என்றும் அன்புடன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என்றும் அன்புடன்
Theatrical release poster
இயக்கம்ஆர். பாக்கியநாதன்
தயாரிப்புஜி. சரவணன்
டி. ஜி. தியாகராஜன்
கதைஆர். பாக்கியநாதன்
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
சித்தாரா
ஹீரா ராசகோபால்
ஒளிப்பதிவுஎம். எஸ். அண்ணாதுரை
படத்தொகுப்புஅனில் மல்நாட்
கலையகம்சத்ய ஜோதி படங்கள்
வெளியீடு14 ஆகத்து 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்றும் அன்புடன் (Endrum Anbudan) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான தமிழ் நாடக திரைப்படம் ஆகும். ஆர். பாக்கியநாதன் எழுதி இயக்கிய இப்படத்தில் முரளி, சித்தாரா, ஹீரா ராசகோபால் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார் .

நடிகர்கள்

தயாரிப்பு

என்றும் அன்புடன் படத்தை ஆர். பாக்யநாதன் எழுதி இயக்கியுள்ளார்.[1] சத்ய ஜோதி பிலிம்சின் பதாகையின் கீழ் ஜி. சரவணன் மற்றும் டி. ஜி. தியாகராஜன் ஆகியோர் தயாரித்தனர் . ஒளிப்பதிவை எம். எஸ். அண்ணாதுரை மேற்கொள்ள, படத்தொகுப்பை அனில் மல்நாட் மேற்கொண்டார் .

இசை

படத்திற்கான இசையை இளையராஜா அமைத்தார்.[2][3]

# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "சின்னஞ் சிறு"  வாலிஎஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "துள்ளித் திரிந்ததொரு"  ஆர். பாக்கியநாதன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "மஞ்சள் வெயில்"  பிறைசூடன்மனோ  
4. "நிலவு வந்தது"  ஆர். பாக்கியநாதன்மனோ, எஸ். ஜானகி  
5. "பவர் போச்சுதா"  வாலிமனோ  

வெளியீடு மற்றும் வரவேற்பு

என்றும் அன்புடன் 14 ஆகத்து 1992 இல் வெளியானது.[4] தி இந்தியன் எக்ஸ்பிரசின் அய்யப்பா பிரசாத் எழுதும்போது, " என்றும் அன்புடன் படத்தை அறிமுக இயக்குநராக எழுதி, இயக்கிய பாக்யநாதன் ஒரு சுவாரஸ்யமான கதைக்களத்தைக் கையாண்டுள்ளார். சித்தாராவும் முரளியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்".

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=என்றும்_அன்புடன்&oldid=31410" இருந்து மீள்விக்கப்பட்டது