குமார ராஜா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குமார ராஜா
சுவரிதழ்
இயக்கம்ஜி. கே. ராமு
தயாரிப்புகே. முனிரத்தினம்
சிவகாமி பிக்சர்ஸ்
திரைக்கதைமுரசொலி மாறன்
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புடி. எஸ். பாலையா
எம். என். ராஜம்
வெளியீடு21 ஏப்ரல் 1961[1]
நீளம்15824 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமார ராஜா என்பது 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஜே. பி. சந்திரபாபு, டி. எஸ். பாலையா, எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] இப்படம் 21 ஏப்ரல் 1961 அன்று வெளியானது.[3]

கதை

ஒரு செல்வந்தருக்கு (டி. எஸ். பாலையா) மகன் குமாரராஜா (ஜே. பி. சந்திரபாபு) தனது பணத்தையும் நேரத்தையும் பெண்களுடன் பாடி நடனமாடுவதில் செலவிடுகிறார். தந்தை அவருக்கு அடக்கமான பெண்ணை (எம். என். ராஜம்) திருமணம் செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அவருக்கு நடனக் காரியான சூர்யகலா மீது காதல் உள்ளது. மகனை எப்படி இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரப்படுகிறார் என்பதுதான் மீதிக் கதையாகும்.[2]

நடிப்பு

இந்தப் பட்டியல் திரைக் களஞ்சியம் - பாகம் 2ல் இருந்து ஏடுக்கபட்டது.[4]

தயாரிப்பு

பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த சந்திரபாபு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கு ₹50,000 (2023 இல் ₹4.4 மில்லியன் அல்லது US$55,000) முதல் ₹60,000 (ரூ. 5.3 மில்லியன் அல்லது US$66,000) வரை சம்பளம் வழங்கப்பட்ட நேரத்தில், இந்தப் படத்திற்காக சந்திரபாபு ₹100,000 (2023 இல் ₹8.8 மில்லியன் அல்லது US$110,000) பெற்றார்.[4] இப்படம் 1960 ஆம் ஆண்டுக்கு முன்பே தயாரிப்பில் இருந்தது.[5]

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் டி. ஆர். பாப்பா. பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அ. மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கே. டி. சந்தானம் ஆகியோர்.[6] பாடகர்: ஜே. பி. சந்திரபாபு. பின்னணி பாடியவர்கள்: வி. என். சுந்தரம், பி. லீலா, கே. ஜமுனாராணி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர். இப்படத்திற்காக சந்திரபாபு பாடிய ஆணுண்டு பாட, பெண்ணுண்டு ஆட கண்ணுண்டு காதலின் கதைகள் பேசவே என்ற மேற்கத்திய வடிவிலான பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் அப்போது வரவேற்பை பெற்றது.

எண் பாடல் பாடியவர்கள் பாடலாசிரியர் கால அளவு
1 ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே பி. லீலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 03:12
2 கண்டாலே போதும், காதல் வந்து மோதும் குழுவினருடன் கே.ஜமுனாராணி
3 மணமகளாக வரும் மங்கை எவளோ வி. என். சுந்தரம் 02:54
4 நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம் பி. லீலா 03:50
5 என்னைப் பார்த்த கண்ணு வேறு பெண்ணைப் பார்க்குமா ஜே. பி. சந்திரபாபு & கே. ஜமுனாராணி
6 மூடினாலும் திறந்தாலும் கே. டி. சந்தானம்
7 ஒண்ணுமே புரியலே உலகத்திலே ஜே. பி. சந்திரபாபு 03:20
8 ஆணுண்டு பாட, பெண்ணுண்டு ஆட ஜே. பி. சந்திரபாபு & பி. லீலா 03:00
9 அங்காடிக் கடை வீதியிலே சூலமங்கலம் ராஜலட்சுமி & ஏ. ஜி. ரத்னமாலா தஞ்சை இராமையா தாஸ்
10 கண்ணழகி பாமா, என்முன்னே வாம்மா கே. ஜமுனாராணி அ. மருதகாசி

வரவேற்பு

தயாரிப்பாளர்களே திரைக்கதையைப் பற்றி கவலைப்படாதபோது, பார்வையாளர் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று கல்கியின் காந்தன் எழுதினார்.[7]

மேற்கோள்கள்

  1. "1961 – குமார ராஜா – சிவகாமி பிக்சர்ஸ்" [1961 – Kumara Raja – Sivakami Pictures]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 8 March 2017. பார்க்கப்பட்ட நாள் 8 March 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Randor Guy (3 March 2012). "Kumara Raja 1961". தி இந்து இம் மூலத்தில் இருந்து 20 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130820043537/http://www.thehindu.com/features/cinema/kumara-raja-1961/article2957403.ece. 
  3. "Kumara Raja". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 21 April 1961. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19610421&printsec=frontpage&hl=en. 
  4. 4.0 4.1 Neelamegam, G. (2016). Thiraikalanjiyam — Part 2 (in Tamil). Chennai: Manivasagar Publishers. p. 20.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Kumara Raja". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 13 April 1960. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19600413&printsec=frontpage&hl=en. 
  6. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 20.
"https://tamilar.wiki/index.php?title=குமார_ராஜா&oldid=32431" இருந்து மீள்விக்கப்பட்டது