கிஷ்மு
கிஷ்மு | |
---|---|
பிறப்பு | கிருஷ்ணமூர்த்தி 1947 தமிழ்நாடு |
இறப்பு | 10 நவம்பர் 1993 (அகவை 46) தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகர், எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், நாடக நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1982–1992 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | மணல் கயிறு சிதம்பர ரகசியம் சம்சாரம் அது மின்சாரம் வரவு நல்ல உறவு |
உறவினர்கள் | விசு |
கிஷ்மு (Kishmu, 1947 - 10 நவம்பர் 1993) என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் மேடை நடிகர் ஆவார். கிஷ்மு 1982 இல் விசு இயக்கிய மணல் கயிறு என்ற படத்தில் அறிமுகமானார். மணல் கயிறு, டௌரி கல்யாணம், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம் , திருமதி ஒரு வெகுமதி, காவலன் அவன் கோவலன், வரவு நல்ல உறவு ஆகிய திரைப்பங்களில் நடத்ததிற்காக குறிப்பிடப்படுகிறார்.
திரைப்பட வாழ்க்கை
நாடகத்துறையில் இருந்த கிஷ்மு தனது சகோதரர் விசுவுடன் நடிக்கத் தொடங்கினார். விசு இயக்கிய இரண்டாவது படமான மணல் கயிறு (1982) படத்தில் கிஷ்மு திரைப்பட நடிகராக அறிமுகமானார். இது விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியானவும் பாராட்டைப் பெற்றது. 1985 ஆம் ஆண்டில், கிஷ்மு அவள் சுமங்கலிதான் படத்தில் நடித்தார், 1986 ஆம் ஆண்டில் சம்சாரம் அது மின்சாரம் மற்றும் ஊமை விழிகள் ஆகியவற்றில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்தார். இவை இரண்டும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. இவரது ஆரம்ப கால நடிப்புப் தொழிலில், கிஷ்மு தனது சகோதரரின் படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் இறுதியில் மற்றவர்களின் படங்களிலும் நடித்தார். 1982 முதல் 1990 வரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.[1][2]
திரைப்படவியல்
இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1982 | மணல் கயிறு | கமலகண்ணன் | |
1983 | டௌரி கல்யாணம் | ராஜா கலவை | |
1983 | நாலு பேருக்கு நன்றி | ||
1984 | ராஜதந்திரம் | குழந்தைசாமி | |
1984 | வாய் சொல்லில் வீரனடி | ||
1985 | சிதம்பர ரகசியம் | காட்டமுத்து செட்டியார் | |
1985 | அவள் சுமங்கலிதான் | மருத்துவர் | |
1986 | சம்சாரம் அது மின்சாரம் | ஆல்பர்ட் பெர்னாண்டஸ் | |
1986 | ஊமை விழிகள் | கோத்தண்டராமன் | |
1987 | திருமதி ஒரு வெகுமதி | சத்தியமூர்த்தி | |
1987 | ஒரே ரத்தம் | மதவெறியர் | |
1988 | பெண்மணி அவள் கண்மணி | வடிவின் கணவர் | |
1988 | மாப்பிள்ளை சார் | ||
1988 | தாய் மேல் ஆணை | சர்க்கரை | |
1988 | ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | ஐஸ் மாமா | |
1990 | வரவு நல்ல உறவு | சந்திரசேகர் | |
1990 | வேடிக்கை என் வாடிக்கை | மத்ருபூதம் | |
1992 | உரிமை ஊஞ்சலாடுகிறது | கமலநாதன் |
- உதவி இயக்குநராக
- சகலகலா சம்மந்தி (1989)
குறிப்புகள்
- ↑ "Actor, director Visu dies at 75, funeral to be held on Monday". The Hindu. 22 March 2020.
- ↑ "படங்களில் பிசியாக இருந்தபோது சந்திரசேகருக்கு திருமணம் நடந்தது". Maalaimalar (in Tamil). 2016-08-02. பார்க்கப்பட்ட நாள் 2020-02-04.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)