மர்ம வீரன்
Jump to navigation
Jump to search
மர்ம வீரன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
தயாரிப்பு | ஸ்ரீராம் யூபிலே பிலிம்ஸ் |
கதை | ஏ. எல். நாராயணன் |
இசை | எஸ். வேதா |
நடிப்பு | ஸ்ரீராம் வைஜெயந்திமாலா டி. எஸ். பாலையா கே. ஏ. தங்கவேலு சந்திரபாபு பி. எஸ். வீரப்பா சிவாஜி கணேசன் ஜெமினி கணேசன் ராஜசுலோச்சனா எம். என். ராஜம் |
வெளியீடு | ஆகத்து 3, 1956 |
ஓட்டம் | . |
நீளம் | 15401 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மர்ம வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமானது அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் (Johnston McCulley) புகழ்பெற்ற ‘ஸோரோ’ வரிசை புதின சாகசக் கதாபாத்திரமான டான் டியாகோவை நினைவூட்டும் வேடத்தில் மகேந்திரனாகவும் பரம்வீர் ஆகவும் இரண்டு பரிமாணங்களில் ஸ்ரீராம் நடித்து தானே படத்தையும் தயாரித்தார். இந்த சாகசப் படத்தில் வைஜெயந்திமாலா நாயகியாக நடித்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என். டி. ராமராவ், வி. கே. ராமசாமி, எஸ். வி. ரங்கராவ், ஆர். நாகேஷ்வரராவ் என அன்று திரையில் ஒளிர்ந்த பல பெரிய நடிகர்களும் ஸ்ரீராமின் நட்புக்காக இப்படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம், நான்கு வாரங்களுக்குமேல் ஓடாததால் பெரும் இழப்பை அளித்தது.[1]
மேற்கோள்கள்
- ↑ பிரதீப் மாதவன் (6 அக்டோபர் 2017). "குறைவான படங்கள், நிறைவான நடிப்பு". கட்டுரை (தி இந்து தமிழ்). http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19802428.ece. பார்த்த நாள்: 6 அக்டோபர் 2017.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1956 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- வைஜெயந்திமாலா நடித்த திரைப்படங்கள்
- பி. எஸ். வீரப்பா நடித்த திரைப்படங்கள்
- டி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்
- வேதா இசையமைத்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- சந்திரபாபு நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்