கதாநாயகி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கதாநாயகி
சுவரிதழ்
இயக்கம்கே. ராம்நாத்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மோடேர்ன் தியேட்டர்ஸ்
கதைகதை டி. கே. கோவிந்தன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
கே. ஏ. தங்கவேலு
பி. டி. சம்மந்தம்
ஏ. கருணாநிதி
பத்மினி
எம். என். ராஜம்
ராகினி
ஆர். மாலதி
வெளியீடுபெப்ரவரி 19, 1955
நீளம்16799 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதாநாயகி என்பது 1955 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1955, பெப்ரவரி 19 அன்று வெளியானது. இப்படத்தின் கதை 1951 ஆம் ஆண்டு வெளியான ஹேப்பி கோ லவ்லி திரைப்படத்தின் தாக்கத்தால் உருவானது.

கதை

நாடகக் குழு பின்னணியில் நடக்கும் கதை இதுவாகும். நாடகத்தில் நடிக்கும் ஆசையில் பத்மினி வீட்டை விட்டு வெளியேறி நாடக்க் குழு ஒன்றில் சேருகிறாள். நாடக் குழுவின் உரிமையாளரான டி. ஆர். இராமச்சந்திரன் அவளைக் காதலிக்கிறார். அவள் பல சிக்கல்களை எதிர்கொள்கிறாள். அந்தச் சிக்கல்களை அவளும் அவளது காதலனும் எப்படி தீர்க்கிறார்கள் என்பது கதையின் மீதியாகும்.

நடிப்பு

பாடல்கள்

ஜி. ராமநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை சுரதா, கண்ணதாசன், தஞ்சை இராமையாதாஸ் ஆகியோர் எழுதினர்.[1]

வ.எண். பாடல் பாடகர்/கள் எழுதியவர் நீளம் (நி:நொ)
1 "கொடி நாட்டுவேன், வெற்றிக் கொடி நாட்டுவேன்" பி. லீலா 04:57
2 "அதிர்ஷ்டம் அது இஷ்டமாக வருவது" பி. லீலா 03:09
3 "அம்மாம்மா ஆகாது ஆவேசம் கூடாது" எஸ். சி. கிருஷ்ணன், கே. இராணி 03:12
4 "சி பசி பசி பரம எழைகளின்" எஸ். சி. கிருஷ்ணன், கே. இராணி 03:22
5 "இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்" எஸ். சி. கிருஷ்ணன் 03:06
6 "அதோ வருகிரான்" (சத்தியவன் நாடகம்) எஸ். சி. கிருஷ்ணன் 04:05
7 "மாலை ஒன்று கையில்" (கண்ணகி நாடகம்) கே. ஜமுனா ராணி, இராதா ஜெயலட்சுமி 12:04
8 "பெரும் பணத்திலே பிறந்து" பி. லீலா, சுவர்ணலதா 03:35
9 "துரையே இளமை பாராய்" ஏ. எம். இராஜா, கே. ஜமுனா ராணி 05:48
10 "கற்பனை கனவிலே நான் ஒரு" ஏ. எம். இராஜா, சுவர்ணலதா 03:20
11 "ஆலோலம் ஆலோலம்" (ஸ்ரீ வள்ளி நாடகம்) எஸ். சி. கிருஷ்ணன், சுவர்ணலதா 02:42

வெளியீடும் வரவேற்ப்பும்

கதாநாயகி 1955 பெப்ரவரி 19 அன்று வெளியானது.[2] வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, சில விமர்சகர்கள் "கணிக்கக்கூடிய" கதைக்களம் கொண்டதாக படத்தை கருதினாலும், படம் வெற்றிபெறவில்லை.[3]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கதாநாயகி_(திரைப்படம்)&oldid=31819" இருந்து மீள்விக்கப்பட்டது