மரகதம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மரகதம்
சுவரிதழ்
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
கதைமூலக்கதை: டி. எஸ். துரைசாமி, திரைக்கதை: எஸ். பாலச்சந்தர்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
மனோரமா
சந்திரபாபு
டி. எஸ். பாலையா
எஸ். பாலச்சந்தர்
டி. எஸ். துரைராஜ்
ஓ. ஏ. கே. தேவர்
சி. கே. சரஸ்வதி நாராயணபிள்ளை, சந்தானம், கன்னையா, பக்கிரிசாமி, நடராஜன், ஞானம், முத்துலட்சுமி, லட்சுமிபிரபா, காமாட்சி, லட்சுமிராஜம்,
வெளியீடு1959
ஓட்டம்203 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மரகதம் (Maragatham) என்பது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் குற்றவியல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். இதை எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடுவின் தயாரித்து, இணைந்து எழுதி இயக்கிய படமாகும்.[1] வெளிவந்த இதன் கதை டி. எஸ். துரைசாமியின் கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற புதினத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, டி. எஸ். பாலையா, ஜே. பி. சந்திரபாபு, மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 21 ஆகத்து 1959 அன்று வெளியானது.

கதை

கருங்குயில் குன்றத்து ஜமீன்தார் மருமமான முறையில் கொல்லப்படுகிறார். கொலைப் பழி ஜமீனின் தம்பி, மார மார்த்தாண்டன் (சுந்தரம் பாலச்சந்தர்) மீது விழுகிறது. அவர் தன் மனைவி கற்பகவள்ளியை (சந்தியா) விட்டுவிட்டு, மகள் மரகதத்துடன் (பத்மினி) இலங்கைக்குத் தப்பிச் சென்று, அங்கு வாழ்ந்து வருகிறார். இலங்கையில் கொள்ளையர்களால் கடத்தப்படும் கருங்குயில் குன்றத்து இளைய ஜமீன் வரேந்திரனை (சிவாஜி கணேசன்) மீட்கிறார் மரகதம். அவர் சகோதரி மகள் என்பது தெரியாமலேயே வரேந்திரனுக்கு காதல் ஏற்படுகிறது. பிறகு உண்மை தெரியவருகிறது. இதன் பிறகு ஜமீனைக் கொன்ற கொலையாளியை கண்டறிய வேலைக்காரனாக மாறுவேடம் போடுகிறார் வரேந்திரன். கொலையாளியை கண்டுபிடிப்பதே கதையின் முடிவாகும்.

நடிப்பு

நடிகர்கள்

நடிகைகள்

தயாரிப்பு

மரகதம் படத்தை எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கினார், அவர் அதை பட்சிராஜா ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் தயாரித்தார்.[2] டி. எஸ். துரைசாமியின் கருங்குயில் குன்றத்துக் கொலை என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. நாயுடு திரைக்கதை எழுத, முரசொலி மாறன் உரையாடல் எழுதினார். சைலன் போஸ் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஏ. கே. சேகர் கலை இயக்கத்தையும்[3], படத்தொகுப்பை மேற்கொண்டார்.[2]

பாடல்கள்

சுத்தானந்த பாரதியார், பாபநாசம் சிவன், ரா. பாலு, கு. மா. பாலசுப்பிரமணியம், மருதகாசி ஆகியோரின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.[4]

இந்தப் படத்தில் இடம்பெற்ற குங்குமப் பூவே கொஞ்சும்புறாவே பாடல் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த பாடல் குறித்து சர்ச்சை எழுந்தது. சபாஷ் மீனா படத்திற்காக டி. ஜி. லிங்கப்பா இந்த பாடலுக்கு மெட்டு அமைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்தின் பாடலைப் பாட சந்திரபாபு மறுத்துவிட்டார். பின்னர் அவர் இந்த மெட்டை சுப்பையா நாயுடுவிடம் கொடுத்து இந்தப் படத்தில் சேர்த்ததாகச் சொல்கிறார்கள்.[5]

எண் பாடல் பாடகர் வரிகள் நீளம்
1 "குங்குமப் பூவே கொஞ்சும்புறாவே" ஜே. பி. சந்திரபாபு, கே. ஜமுனா ராணி கு. மா. பாலசுப்பிரமணியம் 03.27
2 "ஆடினால் நடனம் ஆடினால்" ராதா ஜெயலட்சுமி ரா. பாலு 03.12
3 "கண்ணுக்குள்ள உன்னைப் பாரு" டி. எம். சௌந்தரராஜன், ராதா ஜெயலட்சுமி ரா. பாலு 03.32
4 "காவிரி பாயும்" டி. எம். சௌந்தரராஜன் ரா. பாலு 03.27
5 "மாலை மயங்குகிற நேரம்" ராதா ஜெயலட்சுமி சுத்தானந்த பாரதியார் 04.08
6 "பன்னகை தவழும் மதி முகமோ" டி. எம். சௌந்தரராஜன், ராதா ஜெயலட்சுமி பாபநாசம் சிவன் 03.54
7 "பச்சைக் கிளி போல" பி. லீலா, கே. ஜமுனா ராணி

வெளியீடு

மரகதம் 21 ஆகத்து 1959 அன்று வெளியாகி,[2] வணிக ரீதியாக தோல்வியடைந்தது.[6]

மேற்கோள்கள்

  1. 2.0 2.1 2.2 "51-60" இம் மூலத்தில் இருந்து 3 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303220445/http://www.nadigarthilagam.com/filmographyp6.htm. 
  2. Randor Guy (29 April 2010). "Maragatham (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 10 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200710134232/https://www.thehindu.com/features/cinema/Maragatham-1959/article16373412.ece. 
  3. "Maragatham" இம் மூலத்தில் இருந்து 10 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200710132739/https://gaana.com/album/maragatham. 
  4. மணியன், பி.ஜி.எஸ்.. ""சங்கீத அய்யா" எஸ்.எம். சுப்பையா நாயுடு – 9" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 10 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200710132250/https://www.thamizhstudio.com/Koodu/thodargal_4_60.php. 
  5. Swaminathan, G. (2 July 2020). "Print to celluloid: From 'Kalvanin Kadhali' and 'Mullum Malaram' to 'Ponniyin Selvan'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200703191656/https://www.thehindu.com/entertainment/movies/print-to-celluloid-from-kalvanin-kadhali-and-mullum-malaram-to-ponniyin-selvan/article31971471.ece. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மரகதம்_(திரைப்படம்)&oldid=36265" இருந்து மீள்விக்கப்பட்டது