பூவிழி வாசலிலே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பூவிழி வாசலிலே
குறுந்தகுடு அட்டைப்படம்
இயக்கம்ஃபாசில்
தயாரிப்புஇலட்சுமி பிரியா கம்பைன்சு
கதைஃபாசில்
கோகுல கிருஷ்ணா (வசனம்) சித்திக், லால், பாபு, பால்சன் (கதை உதவி)
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுஆனந்தகுட்டன்
படத்தொகுப்புடி. ஆர். சேகர்
கலையகம்இலட்சுமி பிரியா கம்பைன்சு
விநியோகம்இலட்சுமி பிரியா கம்பைன்சு
வெளியீடுசனவரி 14, 1987 (1987-01-14)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா இந்தியா
மொழிதமிழ்

பூவிழி வாசலிலே என்பது 1987 ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஃபாசில் இயக்கிய இத்திரைப்படத்தில் சத்யராஜ், சுஜிதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் பூவினு புதிய பூந்தென்னல் என்னும் மலையாள மொழித் திரைப்படத்தின் மீளுருவாக்கம் ஆகும்.[1][2]

வெளியீடு

1987 சனவரி 14 அன்று வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பட விமர்சகர்களாலும் பாராட்டு பெற்ற திரைப்படமாகும். இப்படம் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. இது சிறந்த வெற்றித் திரைப்படம் என அறிவிக்கப்பட்டது.

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்தின் பின்னணி இசை மற்றும் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா ஆவார். இப்படத்தின் ஆறு பாடல்களையும் இளையராஜா, கங்கை அமரன், முத்துலிங்கம், மற்றும் காமகோடியன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[3][4][5][6][7]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் நீளம் (நி:நொ)
1 "ஆட்டம் இங்கே" சித்ரா, மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா 4:27
2 "அண்ணே அண்ணே" மனோ 4:14
3 "சின்ன சின்ன ரோஜாப்பூவே" கே. ஜே. யேசுதாஸ் முத்துலிங்கம் 4:29
4 "ஒரு கிளியின்" (ஆண்) கே. ஜே. யேசுதாஸ் 4:35
5 "ஒரு கிளியின்" (பெண்) சித்ரா 4:31
6 "பாட்டு எங்கே" சித்ரா, மலேசியா வாசுதேவன் 4:27

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பூவிழி_வாசலிலே&oldid=35825" இருந்து மீள்விக்கப்பட்டது