மிஸ் மாலினி
மிஸ் மாலினி | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | கொத்தமங்கலம் சுப்பு |
தயாரிப்பு | ராம்நாத் ஜெமினி ஸ்டூடியோஸ் |
கதை | கதை ஆர். கே. நாராயணன் |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் பரூர் எஸ். அனந்தராமன் பி. ஏ. சுப்பையா பிள்ளை |
நடிப்பு | கொத்தமங்கலம் சுப்பு ஜாவர் சீதாராமன் ஜெமினி கணேசன் வி. கோபாலகிருஷ்ணன் புஷ்பவல்லி சூர்ய பிரபா சுந்தரி பாய் எஸ். வரலட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 26, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 13924 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மிஸ் மாலினி என்பது 1947 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் நையாண்டித் திரைப்படமாகும். இப்படத்தை கொத்தமங்கலம் சுப்பு திரைக்கதை உரையாடல் எழுதி இயக்க, கே. ராம்நாத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் புஷ்பவல்லி, எம். எஸ். சுந்தரி பாய், கொத்தமங்கலம் சுப்புஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். ஜெமினி கணேசன், ஜாவர் சீதாராமன் ஆகியோர் சிறிய துணை வேடங்களில் நடித்து படத்தில் அறிமுகமானார்கள்.[1] இப்படத்தின் கதையானது புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆர். கே. நாராயணன் எழுதிய ஆங்கலப் புதினமான மிஸ்டர் சம்பத் ஆகும்.[2] இத்திரைப்படம் மாலினி (புஷ்பவல்லி) என்ற ஏழைப் பெண்ணை மையமாகக் கொண்டது, அவர் தன் நடிகை தோழி சுந்தரியின் (எம். எஸ். சுந்தரி பாய்) நாடக நிறுவனமான கலா மந்திரத்தில் சேர்ந்து பிரபலமாகிறார். பின்னர் அவர் 'பிட் நோட்டிஸ்' சம்பத்துடன் (கொத்தமங்கலம் சுப்பு) பழகி அவர் சேர்கையால் அனைத்தையும் இழந்து மீண்டும் கலாமந்திரத்துக்குத் திரும்புகிறார்.
இரண்டாம் உலகப் போரின் போது மதராசின் (தற்கால சென்னை) வாழ்க்கையின் அம்சங்களை மிஸ் மாலினி கேலி படம் செய்கிறது. மேலும் நாராயண் எழுதிய இந்த ஒரு கதைதான் திரைப்படமாக உருவானது. இது 26 செப்டம்பர் 1947 இல் வெளியிடப்பட்டது. மேலும் தென்னிந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்ட முதல் அசைப்பட குறும்படமான சினிமா கதம்பம் இப்படத்தில் இடம்பெற்று திரையரங்குகளில் வந்தது. மிஸ் மாலினி அறிவுஜீவிகளால் பாராட்டப்பட்டது; சம்பத் வேடத்தில் நடித்து சுப்புவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. எஸ். ராஜேஸ்வர ராவ் மற்றும் பாரூர் எஸ். அனந்தராமன் இசையமைத்த பாடல்கள் பிரபலமாகி, தமிழ் திரையுலகில் இத்திரைப்படம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றது. மிஸ் மாலினி, ஆர்.கே. நாராயணின் ஆரம்பகால கதைக் கூறுகளைக் கொண்டதாக இருந்தது. அது அவருடைய சில பிற்கால புதினங்களில் மீண்டும் வந்தது. 1949 ஆம் ஆண்டு புதினமான மிஸ்டர். சம்பத் - தி பிரிண்டர் ஆஃப் மால்குடி என மீண்டும் எழுதப்பட்டது, இதையொட்டி எஸ். எஸ். வாசன் இயக்கிய மிஸ்டர் சம்பத் (1952) என்ற இந்தித் திரைப்படமாகவும், சோ ராமசாமி இயக்கிய 1972 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமாகவும் மாற்றப்பட்டது. மிஸ் மாலினியின் எந்த பதிப்பும் தற்போது எஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை என்றாலும், அதனால் இது தொலைந்து போன திரைப்படமாக ஆனது. இப்படத்தின் கலைப் பொருட்களில் இதன் பாடல்கள், சில நிலைப்படங்கள், செய்தித்தாள் விளம்பரங்கள் ஆகியவை அடங்கி உள்ளன.
நடிகர்கள்
- சம்பத்தாக கொத்தமங்கலம் சுப்பு
- மாலினியாக புஷ்பவல்லி
- சுந்தரியாக எம். எஸ். சுந்தரி பாய்
- நிர்மளாவாக சூரியப்பிரபா[3]
- இயக்குநராக என். சீதாராமன்
- உதவி இயக்குநராக ஆர். ஜி.
- அலுவலக எடுபிடியாக கோபாலகிருட்டிணன்[4][5]
- புடவை வியாபாரியாக எல். நாராண ராவ்[6]
- மாலினியின் தந்தையாக பி. ஏ. சம்பத் பிள்ளை
- பொன்னமாவாக எஸ். வரலட்சுமி [3]
பாடல்கள்
பாடல்கள் ஆங்கில அகரவரிசை படி வரிசைபடுத்தபட்டுள்ளன[7] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அபயம் தந்து அருள் புரிவாயாம்" | டி. வி. ரத்தினம் | 2:52 | |||||||
2. | "ஜெகமே ஒரு சித்திர சாலை" | டி. வி. ரத்தினம் | 3:15 | |||||||
3. | "காலையில எழுந்திருந்தா கட்டையோட அழுகணும்" | எம். எஸ். சுந்தரி பாய் | 6:06 | |||||||
4. | "குளிக்கணும் களிக்கணும்" | பி. லீலா | 1:58 | |||||||
5. | "மயிலாப்பூர் வக்கீலாத்து" | டி. வி. ரத்தினம் | 2:24 | |||||||
6. | "பாடும் ரேடியோ" | டி. வி. ரத்தினம் | 6:24 | |||||||
7. | "செந்தமிழ் நாடு செழித்திடவே" | டி. வி. ரத்தினம் | 2:43 | |||||||
8. | "சிறீ சரசுவதி" | டி. வி. ரத்தினம் | 3:24 |
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (25 சூலை 2008). "Miss Malini 1947". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023159.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர்.
- ↑ 3.0 3.1 Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (in Tamil). Chennai: Sivagami Publishers. Archived from the original on 3 May 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Randor Guy (13 July 2013). "Thulasimaadam (1963)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170503094727/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/thulasimaadam-1963/article4911895.ece.
- ↑ Guy 2016, ப. 193–194.
- ↑ Randor Guy (6 April 1991). "Miss Malini: Fine acting and good music". இந்தியன் எக்சுபிரசு: pp. 19 இம் மூலத்தில் இருந்து 25 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171025074519/https://lh3.googleusercontent.com/tiGMAnQMP-z0JeD91_hcZzpg-Av3HhQOnqoTJKf1L4lmkcr8NSA9benDIz24muYOW7NFGfj405VNV3Y=w1440-h791.
- ↑ "Miss Malini (மிஸ் மாலினி)". Inbaminge. Archived from the original on 14 April 2017. பார்க்கப்பட்ட நாள் 14 April 2017.