தர்மபத்தினி (1986 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தர்மபத்தினி | |
---|---|
இயக்கம் | அமீர்ஜான் |
தயாரிப்பு | துர்கா தமிழ்மணி காமாட்சி தமிழ்மணி யசோதா தமிழ்மணி எஸ். ஆர். எம். சொக்கலிங்கம் |
கதை | கண்மணி சுப்பு (வசனம்) |
இசை | இளையராஜா |
நடிப்பு | கார்த்திக் ஜீவிதா |
ஒளிப்பதிவு | சி. எஸ். ரவிபாபு |
படத்தொகுப்பு | எஸ். எஸ். நசிர் |
கலையகம் | ஸ்ரீ சண்முகாலயா ஆர்ட்ஸ் |
வெளியீடு | 14 மார்ச்சு 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தர்மபத்தினி (Dharmapathni) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை அமீர்ஜான் இயக்கினார். இதில் கார்த்திக் மற்றும் ஜீவிதா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். இப்படம் தெலுங்கிலும், இந்தியிலும் மறுஆக்கத்தில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
- கார்த்திக்- காவல் ஆய்வாளர் பிரேம் குமார்
- ஜீவிதா - வித்யா
- கவுண்டமணி "பொதுப்பணி" பொன்னுசாமி
- ராதாரவி - டி.ஜே. ஜனார்த்தனன்
- பூர்ணம் விஸ்வநாதன் - கமலநாதன், ஓய்வுபெற்ற ஐ.ஜி
- சந்திரசேகர் - பிரபாகர்
- சார்லி - பாளையம் எம். எல். ஏ
- செந்தில் - பொன்னுசாமியின் உதவியாளர்
- விசு - வழக்கறிஞர் "விக்ஸ்" வரதராஜன்
- கிஷ்மு - அரசு வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி
பாடல்கள்
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1]. பாடல் வரிகளை வாலி, வைரமுத்து, கண்மணி சுப்பு, நா. காமராசன், சிதம்பரநாதன் ஆகியோர் இயற்றினர். "நான் தேடும்" பாடல் இந்தோளம் ராகத்தில் அமைக்கப்பட்டது.[2]
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் |
1 | "நான் தேடும் செவ்வந்திப்பூவிது" | இளையராஜா, எஸ். ஜானகி | கண்மணி சுப்பு |
2 | "காத்திருந்தேன் கணவா" | எஸ். ஜானகி | வைரமுத்து |
3 | "முத்தம் கட்டில் முத்தம்" | கே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா | சிதம்பரநாதன் |
4 | "சுமங்கலி பூஜை" | பி. சுசீலா, எஸ். பி. சைலஜா | வாலி |
5 | "மொட்டுதான் இது" | எஸ். ஜானகி | நா. காமராசன் |
மேற்கோள்கள்
- ↑ "Dharmapathini Tamil Film LP Vinyl Record by Ilayaraja" (in en-US). https://mossymart.com/product/dharmapathini-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/.
- ↑ Saravanan, T. (2013-09-20). "Ragas hit a high" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece.