காட்டு ரோஜா
காட்டு ரோஜா | |
---|---|
DVD Cover | |
இயக்கம் | ஏ.சுப்பாராவ் |
தயாரிப்பு | மாடர்ன் தியேட்டர்ஸ் |
கதை | எம்.எஸ்.சோலைமணி என்.பத்மநாபன் ஜி.தேவராஜன் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் பத்மினி ஆர். எஸ். மனோகர் எம். ஆர். ராதா கே. ஏ. தங்கவேலு வி. கே. ராமசாமி |
ஒளிப்பதிவு | ஆர். சம்பத் |
படத்தொகுப்பு | எல். பாலு |
கலையகம் | மாடர்ன் தியேட்டர்ஸ் |
விநியோகம் | மாடர்ன் தியேட்டர்ஸ் |
வெளியீடு | 5 ஏப்ரல் 1963 |
ஓட்டம் | 131 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்l |
காட்டு ரோஜா 1963 இல் வெளிவந்த குடும்பப்பாங்கான தமிழ்த் திரைப்படமாகும்.இதை ஏ.சுப்பராராவ் இயக்கியுள்ளார். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனம் இதை தயாரித்துள்ளது. எம்.எஸ்.சோலைமணி எழுதிய கதைக்கு என்.பத்மநாபன் மற்றும் ஜி.தேவராஜன் ஆகிய இருவரும் வசனங்களை எழுதியுள்ளனர்.இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார்.[1] இப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.[2]
கதைச்சுருக்கம்
பாஸ்கரன் (எஸ். எஸ். ராஜேந்திரன்) என்கிற அப்பாவி இளைஞன் அவரது வயோதிக பெற்றோர்களான தந்தை பொன்னம்பல முதலியார் (வி.கே.ராமசாமி) தாயார் வடிவு (ஜி. வரலட்சுமி) மற்றும் அவரது உறவினர் குழந்தைவேலுவுடன் (கே. ஏ. தங்கவேலு) தனியாக வாழ்ந்து வருகிறார். அவனது வயதான பெற்றோர்கள் தங்களது குடும்ப நண்பர் சண்முக முதலியாரின் (பி.டி.சம்பந்தம்) மகள் பேபியை (ஜி. சகுந்தலா) பாஸ்கரனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். இதற்காக பாஸ்கரனும். குழந்தைவேலுவும் சண்முக முதலியாரின் நீலகிரியுலுள்ள அவரது வீட்டிற்கு வருகின்றனர். வரும் வழியில் அவர்கள் பயணித்த மகிழுந்து பிர்ச்சனைக்குள்ளாகிறது. குழந்தைவேலு தண்ணிரைத் தேடிச் செல்கிறான். இதற்கிடையில் பாஸ்கரன் ஓட்டிச்சென்ற மகிழுந்து விபத்திற்கு உள்ளாகிறது. அங்கே வந்த கிராமத்து இளம்பெண் பொன்னி (பத்மினி) அவனைக் காப்பாற்றி அவனது காயத்திற்கு மருந்திடுகிறாள்.
பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்கிறார்கள். இதற்கிடையில்,குழந்தைவேலு சண்முக முதலியார் வீட்டிற்கு செல்கிறான், அங்கே அவன் முதலியார் மகள் பேபியை கண்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதல் வயப்படுகிறார்கள். பின்னர் குழந்தைவேலு பாஸ்கரனைத் தேடும் முயற்சியில் ஈடுபாட்டு கடைசியில் அவனை கண்டுபிடிக்கிறான். பாஸ்கரனோ காட்டு ரோஜா, காட்டு ரோஜா எனப் புலம்பியவாறே இருக்கிறான். பாஸகரனின் பெற்றோர்களும் குழந்தைவேலுவும் அவன் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள். இதற்கிடையில் சோமு(ஆர்.எஸ். மனோகர்) பொன்னியின் வீட்டிற்கு வருகிறான்.சாகும் தருவாயில் இருக்கும் பொன்னியின் தந்தை (டி.எஸ்.முத்தையா) அவளை சோமுவின் கரங்களில் ஒப்படைக்கிறார்.
பின்னர், பொன்னம்பலம் என்பவர் வீட்டு வேலைக்காரியாக பொன்னி சேர்கிறாள். இதற்கிடையில், பொன்னம்பலத்தின் குடும்பம் அவரது மகன் மூலம் சில பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. தற்செயலாக, பாஸ்கரும்,பொன்னியும் மீண்டும் சந்திக்கிறார்கள். அவளை சந்திக்கும் வரை அவனது இதயம் மிகவும் கலங்கியிருந்தது. இதற்கிடையில், அவரது நெருங்கிய உறவினர் தங்கதுரை (எம். ஆர். ராதா) அவனது சகோதரி புஷ்பாவை (புஷ்பலதா) பாஸ்கருக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறான், இதற்காக அவன் ஒரு இரகசிய திட்டத்தை தீட்டுகிறான். பாஸ்கரை தவறான வழியில் நடத்திச் சென்று அவனை மதுவை அருந்த வைக்கிறான். இதைக்கண்ட பாஸ்கரனின் தாயார் தனது மகனின் அணுகுமுறையைப் பற்றி கவலைப்படுகிறார், பாஸ்கர் குடிபோதையில் பொன்னியைத் பலவந்தப்படுத்த முயற்சிக்கிறான்.
