டி. எம். சௌந்தரராஜன் | 03:10 | |
8 | "ஆறாத துயரம்" | டி. எஸ். பகவதி | 03:09 | |
9 | "ஆன்ந்தம் இங்கே இருக்கு" | டி. எம். சௌந்தரராஜன் & ஜிக்கி | 03:09 | |
10 | "நடிக்கும் போது" | டி. எம். சௌந்தரராஜன் | 03:22 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 Guy, Randor (25 September 2009). "Chella Pillai (1955)". http://www.thehindu.com/features/cinema/Blast-from-the-past/article16883226.ece. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ "Chellapillai". spicyonion. http://spicyonion.com/movie/chellapillai/. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ http://tamilrasigan.com/chellapillai-1955-tamil-movies-online-watch-free/
- ↑ "Chellapillai 1955 Tamil Movie". filmiclub. http://filmiclub.com/movie/chellapillai-1955-tamil-movie. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ ராண்டார் கை (25 செப்டம்பர் 2009). "Chella Pillai 1955". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/chella-pillai-1955/article3021964.ece. பார்த்த நாள்: 15 அக்டோபர் 2016.
- ↑ "Chellapillai Movie". gomolo இம் மூலத்தில் இருந்து 2016-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161006031830/http://www.gomolo.com/chellapillai-movie/9166. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ "Chella Pillai(Celluloid)". movies.syzygy இம் மூலத்தில் இருந்து 2016-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160921015654/http://movies.syzygy.in/censor/chella-pillai-celluloid. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ "Cycle Stand - Akkineni Nageswara Rao's 100 days film list". idlebrain இம் மூலத்தில் இருந்து 26 December 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121226174052/http://www.idlebrain.com/trade/records/anr100days.html. பார்த்த நாள்: 2016-07-05.
- ↑ "Nadippisai Pulavar K. R. Ramasamy Paadalgal". mayyam. http://mayyam.com/phpBB2/viewtopic.php?t=6276&sid=75a9ea15756133fca3b0f646086b75cb. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ "Chellapillai (Original Motion Picture Soundtrack)". itunes.apple. https://itunes.apple.com/nz/album/chellapillai-original-motion/id915143968. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ "Unforgettable Melodies of Susheela". gsvfilms.blospot. http://gsvfilms.blogspot.in/2009/06/unforgettable-melodies-of-susheela.html#.V3dc_bh97IU. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ "Chellapillai Songs". gaana இம் மூலத்தில் இருந்து 2016-08-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160816160320/http://gaana.com/album/chellapillai. பார்த்த நாள்: 2016-07-04.
- ↑ Kavignar Pon. Sellamuthu. Kavignar Ku. Ma. Balasubramaniam Thirai Isai Padalgal. Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). Second edition November 2016. பக். 86.