ஜாவர் சீதாராமன்
ஜாவர் சீதாராமன் (Javar Seetharaman, பிறப்பு : 1919 இறப்பு : 1971) தமிழ்ப் புதின எழுத்தாளரும், திரைப்படக் கதை, வசன எழுத்தாளரும், நடிகரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
திருச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட சீதாராமனின் தந்தை நடேசன் ஐயர்–அபிராமி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை நடேசன் ஐயர் பிரபல வழக்குரைஞராக இருந்தவர். சீதாராமனும் சட்டம் படித்து எம்.ஏ., பி.எல்., பட்டமும் பெற்றார். ஆனாலும் அவர் அத்துறைக்குச் செல்லாமல் திரைப்படவுலகில் நுழைந்தார்.
திரைப்படத் துறையில்
1947 ஆம் ஆண்டு வெளிவந்த மிஸ் மாலினி என்னும் படத்தில் அறிமுகமானார். கே. ராம்நாத் இயக்கிய ஏழை படும் பாடு திரைப்படத்தில் "ஜாவர்" என்ற முரட்டுக் காவல்துறை அதிகாரி வேடத்தில் சீதாராமன் நடித்தார். அன்றில் இருந்து அவர் "ஜாவர்' சீதாராமன் எனப் பிரபலமானார்.
ஏவிஎம் தயாரித்த அந்த நாள் படத்தின் திரைக்கதை-வசனத்தை எழுதியதோடு, துப்பறியும் காவல்துறை அதிகாரியாக ஜாவர் சீதாராமன் நடித்தார். தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா, குழந்தையும் தெய்வமும், ராமு முதலிய படங்களுக்கு திரைக்கதை-வசனம் எழுதினார். இவை பெரும் வெற்றியும் பெற்றன.
வீனஸ் பிக்சர்சுக்காக "பிராஸ் பாட்டில்" என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற கற்பனைக் கதையை உருவாக்கினார். படம் வசூலில் வரலாறு படைத்தது.
எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்தும் கதை, வசனம் எழுதியுள்ளார்.
மேலும் நடிகைகள் வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, தேவிகா, கே. ஆர். விஜயா, பாரதி, காஞ்சனா ஆகிய கதாநாயகிகளுடன் தந்தையாகவும் கௌரவ கதாபத்திரத்திலும் நடித்துள்ளார்.
மேலும் 60களில் பிற்பகுதியில் நடித்த நடிகைகளான தேவிகா, கே. ஆர். விஜயா, சரோஜாதேவி ஆகிய நடிகைகளுடன் இறுதிவரை நண்பராகவும் அவர்கள் நடிப்பிற்க்கு பின் நின்று பல ஆலோசனைகள் கூறியுள்ளார்.
இதில் தனது தோழியான நடிகை சரோஜாதேவி அவர்கள் திருமணத்திற்கு பிறகு என் தம்பி படத்தில் நடிக்கும் போது கொஞ்சம் குண்டாக தொந்தியும், தொப்பைமாக இருந்ததால். அதை சரி செய்யும் விதமாக வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஷாட்பெல்ட் சரோஜாதேவி வயிற்றில் அணிந்து அழகான தோற்றத்தில் நடிக்க வைத்தார்.
