1956
Jump to navigation
Jump to search
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1956 (MCMLI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
- ஜனவரி 26 - 1956 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இத்தாலியில் Cortina d'Ampezzoஇல் தொடங்கின.
- மார்ச் 2தநூஊநுபபூ - பிரான்சிடம் இருந்து மொரோக்கோ விடுதலையை அறிவித்தது.
- மார்ச் 20 - பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது.
- மார்ச் 23 - பாகிஸ்தான் உலகின் முதலாவது இஸ்லாமியக் குடியரசாகியது.
- ஜூன் 1 - விச்சிஸ்லாவ் மலோட்டொவ் (Vyacheslav Molotov) சோவியத் ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
- ஜூன் 5 - இலங்கையில் தமிழர் படுகொலைகள், 1956: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராகக் காலி முகத்திடலில் சத்தியாக்கிரக முறையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை குழப்பும் விதத்தில் சிங்கள வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டனர்.
- ஜூன் 23 - கமால் அப்துல் நாசர் எகிப்தின் இரண்டாவது அதிபரானார்.
- சூலை 10 - இலங்கை, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
- அக்டோபர் 14 - இந்திய தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
- அக்டோபர் 23 - ரஷ்யாவுக்கு எதிரான ஹங்கேரியப் புரட்சி தொடங்கியது.
- அக்டோபர் 26 - ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது.
- நவம்பர் 14 - ஹங்கேரியில் போர் முடிவுக்கு வந்தது.
- நவம்பர் 22 - ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்பேர்ணில் தொடங்கின.
- நவம்பர் 23 - இந்தியா தமிழ் நாடு 1956 அரியலூர் தொடருந்து விபத்து 142 பேர் மரணம்.
- டிசம்பர் 2 - பிடல் காஸ்ட்ரோவும் அவரது ஆதரவாளர்களும் கியூபாவை படகில் சென்றடைந்தனர்.
பிறப்புகள்
- மே 13 - ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர், இந்திய ஆன்மீகவாதி.
- சூலை 9 - டொம் ஹாங்க்ஸ், அமெரிக்க ஹாலிவுட் நடிகர்
இறப்புகள்
- பெப்ரவரி 17 - எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (பி. 1891)
- அக்டோபர் 13 - தமிழ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வழியுருத்திய தியாகி சங்கரலிங்கனார்.
- திசம்பர் 6 - அம்பேத்கர், இந்திய அரசியல் தலைவர் (பி. 1891)
நோபல் பரிசுகள்
- இயற்பியல் - வில்லியம் ஷொக்லி (William Bradford Shockley), ஜோன் பார்டீன் (John Bardeen), வோல்டர் பிரட்டின் (Walter Houser Brattain)
- வேதியியல் - சிரில் ஹின்ஷெல்வூட் (Cyril Norman Hinshelwood), நிக்கலாய் சிமியோனவ் (Nikolay Nikolaevich Semenov)
- மருத்துவம் - அண்ட்ரே கூர்னண்ட் (André Frédéric Cournand), வேர்ணர் ஃபோர்ஸ்மன் (Werner Forssmann), டிக்கின்சன் றிச்சர்ட்ஸ் (Dickinson W. Richards)
- இலக்கியம் - ஜுவான் ஜிமேனெஸ் (Juan Ramón Jiménez)
- அமைதி - விருது வழங்கப்படவில்லை
இவற்றையும் பார்க்கவும்
1956 நாட்காட்டி
வார்ப்புரு:நாட்காட்டி ஞாயிறு நெட்டாண்டு
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
மேற்கோள்கள்
- ↑ The Bulletin, volumes 4-5. Presse- und Informationsamt der Bundesregierung. 1956. p. 8.
- ↑
- ↑ "Morocco profile – Timeline" (in en-GB). BBC News. 2018-04-24. https://www.bbc.com/news/world-africa-14123260.