பிறகு பொன்னிக்கு சோமுவுடனான் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். பொன்னி தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறாள். மலையுச்சிக்குச் சென்று பாஸ்கர் அவளை காப்பாற்றுகிறான். பாஸ்கர் தான் பொன்னியின் முன்னாள் காதலன் என்ற உண்மை சோமுவிற்குத் தெரிய வருகிறது. முடிவில் பொன்னியும் பாஸ்கரனும் திருமணம் செய்து கொள்ளப் போகும் சமயத்தில், அங்கே வந்த தங்கதுரை ,பாஸ்கரனுக்கும் தனது தங்கை புஷ்பாவிற்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்றது எனவும் அதன் மூலம் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது எனவும் அனைவரையும் நம்ப வைத்து அத்திருமணத்தை தடுத்து நிறுத்துகிறான். அந்தப் பெண் குழந்தைக்கு தந்தை யார் என்றக் கேள்வி எழுகிறது. இதற்கிடையில் தங்கதுரையால் ஏமாற்றமடைந்த பொன்னியின் தங்கை(பி.எஸ்.சரோஜா) அக்குழந்தையுடன் பாஸ்கரனின் மகிழுந்துவில் சென்று விடுகிறாள். பாஸ்கர் அவளைப் பின்தொடர்ந்து சென்று அக்குழந்தையைக் காப்பாற்றி தங்கதுரையிடம் ஒப்படைக்கிறான். தங்கதுரை பாஸ்கர்,புஷ்பா மற்றும் குழந்தை ஆகியயோரின் புகைப்படத்தை இணைத்து அக்குழந்தைக்கு பொன்னியும் ,பாஸ்கருமே தாய், தந்தை என நம்பவைக்கத் திட்டமிட்டுள்ளான். முடிவில் தங்கதுரை தனது தவறை உணர்ந்து குடும்பத்தை இணைக்கிறான். புஷ்பா சோமுவுடன் திருமணம் செய்து கொள்கிறாள்.
நடிகர்கள்
- பாஸ்கரனாக எஸ். எஸ். ராஜேந்திரன்
- பொன்னியாக பத்மினி
- தங்கதுரையாக எம். ஆர். ராதா
- சோமுவாக ஆர். எஸ். மனோகர்
- பொன்னம்பல முதலியாராக வி. கே. ராமசாமி
- குழந்தை வேலுவாக கே. ஏ. தங்கவேலு
- மற்றும் பலர்
படக்குழுவினர்
- இயக்குனர் = ஏ. சுப்பாராவ்
- கதை = எம். எஸ். சோலைமணி
- தயாரிப்பு = மாடர்ன் தியேட்டர்ஸ்
- இசை = கே. வி. மகாதேவன்
- கலை = பி. நாகராஜன்
- செயலாக்கம் = டி. பி. கிருஷ்ணமூர்த்தி
- ஒலி = பி.எஸ்.நரசிம்மன்
- நடனம் = ஹீராலால், சோப்ரா மற்றும் ஜெயராம்[3]
பாடல்கள்
இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்துள்ளார்.[4] கவிஞர் கண்ணதாசன் மற்றும் பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.[5] பி. பி. சிறீனிவாசன் பாடிய "எந்த ஊர் என்றவனே" என்று கதாநாயகன் குடித்துவிட்டு பாடும் பாடல் வெகுவாக புகழ் பெற்றது.[6]
வ.எண் | பாடல் | பாடியவர் | எழுதியவர் | நீளம்(நி: வி) |
---|---|---|---|---|
1 | "ஏனடி ரோஜா" | பி. சுசீலா | 2:38 | |
2 | "கதவு திறந்ததா" | 4:04 | ||
3 | "வண்டொன்று வந்தது" | டி. எம். செளந்தரராஜன் பி. சுசீலா | கண்ணதாசன் | 3:52 |
4 | "சின்ன சின்னக் கண்ணனுக்கு" | டி. எம். செளந்தர்ராஜன் ஜமுனாராணி | 3:11 | |
5 | "எந்த ஊர் என்றவனே" | பி. பி. சீனிவாஸ் | 3:21 | |
6 | "என்னைப் பாரு பாரு" | ஜமுனாராணி | 3:31 | |
7 | "சின்ன சின்னக் கண்ணனுக்கு" (சோகம்) | பி. சுசீலா | 3:20 |
மேற்கோள்கள்
- ↑ http://tamilrasigan/kattu-roja-1963-tamil-movies-online-watch-free/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "kattu roja". spicyonion. http://spicyonion.com/movie/kattu-roja/. பார்த்த நாள்: 2015-12-21.
- ↑ "kattu roja movie synopsis plot story". gomolo இம் மூலத்தில் இருந்து 2015-12-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151225091057/http://www.gomolo.com/kattu-roja-movie-synopsis-plot-story/9445. பார்த்த நாள்: 2015-12-21.
- ↑ "kvmahadevan". indian heritage. http://www.indian-heritage.org/flmmusic/kvmahadevan.html. பார்த்த நாள்: 2015-12-23.
- ↑ "Kaatu Roja songs". tamiltunes. http://tamiltunes.com/Kaatu-Roja.html. பார்த்த நாள்: 2015-12-21.
- ↑ "kattu roja". youtube. https://www.youtube.com/watch?v=r7RBKsuBFmo. பார்த்த நாள்: 2015-12-23.