எழுத்தாளராக
பிரபல வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதினார். குமுதத்தில் இவர் எழுதிய "மின்னல் மழை மோகினி', "உடல் பொருள் ஆனந்தி', "பணம் பெண் பாசம்', "நானே நான்" ஆகிய தொடர்கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தமிழ்ப்படங்களில் நடிகராக
- மிஸ் மாலினி (1947) - நடிகர்
- சந்திரலேகா (1948) - நடிகர் (வீரசிம்மன் மெய் காப்பாளர்)
- என் கணவர் (1948) - நடிகர் சரோஜாவர்
- ஏழை படும் பாடு (1950) - நடிகர்
- மர்ம யோகி (1951) - நடிகர் [1]
- பணக்காரி (1953) - நடிகர் [2]
- மனோகரா (1954) - நடிகர் (சத்யசீலன்)
- அந்த நாள் (1954) - நடிகா் (சி.ஐ.டி அதிகாாி சிவானந்தம்), திரைக்கதை, வசனம்
- விடுதலை (1954) - நடிகா்
- செல்லப்பிள்ளை (1955) - நடிகா், திரைக்கதை [3]
- மணமகன் தேவை (1957) - நடிகா் (கல்லூரி தலைமை ஆசிரியர்)
- கன்னியின் சபதம் (1958) - நடிகர்
- வீரபாண்டிய கட்டபொம்மன் (1959) - நடிகர் (மேஜர் பேனர்மேன்)
- அதிசயப் பெண் (1959) - திரைக்கதை, வசனம்
- எங்கள் குலதேவி (1959) - நடிகா் (சந்தோசம்)
- இரும்பு திரை (1960) - நடிகர் (வழக்கறிஞர்)
- குழந்தைகள் கண்ட குடியரசு (1960) நடிகர் - (மன்னர்)
- களத்தூர் கண்ணம்மா (1960) - நடிகா் (ஜமீன்தாா் சிங்காரம்), திரைக்கதை
- கைதி கண்ணாயிரம் (1960) - நடிகர் (காவல் அதிகாரி)
- பார்த்திபன் கனவு (1960) - நடிகர் (சிவாச்சாரியார்)
- ஆளுக்கொரு வீடு (1960) - நடிகர் (பாதிரியார்)
- கடவுளின் குழந்தை (1960) - நடிகர் (முத்தையா பிள்ளை)
- குமார ராஜா (1961) - நடிகா்
- கானல் நீர் (1961) - நடிகர்
- வளர் பிறை (1962) - நடிகர் (வரதராஜன்) கதை, திரைக்கதை
- ஆலயமணி (1962) - திரைக்கதை, வசனம்
- ஆனந்த ஜோதி (1963) - நடிகா் (சுந்தரம் சி.ஐ.டி காவல் அதிகாாி), கதை, திரைக்கதை
- வானம்பாடி (1963) - நடிகா் (டாக்டா் சிவசங்கா்)
- ஆண்டவன் கட்டளை (1964) - நடிகா் (கல்லூரி தலைமை ஆசிாியா்) திரைக்கதை, வசனம்
- கர்ணன் (1964) - நடிகா் (பீஷ்மர்)
- குழந்தையும் தெய்வமும் (1965) - திரைக்கதை
- ராமு (1966) - திரைக்கதை
- பட்டணத்தில் பூதம் (1967) - நடிகர் (பூதம்), வசனம்
- பட்டத்து ராணி (1967) - கதை, திரைக்கதை, வசனம்
- உயர்ந்த மனிதன் (1968) - திரைக்கதை, வசனம்
- என் தம்பி (1968) - நடிகா் (கருணாகர பூபதி)
- தங்கச் சுரங்கம் (1969) - நடிகர் (ஆரோக்கியசாமி)
- சிவந்த மண் (1969) - நடிகா் (மன்னா்)
- பணம் பெண் பாசம் (1980) - கதை
உசாத்துணை
- ஜனரஞ்சக எழுத்தாளர்' ஜாவர் சீதாராமன்[தொடர்பிழந்த இணைப்பு], ஆர். கனகராஜ், தினமணி, சனவரி 22, 2012
மேற்கோள்கள்
- ↑ "Blast from the past - Marmayogi 1951". தி இந்து. 14 March 2008. Archived from the original on 17 மார்ச் 2008. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Blast from the past -Panakkari 1953". தி இந்து. 27 December 2008. Archived from the original on 7 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 5 டிசம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Blast from the past - Chella Pillai (1955)". தி இந்து. 24 September 2009. Archived from the original on 12 December 2009. பார்க்கப்பட்ட நாள் 5 December 2013.